Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜூலை 23 , பி.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
So Sri Lanka, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் (SLTPB) அறிமுகப்படுத்தலோடு, CFW கொழும்பு நீச்சல் வாரம், கலை, நவநாகரீகம், உணவு, இசை ஆகிய நான்கு ஆக்கபூர்வமான தொழிற்றுறைகளை ஒன்றிணைத்து கொழும்பை கொண்டாடுங்கள் (Celebrate Colombo) என்ற ஆக்கபூர்வ திருவிழாவை ஒரு வார காலத்துக்கு நடத்தவுள்ளது.
கொழும்பை கொண்டாடுங்கள் (Celebrate Colombo) என்ற ஆக்கபூர்வ ஒரு வார திருவிழாவானது நீச்சல், உல்லாச காலப்பகுதியில் வேரூன்றி, தற்போது தனது 5ஆவது வருடத்தில் காணப்படுகிறது.
கொழும்பை கொண்டாடுங்கள் (Celebrate Colombo) திருவிழாவானது, சுற்றுலாதுறை அடிப்படையிலான பயண இலக்கின் மேம்படுத்தல் நிகழ்ச்சி தயாரிப்பாகும், இது சர்வதேச ஊடகங்கள், பயணிகளின் மனநிலையில் சாதக எண்ணத்தை ஏற்படுத்துதல், கொழும்பை ஒரு துடிப்பான மற்றும் ஆக்கபூர்வமான நகரமாக காட்டுதல், இந்த நிகழ்ச்சித்திட்டமானது பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்துதல், கொழும்புக்கான முன்னைய வருகைகளின் போது அனுபவித்த சந்தோசத்தை விட அதிகளவான சந்தோச அனுபவங்களை பெற்றுக் கொள்ளல் போன்ற விடயங்களை வெளிக் கொண்டுவருவதற்கான மேம்படுத்தல் நிகழ்ச்சி தயாரிப்பாகும்.
நவீன பயணிகளுக்கு இந்த ஆக்கபூர்வ துறைகளான கலை, உணவு மற்றும் இசை போன்றவற்றின் கூட்டு சேர்க்கையானது, நகரத்தின் மீது புதுவிதமான கவர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்தத் திருவிழா உருவாக்க நோக்கமானது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு (Easter Sunday attacks) பிறகு அமைதி, இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதை வெளிக்காட்டுவதற்கான முதற் கள செயல் விளக்கம் ஆகும். இந்த விடயம் தொடர்பில், குறித்த திருவிழாவானது, இலங்கையில் ஒரு மிக முக்கிய மூலோபாய பங்கு வகிக்கின்றது.
உயிர்ப்புள்ள வினைத்திறனான சமூகத்துடன் ஒரு துடிப்பான நகரமாக கொழும்பை வெளிக்காட்டும் நோக்கத்தில் இலங்கை சுற்றுலாதுறையின் ஒத்துழைப்புடன் கூட்டு முயற்சியினால் கொழும்பை கொண்டாடுங்கள் (Celebrate Colombo) திருவிழா நடத்தப்படுகிறது. ஆக்கபூர்வமான திருவிழா, சுற்றுலாத்துறை தயாரிப்புகளாக செயற்படுகிறது.
27 minute ago
29 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
29 minute ago
40 minute ago