2025 மே 16, வெள்ளிக்கிழமை

VIBER இன் COMMUNITIES இன் அனுகூலங்கள்

Editorial   / 2020 ஓகஸ்ட் 25 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொருள்கள் கொள்வனவு, மருந்துப் பொருள்கள் விநியோகம் முதல் ஒன்லைனில் பயிற்றுவித்தல் வரை Viber Communities ஐ முன்னணி நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன

இலங்கையின் சமூகங்கள், வியாபாரங்கள் தொடர்ந்தும் ஒன்லைனில் இணைந்திருந்து, நம்பத்தகுந்த தகவல்களைப் பரிமாறி தொடர்புகளை பேணி வரும் நிலையில், அமைச்சுகள், செய்தி நாளிகைகள், நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள்,  கலைஞர்கள் மத்தியில் Rakuten Viber பிரபல்யத்துடன், தமது VIBER COMMUNITIES க்காக அதிகளவு வரவேற்பையும் பெற்றுள்ளது.

Communities என்பது குழுக்களைப் போன்றதுடன், பாதுகாப்பானது. இந்த விசேட உள்ளம்சத்தினூடாக, உடனடி தகவல் பரிமாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், தனியார் தளங்களில், கோவைகள் பகிர்வு, கைகோர்ப்புக்கான ஒரு மையமாக அமைந்துள்ளது. ஒரு தளத்தை உருவாக்கிக் கொள்வது அல்லது அதில் அங்கம் வகிப்பது என்பது இலகுவான விடயமாக அமைந்துள்ளது. பாவனையாளர்களுக்கு சௌகரியமான வகையில் மின்னஞ்சல்களை அனுப்புவது இலகுவானது. உங்களுக்கு பொருத்தமான தொடர்பாடல்களில் நீங்கள் இணைந்து கொள்ளலாம், பொருத்தமற்ற எந்தவிடயங்களையும் தவிர்த்துக் கொள்ளவும் முடியும்.

உறுதியான, நம்பிக்கையான பங்காண்மைகள்

சம காலங்களில் வியாபாரங்கள் ஒன்லைன் கட்டமைப்புக்கு வேகமாக மாறிவரும் சூழலில், Viber Communities இனால் பாவனையாளர்களுக்கு பெருமளவு பெறுமதிகள் சேர்க்கப்பட்ட வண்ணமுள்ளன.

கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக, Viber Communities ஊடாக அத்தியாவிய பொருட்கள், மருந்துப் பொருள்கள், சுய பராமரிப்பு பொருள்கள் போன்றவற்றை சௌகரியமான முறையில் கொள்வனவு செய்து கொள்ள முடிந்தது.

வாடிக்கையாளர்களின் சுகாதாரம், பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு, காகில்ஸ், Sri Lanka Delivery Services வியாபாரத்தை ஒன்லைனில் முன்னெடுத்திருந்தன. எனவே, எவ்வேளையிலும் சமூக, உடல்சார் தூரப்படுத்தல்களை எவ்வேளையிலும் பேண முடியும். Viber Communities ஊடாக, இந்த பங்காளர்களுக்கு தொடர்புகளைப் பேண முடிந்ததுடன், கொடுப்பனவு திட்டங்களை அணுகி, பாதுகாப்பு பொறிமுறைகளைப் பேணி பொருள்களை விநியோகிக்கக்கூடியதாக இருந்தது. முன்னரைவிட தற்போது, வர்த்தக நாமங்கள் கொடுக்கல் வாங்கல்கள் வரையறைகளற்றவையாக இருப்பதை உறுதி செய்துள்ளன. ஏiடிநச இன் மேலதிக உள்ளம்சம் என்பது, வாடிக்கையாளர் தன்னிறைவை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.

  • மக்கள் வங்கியுடனும் Viber கைகோர்த்து, வங்கியின் வசதிகளை Communities ஊடாக அணுகுவதற்கு வாய்ப்பளிப்பதாக அமைந்துள்ளது. பிந்திய தயாரிப்புகள், சேவை மெருகேற்றங்கள் மற்றும் கொள்கைகள் போன்றவற்றை துரித கதியில் அணுகக்கூடியதாக இருக்கும்.
  • உங்களுக்கு பிடித்த உள்நாட்டுக் கலைஞர்களுடனும் நேரடியாக தொடர்பை ஏற்படுத்தும் வசதியை வழங்குகின்றது.
  • முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை இலகுவாக அணுகும் வசதி
  • சுகாதார ஊக்குவிப்பு அமைப்பு, உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் பல்வேறு செய்தித் தளங்கள் போன்ற Communities உடன் இணைந்து, சரியான தகவல்களை எப்போதும் அறிந்து கொள்ளலாம்.
  • உத்தியோகபூர்வ மூலங்களுடன் Viber இன் பங்காண்மைகள் என்பது, உறுதி செய்யப்பட்ட தகவல்களை அணுக வாய்ப்பளிப்பாக அமைந்துள்ளது.
  • தங்கியிருக்கும் திறன், பாதுகாப்பு, பிரத்தியேகத்தன்மை

Viber ஐ பொறுத்தமட்டில் பாதுகாப்பு, பிரத்தியேகத்தன்மை ஆகியன முக்கியத்துவம் பெறுகின்றன. snazzy Communities உள்ளம்சத்தினூடாக, அங்கத்தவர்களுக்கு மொபைல் இலக்கங்களை மறைமுகமாக பேண முடியும்.

புதிய டிஜிட்டல் சேவைகளை வியாபாரங்களை பின்பற்றும் போது, தங்கியிருக்கும் தன்மை, பாதுகாப்பு, பிரத்தியேகத்தன்மை தொடர்பில் அதிகளவு கவனம் செலுத்துகின்றன என்பதை Viber புரிந்து கொண்டுள்ளது. இலங்கையில் இந்த பெறுமதிகளை பாதுகாப்பதில் தன்னை அர்ப்பணித்துள்ளது. பெருமளவான இலங்கையர்கள் தமது வீடுகளில் இருந்தவாறே, பரந்தளவு நிறுவனங்களுடன் இணைந்து கொள்வதற்கான வசதியை Viber ஏற்படுத்தியுள்ளது.

ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் Viber இன் வினைத்திறன் அதிகரித்திருந்தது, குறிப்பாக 208% வளர்ச்சியை பார்வையிட முடிந்தது. குறிப்பாக முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் Communities இடையே 129% அதிகரிப்பை அவதானிக்க முடிந்திருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .