S.Sekar / 2021 ஜூன் 14 , மு.ப. 08:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
தொழில்நுட்ப ஆரம்பநிலை நிறுவனங்கள் மத்தியில் புத்தாக்கம் மற்றும் தொழில்முயற்சியாண்மையை ஊக்குவிக்கும் வகையில், SLT-MOBITEL, புத்தாக்கமான “தொழில்முனைவோர் அரங்கம்” (‘Entrepreneurship Studio’) திட்டத்தை அண்மையில் அறிமுகம் செய்திருந்தது.

ஆரம்பநிலையிலுள்ள தொழில்நுட்பசார் தொழில் முயற்சியாளர்களுக்கு நிதி வசதிகளைப் பெற்றுக் கொள்வது, ஆலோசனை வழிகாட்டல்களைப் பெறுவது மற்றும் தொழில்நுட்ப கட்டமைப்பினூடாக தொடர்புகளை கட்டியெழுப்புவது போன்றவற்றுக்கு கவர்ச்சிகரமான வாய்ப்பை வழங்குவதாக அமைந்திருக்கும்.
இந்தத் திட்டத்துக்கான விண்ணப்பதாரிகள் இனங்காணப்பட்டு 12-16 வார காலத்துக்கான வழிகாட்டல் ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள். இதன் போது அவர்களுக்கு பயிற்சிகள், வழிகாட்டல்கள், பயிற்சிப்பட்டறைகள் மற்றும் ஆரம்பிப்பு முகாம்கள் போன்றன வழங்கப்படும்.
இந்த நிகழ்ச்சித் திட்டத்தினூடாக, பங்குபற்றுநர்களுக்கு அறிவு மற்றும் திறன் போன்றவற்றை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என்பதுடன், இணை விருத்தி, முதலீட்டு கையகப்படுத்தல் மற்றும் தொழில்நுட்ப தீர்வுகளை வணிகமயப்படுத்திக் கொள்வதற்கான உதவிகள் வழங்கப்படுவது மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை நிறுவிக் கொள்வதற்கான உதவிகளை வழங்குவது போன்றன மேற்கொள்ளப்படும்.
தொழில் முயற்சியாளர்கள் தமது தொழில்நுட்பத்தை அண்மித்து வியாபார மாதிரிகளை கட்டியெழுப்பிக் கொள்வது என்பது தொடர்பில் கண்காணிக்கப்படுவதுடன், முதலீட்டாளர்கள் வலையமைப்பை சந்திப்பது மற்றும் அணுகுவது, தெரிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுடன் வணிக நடவடிக்கைகள் ஆரம்பிப்பது மற்றும் அறிவுசார் சொத்து உரிமைகள் (IP rights) போன்ற ஒழுங்குபடுத்தல் உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கு உதவுதல் போன்றன வழங்கப்படும். மேலும், தெரிவு செய்யப்பட்ட பத்து ஆரம்ப நிலை நிறுவனங்களுக்கு ஒரு மில்லியன் ரூபாய் வரை நிதி உதவி வழங்கப்படும்.
இந்த நிகழ்ச்சித் திட்டம் ஆரம்ப நாள் நிகழ்வை கொண்டிருக்கும் என்பதுடன், தெரிவு செய்யப்பட்ட சகல ஆரம்ப நிலை நிறுவனங்களும் தமது வியாபாரங்களை, தொழில்நுட்ப துறைசார் முன்னோடிகள், எதிர்கால முதலீட்டாளர்கள் மற்றும் கையகப்படுத்தக்கூடியோருக்கு விளக்கமளிப்பார்கள்.
4 hours ago
27 Jan 2026
27 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
27 Jan 2026
27 Jan 2026