2025 மே 15, வியாழக்கிழமை

TFI, CCF இணைவு

S.Sekar   / 2021 மார்ச் 01 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ட்ரேட் ஃபினான்ஸ் அன்ட் இன்வெஸ்ட்மன்ட்ஸ் பிஎல்சி. (TFI), கொமர்ஷல் கிரெடிட் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி (CCF) உடன் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது.

இந்த ஒன்றிணைவு, 2020 டிசம்பர் 31ஆம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வந்துள்ளது.  2020 நவம்பர் 09ஆம் திகதி இடம்பெற்ற அதிவிஷேட பொதுக் கூட்டத்தில் மேற்படி இரண்டு நிறுவனங்களினதும் பங்குரிமையாளர்கள் வழங்கிய ஒப்புதலின் பேரிலேயே இந்த ஒன்றிணைத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் 2014ஆம் ஆண்டில் அங்குராப்பணம் செய்யப்பட்ட நிதியியல் துறை கூட்டிணைத்தல் திட்டத்தினை அடிப்படையாகக் கொண்டு இந்த ஒன்றிணைத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது கொமர்ஷல் கிரெடிட் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி. (CCF) நிறுவனமானது ட்ரேட் ஃபினான்ஸ் அன்ட் இன்வெஸ்ட்மன்ட்ஸ் பிஎல்சி. (TFI) நிறுவனத்தின் பெருமளவு கட்டுப்பாட்டை கையகப்படுத்தியது. இலங்கை மத்திய வங்கி முன்வைத்த கோரிக்கைக்கு மேலதிகமாக, இவ்விரு கம்பனிகளினதும் பணிப்பாளர் சபையினர் கூட்டிணைத்தல் திட்;டத்திற்கு அமைவாக தீர்மானம் ஒன்றையும் எடுத்திருந்தனர். 

இந்த ஒன்றிணைத்தலின் விளைவாக, ஒன்றுதிரண்ட சொத்துத் தளத்தின் பெறுமதி சுமார் ரூ. 90 பில்லியனாக காணப்படும். அதேநேரம், மேம்பட்ட மூலதன வீதங்களைக் கொண்ட ஒரு உறுதியான மூலதனத் தளமானது கொமர்ஷல் கிரெடிட் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு பலமானதொரு அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .