2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

SLT-MOBITEL இன் mCash, Visa உடன் கைகோர்ப்பு

S.Sekar   / 2021 ஏப்ரல் 20 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

SLT-MOBITEL இன் மொபைல் பணப் பிரிவான mCash, Visa நிறுவனத்துடன்  கைகோர்த்து, mCash விற்பனை நிலையங்களுக்கு LankaQR ஊடாக Visa கொடுப்பனவுகளை ஏற்றுக் கொள்ளும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இணைந்த திட்டத்தினூடாக, இலங்கையின் mCash விற்பனையகங்களுக்கு வாடிக்கையாளர்களிடமிருந்து QR கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொள்ள Visa தீர்வை பயன்படுத்த வலுவூட்டியுள்ளது. Visa வின் QR கொடுப்பனவு தீர்வு என்பது, வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பனவுகளை நேரடியாக தமது Visa முற்கொடுப்பனவு, டெபிட் அல்லது க்ரெடிட் கார்ட் கணக்குகளினூடாக தமது மொபைலினூடாக QR குறியீடு ஒன்றை ஸ்கான் செய்து படிமுறைகளைப் பின்பற்றி இலகுவாக பணத்தை செலுத்த முடியும்.

பங்காளர் வங்கியான கொமர்ஷல் வங்கியுடன் இணைந்து mCash இன் பிந்திய உள்ளடக்கமான LankaQR ஊடாக, ஏற்கனவே காணப்படும் mCash விற்பனை நிலையங்களுக்கு Visa QR தீர்வு அடங்கலான LankaQR சான்றளிக்கப்பட்ட app ஐ பயன்படுத்தும் எந்தவொரு வாடிக்கையாளரிடமிருந்தும் இலகுவாகவும், சௌகரியமாகவும் கொடுப்பனவுகளை ஏற்றுக் கொள்வதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. mCash விற்பனை நிலையங்களிலிருந்து வழங்கப்படும் LankaQR குறியீடுகள், Visa வலையமைப்பில் உள்நாட்டிலும், சர்வதேச ரீதியிலும் வழங்கப்பட்ட கார்ட்களினூடாக அனுப்பப்படும் பணத்தை ஏற்றுக்கொள்ளும் வசதியை கொண்டுள்ளன. இதனூடாக சந்தையில் காணப்படும் முழு வசதிகளையும் கொண்ட LankaQR குறியீடுகளைக் கொண்ட சேவையாக இது அமைந்துள்ளது.

மொபிடெல் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி சஷிக செனரத் இந்தப் பங்காண்மை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கை தொடர்ச்சியாக டிஜிட்டல் முறையில் வளர்ச்சியடைந்து வரும் நிலையில், Visa உடன் கைகோர்த்து எமது வாடிக்கையாளர்களுக்கு QR குறியீட்டு தீர்வுகளை வழங்கி, நுகர்வோர் சௌகரியமாகவும், பாதுகாப்பாகவும் மற்றும் உறுதியாகவும் தமது கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள வலுச்சேர்த்துள்ளோம். இந்தப் பங்காண்மையினூடாக, mCash மற்றும் LankaQR இன் செயற்தரம் போன்றவற்றினூடாக எமது விற்பனை நிலையங்களுக்கு புதிய கொடுப்பனவு புத்தாக்கங்களை எம்மால் வழங்க முடிந்துள்ளதுடன், எமது வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பனவுகளை மேற்கொள்ளவும், பெற்றுக் கொள்ளவும் வலுவூட்டியுள்ளோம். இதனூடாக இலங்கையின் டிஜிட்டல் கொடுப்பனவு கட்டமைப்பும் மேம்படுத்தப்படுகின்றது.” என்றார்.

இலங்கை மத்திய வங்கியின் நடவடிக்கையினூடாக LankaQR முதலில் அறிமுகம் செய்யப்பட்டது. இலங்கையில் QR குறியீடுகள் மற்றும் QR அடிப்படையிலான கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் இயங்குவதை உறுதி செய்யும் வகையில் இது அமைந்திருந்தது. LankaQR இன் நாடளாவிய ரீதியிலான செயற்படுத்தல் என்பது இலங்கை மத்திய வங்கியின் ‘Cash Wade’ திட்டத்துக்கு உதவும் வகையில் அமைந்திருப்பதுடன், இலங்கையில் டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல்களை பின்பற்றும் தன்மையை மேம்படுத்தும் வகையிலும், பணத்தை பயன்படுத்துவது தொடர்பில் காணப்படும் பிரச்சனைகளை உணர்த்தி, டிஜிட்டல் கட்டமைப்புகளினூடாக கொடுப்பனவுகளை இலகுவாக மேற்கொள்ளும் சௌகரியத்தை வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதையும் நோக்காகக் கொண்டுள்ளது.

Visa வின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான முகாமையாளர் அந்தனி வொட்சன் கருத்துத் தெரிவிக்கையில், “குறைந்த தொடுகைக் கொடுப்பனவுகள் தொடர்பில் அதிகரித்துச் செல்லும் பின்பற்றல் ஊடாக, நுகர்வோர் மற்றும் விற்பனை நிலையங்கள் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் முறையில் டிஜிட்டல் கொடுப்பனவுகளை நோக்கி நகரும் மாற்றத்தை உணர்த்தியுள்ளன. SLT-Mobitel விற்பனை நிலையங்களுக்கு Visaவில் QR கொடுப்பனவுகளை செயற்படுத்தியுள்ளதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். எனவே, அவர்களுக்கு Visa அட்டைதாரர்களிடமிருந்து கொடுப்பனவுகளை இலகுவாகவும், பாதுகாப்பாகவும் பெற்றுக் கொள்ள முடியும். இதனுடன், டிஜிட்டல் கொடுப்பனவு உட்கட்டமைப்பு, பாவனை மற்றும் ஏற்றுக் கொள்ளல் ஆகியவற்றை இலங்கையின் சகல விற்பனையகங்களிலும் விஸ்தரித்து நிறுவ எதிர்பார்க்கின்றோம்.” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X