2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

SLT-MOBITEL முன்னெடுத்த தைப்பொங்கல் கொண்டாட்டம்

Johnsan Bastiampillai   / 2021 பெப்ரவரி 01 , பி.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

SLT-MOBITEL தலவாக்கலை- கிரேட் வெஸ்டர்ன் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் தைப்பொங்கல் உற்சவத்தை, அண்மையில் கொண்டாடியதுடன் இந்த நிகழ்வின் ஓர் அங்கமாக, தலவாக்கலையிலுள்ள 200 குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொருட்களை நன்கொடையாக வழங்கி வைத்தது. இந்நிறுவனத்தின் சமுதாயப் பொறுப்பின் ஓர் அங்கமான இம்முன்னெடுப்பு, கொவிட்-19 நோய் தொற்றால், பொருளாதாரச் சவால்களை எதிர்கொண்டுள்ள இப்பிரதேசத்தின் குடும்பங்களுக்கு, அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்தது. 

இந்நன்கொடையைப்பற்றி கருத்துத் தெரிவித்த ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்தின் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி பிரபாத் தஹநாயக்க, “அறுவடையையும் புதிய வாய்ப்புகளது ஆரம்பத்தையும் குறிக்கும் தைப்பொங்கலானது, தமிழ் சமூகத்தினருக்கு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். எதிர்பார்த்திராத பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் கடின உழைப்பாளிகளது சமூகத்துக்கான ஒரு பாராட்டாக, இச்சந்தர்ப்பத்தை அடையாளப்படுத்த SLT-MOBITEL விரும்பியது. இத்தருணத்தில், பெருந்தொற்றின் தாக்கத்தால் நாடு பூராவுமுள்ள ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் பல்வேறு சவால்களை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றனர். மோசமாகப் பாதிக்கப்படக்கூடிய எமது சமூகங்களில் சிலவும் கொவிட்-19 இனால் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளன. SLT-MOBITEL தேசத்தினதும், பொதுமக்களினதும் நல்வாழ்வுக்காகத் தொடர்ச்சியாக ஆதரவளித்ததுடன், இவ்ஆதரவைத் தொடர்ந்தும் தனது சமுதாயப் பொறுப்பு முயற்சிகளினூடாகத் தொடரும்”  எனக் கூறினார்.

கொவிட்-19 நோய் பரவலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பங்களிப்பு வழங்கும் வகையிலமைந்த இந்நன்கொடையானது, SLT-MOBITEL இனால் மேற்கொள்ளப்படும் பல்வேறு கூட்டாண்மை சமூகப் பொறுப்புணர்வு (CSR) பணிகளில் ஒன்றாக அமைந்திருந்தது. 2020இல் ஏற்பட்ட தேசிய ரீதியான முடக்கத்தின்போது, இலங்கையர்களை ஒருவரோடொருவர் தொடர்பில் வைத்திருந்ததுடன், SLT-MOBITEL கடினமான நேரத்தின்போது ஏற்படும் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்திசெய்வதற்காக, எண்ணற்ற உலர் உணவு நன்கொடைகளினூடாக மக்களுக்கு உதவியிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .