2024 மே 20, திங்கட்கிழமை

UiPath Automations சிறப்பு விருதுகள் 2022 இல் SLT-MOBITEL க்கு கௌரவிப்பு

Freelancer   / 2023 ஜூன் 19 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

SLT-MOBITEL, அண்மையில் இடம்பெற்ற UiPath Automation சிறப்பு விருதுகள் 2022 நிகழ்வில் கௌரவிப்பைப் பெற்றுக் கொண்டது. தொடர்ச்சியான இரண்டாவது ஆண்டாக இலங்கையில் Automation சிறப்பு பிரிவில் இந்த விருது வழங்கப்பட்டிருந்தது.

நான்காவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு மெய்நிகர் நிகழ்வாக, Economic Times உடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டது. இந்தியா மற்றும் தெற்காசிய பிராந்தியத்தில் மாற்றியமைப்பு automation செயற்திட்டங்களினூடாக தொழிற்துறைசார் சிறப்பை எய்தியிருந்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களை கௌரவிக்கும் வகையில் இந்நிகழ்வு அமைந்திருந்தது.

பரந்தளவு வியாபாரச் செயற்பாடுகளில் தாக்கம் செலுத்தும் பல்வேறு automationகளை SLT-MOBITEL நடைமுறைப்படுத்தியிருந்தது. UiPath RPA (Robotic Process Automation) ஐயும் பயன்படுத்தி செயலாற்றி இந்தப் பிரிவில் சிறந்த நிலையை கொண்டுள்ளது. இந்தச் செயற்பாடுகளில் கடன் கட்டுப்பாடு மற்றும் வருமான உறுதிப்படுத்தல் கட்டமைப்பு விருதை சுவீகரித்திருந்தது.

இந்த கௌரவிப்பைப் பெற்றுக் கொண்டமை தொடர்பில் SLT-MOBITEL இன் குழும பிரதம அதிகாரி தகவல் மற்றும் டிஜிட்டல் திலக் கமலத் கருத்துத் தெரிவிக்கையில், “தொடர்ச்சியான இரண்டாவது வருடமாகவும் UiPath இடமிருந்து இந்த விருதை பெற்றுக் கொள்கின்றமை தொடர்பில் நாம் பெருமை கொள்கின்றோம். புத்தாக்கமான automation தீர்வுகளை தயாரித்து நடைமுறைப்படுத்துவதில் எமது அணியினர் அர்ப்பணிப்புடன் செயலாற்றுகின்றனர். அதனூடாக நிறுவனசார் வினைத்திறனை கட்டியெழுப்ப முடியும் என்பதுடன், வாடிக்கையாளர் அனுபவங்களை மேம்படுத்தக்கூடியதாக இருக்கும். சிறந்த செயற்பாடுகளுக்கு இந்த விருது முன்மாதிரியானதாக அமைந்திருப்பதுடன், எமது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தகவல் தொடர்பாடல் தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கான எமது தொடர்ச்சியான அர்ப்பணிப்பையும் எடுத்துக்காட்டுகின்றது.” என்றார்.

UiPath Automation சிறப்பு விருதுகள் 2022 இல் SLT-MOBITEL பெற்றுக் கொண்ட கௌரவிப்பினூடாக, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தீரவுகள் துறையில் அதன் தலைமை நிலை மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. செயற்பாட்டு சிறப்பை வழங்கி, வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தும் புதிய automation செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்கு நிறுவனம் தன்னை அர்ப்பணித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X