2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

Vision Care செயற்பாடுகள் விஸ்தரிப்பு

Niroshini   / 2017 பெப்ரவரி 07 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் பிரதான மாவட்டங்களுக்கு தனது மூக்குக்கண்ணாடி சேவைகளை விஸ்தரிப்பது எனும் திட்டத்தின் பிரகாரம், கம்பஹா, குளியாப்பிட்டிய, நீர்கொழும்பு, மாத்தறை மற்றும் மொனராகலை ஆகிய நகரங்களில் Vision Care தனது புதியக் கிளைகளை அங்குரார்ப்பணம் செய்திருந்தது. இதன் மூலம் இலங்கையின் வெவ்வேறு பகுதிகளில் தான் கொண்டுள்ள கிளை எண்ணிக்கையை 39 ஆக அதிகரித்துள்ளது.  

Vision Care தனது விஸ்தரிப்பு செயற்ற்றிட்டத்தினூடாக நிறுவனத்தின் சேவைகள் பற்றிய விழிப்புணர்வை விஸ்தரித்து வருவதுடன், தமது கண்பார்வை தீர்வுகள் பற்றிய தெரிவுகளையும் தொடர்ச்சியாக விநியோகித்த வண்ணமுள்ளது. இலங்கையின் 25 மாவட்டங்களிலும் பிரசன்னத்தைக் கொண்டிருப்பது எனும் எதிர்பார்ப்புடன் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், Vision Care எனும் வர்த்தக நாமத்திலமைந்த தயாரிப்புகளை நாட்டின் சகல பாகங்களையும் சேர்ந்தவர்களுக்கும் அனுபவிப்பதற்கான வாய்ப்பை வழங்குவதையும் நோக்காகக் கொண்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X