Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 செப்டெம்பர் 29 , பி.ப. 09:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
யுனைட்டட் டிராக்டர் அன்ட் எக்யுப்மன்ட் (பிரைவெட்) லிமிட்டட் (UTE), விற்பனை வளர்ச்சி மற்றும் வியாபார சாதனைகளுக்காக இரு பிராந்திய விருதுகளை தனதாக்கிக் கொண்டது.
Cat வர்த்தக நாமத்திலமைந்த Lift Truck களை உற்பத்தி செய்யும் MNA Forklift Asia Pacific Pte. Ltd தனது ஆசியா, ஓஷனியா மற்றும் தென் ஆபிரிக்க பிராந்திய நாடுகளைச் சேர்ந்த சிறந்த விநியோகஸ்த்தர்களைக் கௌரவிக்கும் வகையில் “MNA விற்பனையாளர் விருதுகள் இரவு’ நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. இதன் போது UTE இரு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது. இலத்திரனியல் மற்றும் களஞ்சிப்படுத்தல் ட்ரக் வகைகளுக்கான CAT Lift Trucks Top Market Share 2014/2015 - Category B மற்றும் Internal Combustion ட்ரக் வகைகளுக்கான ‘CAT Lift Trucks Top Market Share 2014/2015 Category B போன்றன இதில் அடங்கியிருந்தன.
தொடர்ச்சியான இரண்டாவது ஆண்டாக வளர்ந்து வரும் சந்தைகள் அல்லது Category B இல் விற்பனை மற்றும் Combustion என்ஜின் பிரிவில் UTE விருதுகளை வென்றிருந்தது. இது தொடர்பில் UTE இன் வலு மற்றும் மூலப்பொருட்கள் கையாள்கை பிரிவின் பொது முகாமையாளர் மஞ்சுள விதானகே கருத்துத் தெரிவிக்கையில், ‘எமது வாடிக்கையாளர்கள் தொழிற்துறை சார்ந்த பொருட்களை கொள்வனவு செய்யும் போது தரம், தங்கியிருக்கும் திறன் மற்றும் விற்பனைக்கு பிந்திய சிறந்த சேவை ஆகியவற்றில் தொடர்ச்சியான தன்மையை எதிர்பார்க்கின்றனர்.
Cat Fork Lift truckகளுக்கு பல ஆண்டு காலமாக UTE இனால் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகள் வழங்கப்படுகின்றமைக்கு புகழ் கிடைத்துள்ளது. மீண்டும் எம்மை நாடி வரும் வாடிக்கையாளர்கள் பலரை நாம் கொண்டுள்ளோம், நாம் வழங்கும் நிபுணத்துவம் வாய்ந்த சேவை காரணமாக இவர்கள் தொடர்ச்சியாக CAT தயாரிப்புகளைப் பயன்படுத்துகின்றனர். CAT தயாரிப்புகளின் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். அவர்கள் எம்முடன் பேணும் நீண்ட கால நம்பிக்கை காரணமாக இந்த இலக்கை எம்மால் எய்தியுள்ளது’ என்றார்.
3 hours ago
6 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
7 hours ago
7 hours ago