2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

SLT-MOBITEL ‘Cash Bonanza’ இடமிருந்து பெருமளவு வெகுமதிகள்

Freelancer   / 2025 ஜனவரி 17 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த காலங்களில் மில்லியனயர்களை உருவாக்கியமைக்காக புகழ்பெற்றுள்ள SLT-MOBITEL இன் ‘Cash Bonanza’ தற்போது மேலும் பல வெகுமதிகளை வழங்க முன்வந்துள்ளது. ரூ. 12 மில்லியன் பரிசுத் தொகையிலிருந்து, புதிய மற்றும் ஏற்கனவே காணப்படும் மொபைல் வாடிக்கையாளர்களுக்கு பணப் பரிசுகளை வெல்வதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது.

ரூ. 100 எனும் சிறிய தொகையை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, ரீலோட்டை பயன்படுத்தி பிளான் ஒன்றை செயற்படுத்திக் கொள்ளல் அல்லது SLT-MOBITEL மொபைல் இணைப்பை பயன்படுத்தி கட்டணப் பட்டியல் கொடுப்பனவை மேற்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு இந்த வெற்றியாளர் தெரிவில் உள்வாங்கப்படுவதற்கான தகைமை வழங்கப்படுவதுடன்,      கவர்ச்சியான வெகுமதிகளை வெல்வதற்கான வாய்ப்பையும் வழங்கும். 2025 ஜனவரி 1ஆம் திகதி முதல் 2025 ஜுன் 30 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும் Cash Bonanza இனால், வெற்றியீட்டுவதற்கு பல்வேறு வாய்ப்புகள் வழங்கப்படும். இதில், மாபெரும் இறுதிப்பரிசு வெற்றியீட்டும் வாய்ப்பு வழங்கப்படுவதுடன், அதிர்ஷ்டசாலி வெற்றியாளருக்கு ரூ. 3 மில்லியன் பெறுமதியான பணப் பரிசை ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒரு தடவையும், ரூ. 1 மில்லியன் பரிசுத் தொகை மாதாந்தம் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பும் வழங்கப்படும்.

நாடு முழுவதிலும் விறுவிறுப்பான நிகழ்வுகள் மற்றும் செயற்பாடுகளுடன் முன்னெடுக்கப்படும் 'Cash Bonanza 2025' வெறும் வெகுமதிகள் என்பதற்கு அப்பால் செல்வதாக அமைந்திருக்கும். இந்தத் திட்டம் மக்களுக்கு தொடர்புகளை பேணல், விநோத அம்சங்களில் ஈடுபடல் மற்றும் வெற்றியீட்டுவதற்கான வாய்ப்பை வழங்கும். தொலைத்தொடர்பாடல் துறையில், இலங்கையின் மாபெரும் வாடிக்கையாளர் வெகுமதித் திட்டமாக அறியப்படுவதுடன், Cash Bonanza இனால் அனைவரும் வெற்றியாளராக திகழ்வதற்கான வலுவூட்டல் வழங்கப்படுகின்றது.

மேலும், ‘Cash Bonanza’ மூலம், வாடிக்கையாளர் நம்பிக்கைக்கு வெகுமதிகளை பெற்றுக் கொடுப்பதற்கான SLT-MOBITEL இன் அர்ப்பணிப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளதுடன், வாழ்க்கையை மாற்றியமைத்தல் என்பதற்கமைய இணைப்புக்கு அப்பால் பெறுமதியை பெற்றுக் கொடுத்தலும் மேற்கொள்ளப்படுகின்றது. நிகழ்ச்சியின் பிரத்தியேகமான வெகுமதி நிலையினூடாக, தேசிய மட்ட செயற்பாடாக அமைந்திருப்பதுடன், நாடு முழுவதையும் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு வாழ்க்கையை மாற்றியமைக்கும் பரிசுகளை வழங்குகின்றது.

வெற்றியீட்டுவதற்கான வாய்ப்புகளை அறிந்து கொள்வதற்கு, வாடிக்கையாளர்கள் #151# என்பதை டயல் செய்ய முடியும். வெற்றியாளர்களுக்கு 071 2755777 எனும் இலக்கத்தினூடாக மாத்திரம் அறிவித்தல் வழங்கப்படும். சகல அறிவித்தல்களும் தொடர்ந்தும் உறுதிப்படுத்தல்களுக்கு உட்பட்டதாக அமைந்திருக்கும்.

உயர் தரம் வாய்ந்த இணைப்புத்தீர்வுகளுடன் வாழ்வுக்கு வலுவூட்டும் SLT-MOBITEL இன் அர்ப்பணிப்பை மீள உறுதி செய்யும் வகையில் இந்த Cash Bonanza திட்டம் அமைந்துள்ளது. மேலும், சர்வதேச மட்டத்தில் புரோட்பான்ட் மற்றும் மொபைல் வலையமைப்பு பரிசோதனை சேவை வழங்குநரான Ookla இனால், இலங்கையின் வேகமான 4G மொபைல் வலையமைப்பு சேவை வழங்குநராக SLT-MOBITEL ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

SLT-MOBITEL தேசிய தகவல் தொடர்பாடல் தொழினுட்ப தீர்வுகள் வழங்குநர் எனும் வகையில், CashBonanza போன்ற புத்தாக்கமான திட்டங்களினூடாக வாழ்வை மாற்றியமைக்கும் செயற்பாடுகளில் SLT-MOBITEL தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், உயர் தரம் வாய்ந்த இணைப்புத் தீர்வுகளை வழங்கி, இலங்கையை அடுத்த கட்ட டிஜிட்டல் புரட்சிக்கு கொண்டு செல்வதில் ஈடுபட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .