Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மே 05 , பி.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொபிடெல், அண்மையில் UTECH உடனான மூலோபாய கைகோர்ப்பு பற்றி அறிவித்துள்ளது. அங்கிகாரம் பெற்ற மீள்விற்பனையாளர் என்ற வகையில் மொபிடெல் UTECH உடன் கூட்டிணைந்து தனிப்பயனாக்கப்பட்ட IIoT (Industrial Internet of Things) தீர்வுகளை வழங்குகிறது. கட்டுமானம், வலு, உற்பத்திகள், விவசாயம் மற்றும் விநியோகச் சங்கிலி என பல்வேறுபட்ட தொழிற்துறைகளுக்கு இத்தீர்வுகள் வழங்கப்படுகின்றன.
IIoT தீர்வுகள் வேலையின்மையை குறைப்பதால் தொழிற்துறைகளில் வினைத்திறனை அதிகரித்து அதன் மூலம் உற்பத்தித் திறனை அதிகரிக்கிறது. இதனால் மொத்த இலாபமும் அதிகரிக்கிறது. IoT ஆனது 25 பில்லியனுக்கும் மேற்பட்ட சொத்துகளுடன் GSMA புள்ளிவிவரத்தின் படி 2025 இல் இணைக்கப்படவுள்ள, உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழிற்துறைகளுள் ஒன்றாக கருதப்படுகிறது.
IIoT தீர்வுகள் தொழிற்துறைகளில் சிறந்த கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகள்: நீடிக்கப்பட்ட மீளாய்வுகளுக்கு சரியான நேரத்தில் துல்லியமான தரவுகளைச் சேகரித்தல், ப்ரொசெஸ் ஒடோமேஷனை உறுதி செய்தல், செயல்திறன் மிக்க அடையாளத்தை அடைதல், மூல காரண மீளாய்வுகளுக்கு தேவையான தரவுகளைத் தயாரிக்க உதவுதல், தடுக்கும் அளவுகோல்களை நடைமுறைப்படுத்தல் போன்றவற்றைச் செய்திட கம்பனிகளுக்கு உதவுகிறது.
மேலும் இக்கூட்டிணைவின் நிபந்தனைகளின் அடிப்படையில் மொபிடெல், UTECH உடன் மிகவும் நெருக்கமாகச் செயற்பட்டு புதிய தேவைகளுக்கான கூட்டு R&D ஐ நடத்துவதன் மூலம் வாடிக்கையாளர்களுடன் எல்லையற்ற முறையில் தற்போதுள்ள அமைப்புகளுடன் தொடர்ச்சியாக இயங்குவதற்கும் எங்கள் மூலோபாய கூட்டணி பலங்களின் ஆதரவுடன் செயற்படுவதற்கும் முழுவதுமாக தனிப்பயனாக்கப்பட்ட IIoT தீர்வுகள் உதவுகின்றன.
25 minute ago
27 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
27 minute ago
38 minute ago