2024 மே 02, வியாழக்கிழமை

Saegis கம்பஸ் வட்டியில்லாத கடன் திட்டத்தின் கீழ் கற்கைகளை வழங்குகின்றது

Freelancer   / 2023 ஜூலை 14 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

Saegis கம்பஸ், உலகத் தரம் வாய்ந்த அறிவை மாணவர்களுக்கு வழங்கி, அடுத்த தலைமுறையின் தலைவர்களாக திகழச் செய்யும் வகையில் அவர்களை தயார்ப்படுத்துவதில் ஒப்பற்ற அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதுடன், இலங்கை அரசாங்கத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட மாணவர்களுக்கான வட்டியில்லாத கடன் திட்டத்தின் கீழ் 7ஆவது மாணவர் உட்சேர்ப்பை அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் க.பொ.த உயர் தரப்பரீட்சைகளுக்கு தோற்றிய மாணவர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால், கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட Saegis கம்பஸினால் வழங்கப்படும் பல்வேறு பட்டக் கற்கைகளுக்கு விண்ணப்பிக்க முடியும். அரச பல்கலைக்கழகங்களுக்கு அப்பால் மாற்று கல்வித் தெரிவுகளில் கவனம் செலுத்துவோருக்கு உகந்த தெரிவாகவும் இது அமைந்துள்ளது.

இந்தத் திட்டத்தினூடாக, அறிவைப் பெற்று, சமூகத்துக்கு மீள வழங்கக்கூடிய இலங்கையின் மாணவர்களின் உயர் கல்விப் பயணத்தின் பங்காளராக Saegis கம்பஸ் திகழ்வதற்கு எதிர்பார்க்கின்றது.

இந்தத் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு பரந்தளவு உயர் கல்வித் திட்டங்களைத் தெரிவு செய்ய முடியும். அவற்றில், சந்தைப்படுத்தல், மனித வளங்கள் முகாமைத்துவம் மற்றும் கணக்கீடு மற்றும் நிதியியல் ஆகிய மூன்று பிரிவுகளில் விசேடத்துவத்தை தெரிவு செய்து கொள்ளக்கூடிய வியாபார முகாமைத்துவ இளமாணிப் பட்டம் (Hons), வணிக நிர்வாக இளமாணிப் பட்டம் (BBA), கணனி விஞ்ஞானம், மென்பொருள் பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆகிய பிரிவுகளில் விசேடத்துவத்தைக் கொண்ட விஞ்ஞான இளமாணிப் பட்டம் சிறப்பு (BSc (Hons)) மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் இளமாணிப் பட்டம் (BIT) போன்றன அடங்கியுள்ளன.

Saegis கம்பஸினால் மாணவர்களுக்கு IFSLS திட்டத்தைத் தொடரும் சகல மாணவர்களுக்கும் சகல பட்டப்படிப்பு பிரிவுகளிலும் உத்தரவாதமளிக்கப்பட்ட தொழில் வாய்ப்புகளை இலங்கையின் முன்னணி நிறுவனங்களில் பெற்றுக் கொடுக்க வழிகாட்டல்கள் வழங்கப்படும். கம்பஸின் நவீன வசதிகளுடன் சிறந்த பயிலல் அனுபவத்தை மாணவர்களுக்கு பெற்றுக் கொள்ள முடியும். இலவச ஆங்கில அறிவு மேம்படுத்தல் வகுப்புகள். தங்குமிட வசதிக் கோரிக்கைகள், தொழில்நிலை வழிகாட்டல்கள் மற்றும் பல்வேறு பிரத்தியேக விருத்தி நிகழ்ச்சிகளில் பங்கேற்றல் போன்ற வசதிகளைப் பெற்றுக் கொள்ளவும் முடியும்.

கல்வி அமைச்சின் ஒன்லைன் விண்ணப்பப் பகுதியில் ஆகஸ்ட் 7ஆம் திகதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .