Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 செப்டெம்பர் 13 , பி.ப. 02:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
Prime Lands Residencies PLC அதன் டிஜிட்டல் சிறப்புக்காக, 15ஆவது BestWeb.lk விருதுகள் நிகழ்வில் தொடர்ச்சியான இரண்டாவது வருடமாகவும் தங்க விருதை சுவீகரித்துள்ளது. The Grand Ward Place இணையத்தளத்துக்காக சிறந்த கூட்டாண்மை இணையத்தள பிரிவில், தங்க விருதை நிறுவனம் பெற்றுக் கொண்டது. இலங்கையின் ரியல் எஸ்டேட் பிரிவில், தொலைநோக்குடைய, நவீனத்துவமான ஒன்லைன் பிரசன்னத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்தக் கட்டமைப்பு அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வாடிக்கையாளர்களுக்கு சொத்துத் தெரிவுகள் தொடர்பில் ஒப்பற்ற அணுகலை மேற்கொள்ளவும், அத்தியாவசியமான தகவல்கள் மற்றும் வர்த்தக நாம ஈடுபாட்டு தெரிவுகளையும் Prime Lands Residencies கொண்டிருப்பதை கௌரவிக்கும் வகையில் இந்த விருது அமைந்துள்ளது. BestWeb.lk இல் வெற்றியீட்டியதனூடாக, நிறுவனத்தின் மூலோபாய டிஜிட்டல் முதலீடுகள் மீளுறுதி செய்யப்பட்டுள்ளதுடன், ரியல் எஸ்டேட் வர்த்தக நாமங்களில் ஒன்லைனில் பிரசன்னத்தைக் கொண்டிருப்பதன் அதன் நியம நிலையும் வலிமைப்படுத்தப்பட்டுள்ளது.
Grand Ward Place இணையத்தளத்தின் உள்ளம்சங்களை வெளிப்படுத்துவது மாத்திரமன்றி, வாடிக்கையாளர்களுக்கு தகவலறிந்த தீர்மானங்களை மேற்கொள்வதற்கு வலுவூட்டும் கட்டமைப்பாக அமைந்துள்ளது. அத்துடன், Prime அணியினருடன் தொடர்புகளை பேணவும், உலகின் எங்கிருந்தும் Prime வாக்குறுதியை அனுபவிக்கும் வசதியையும் வழங்குகிறது. அத்துடன், நிறுவனத்தின் தொலைநோக்குடைய டிஜிட்டல் மூலோபாயத்தை உறுதி செய்வதுடன், தொழிற்துறையின் மாற்றத்துடன் இயங்கி, புத்தாக்கத்தை முன்னெடுத்துச் செல்வதிலும் பங்களிப்பு வழங்குகிறது.
Prime Lands Residencies தொடர்ச்சியாக தங்க விருதுகளை வெற்றியீட்டியுள்ளதனூடாக, தொழிற்துறை தலைமைத்துவத்தின் அடிப்படையில் செயலாற்றுவதுடன், புத்தாக்கம், வாடிக்கையாளர் சேவை மற்றும் கூட்டாண்மை சிறப்பு ஆகியவற்றுக்காக இதுவரையில் பெற்றுள்ள பல கௌரவிப்புகளில் மேலும் ஒரு உள்ளடக்கத்தை சேர்த்துள்ளது. இந்த விருதினூடாக, நிறுவனத்தின் வெற்றிகரமான செயற்பாடுகளை பிரதிபலிப்பது மாத்திரமன்றி, இலங்கையின் தொடர்மனை பிரிவில் களத்திலும், ஒன்லைனிலும் புதிய நியமங்களை நிர்ணயிப்பதற்கான அதன் நோக்கை மீளுறுதி செய்வதாகவும் அமைந்துள்ளது.
LK Domain Registry இனால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் BestWeb.lk விருதுகள் வழங்கும் நிகழ்வினூடாக இலங்கையின் தொழிற்துறைகளைச் சேர்ந்த மிகச் சிறந்த இணையத்தளங்கள் தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்படுகின்றன. ஆக்கத்திறன், செயற்படு தன்மை, தொழினுட்பத் தரம் மற்றும் பாவனையாளர் அனுபவம் ஆகியன உறுதி செய்யப்படுகின்றன.
இலங்கையின் ரியல் எஸ்டேட் துறையில் 30 வருட கால நம்பிக்கையும் சிறப்பையும் கொண்ட சர்வதேச முன்னோடியாக Prime Group திகழ்கிறது. தொடர்மனைப் பிரிவில் Prime Lands Residencies PLC முன்னோடியாக அமைந்துள்ளதுடன், கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 45க்கும் அதிகமான திட்டங்களை பூர்த்தி செய்துள்ளது. தற்போது 5 திட்டங்களை முன்னெடுத்த வண்ணமுள்ளதுடன், 2 திட்டங்களை புதிதாக அறிமுகம் செய்துள்ளது. அவற்றினூடாக, வளர்ச்சி மற்றும் வாடிக்கையாளர் நம்பிக்கை போன்றவற்றுக்கான தனது உறுதியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளது.
2 hours ago
6 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
7 hours ago
7 hours ago