2024 மே 03, வெள்ளிக்கிழமை

WAC Fellowship இல் MMCA இலங்கையானது Web3 தீர்வுகளை உருவாக்குகிறது

Janu   / 2023 ஜூலை 13 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின்  நவீன  மற்றும்  சமகால  கலை  அருங்காட்சியகம்  (MMCA இலங்கை) ஆனது, பரிஸ் மற்றும் பெர்லினில் உள்ள We Are Museumsஇன் தலைமையின் கீழ் நடத்தப்பட்ட  Web3 for the Arts and Culture (WAC) ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் திட்டத்தை, உலகெங்கிலும் உள்ள பதினொரு கலாச்சார நிறுவனங்களுடன் இணைந்து வெற்றிகரமாக நிறைவுசெய்தது.

புதிய முறைகள் இயற்றுவதற்கான இவ் ஆய்வுப் பயிற்சியானது, இந்நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட இரண்டாவது நான்கு மாத பயிற்சியாகும். இப்பயிற்சியின் மூலம் இந்நிறுவனங்கள் Web3 தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான இணையப் பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் வழங்கப்பட்டது. பங்கேற்பாளர்கள் Blockchainஐ அடிப்படையாகக்கொண்ட சில திட்டங்களை ஆராய்ந்து முதல் மாதிரிகள் அமைத்தனர். இவை மே 25, 2023 அன்று இணையம் மூலம் நடத்தப்பட்ட செயல் விளக்க தினத்தில் முன்வைக்கப்பட்டன.

MMCA இலங்கையின் ஊழியர்களான உதவி எடுத்தாளுனர்கள் (கண்காட்சிகள்) ரிசெல் மார்சலின் மற்றும் தினால் சஜீவ ஆகியோர், திட்டத்தின் கடைசி மாதத்தில் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பு செய்யும் ஒருவருடன் ஒத்துழைப்பதற்கு இணைந்து—blockchain மற்றும் UI/UX நிபுணர்களின் ஆதரவுடன்—தங்கள் சொந்த blockchain applicationஐ உருவாக்குவதற்கும் முதல் மாதிரியைத் தயாரிப்பதற்கும் அம்மாதத்தை அர்ப்பணித்தனர். “‘Museum of School’ என்ற எங்கள் இறுதி செயற்திட்டத்தில், MMCA இலங்கை வருகை கல்வியியலாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட கற்றல் மற்றும் பயிற்சி இணைய முகப்பு ஒன்றின் முன்மாதிரி உருவாக்கப்பட்டது. பல்வேறு பாடங்களை நிறைவு செய்வதற்கு இவர்களை ஊக்குவிப்பதற்கு NFT கலைத் தொகுப்புகளும் பரிசுகளாக இணைக்கப்பட்டுள்ளன.

இப்பாடங்களுள் கலைப் பாதுகாப்பு மற்றும் கையாளுதல், அவதானிப்பு மற்றும் மெதுவாகப் பார்வையிடும் நுட்பங்கள், பார்வையாளர்களை ஈடுபடுத்துவதற்கு பயனுள்ள நுட்பங்கள் ஆகியனவும் அடங்கும்,” என்று சஜீவ குறிப்பிட்டார். “இத்திட்டம் ஆரம்பத்தில் MMCA இலங்கையின் உள்ளக ஊழியர்களுக்காக—குறிப்பாக வருகை கல்வியாளர்களுக்காக—வடிவமைக்கப்பட்டாலும், இலங்கையின் நிறுவனங்கள், அருங்காட்சியகங்கள், பாடசாலைகள் மற்றும் பரந்த தெற்காசியப் பிராந்தியத்தில் கூடிய அளவில் செயல்படுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது" என அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

சஜீவ, WAC Fellowshipஇல் தனது அனுபவத்தைப் பற்றி பேசுகையில், “Web3 தொழில்நுட்பத்தின் நுணுக்கங்களை ஆராய WAC Fellowship ஒரு பெறுமதிமிக்க வாய்ப்பை வழங்கியது. திட்டத்தின் முறையான மற்றும் நன்கு கட்டமைக்கப்பட்ட அணுகுமுறையின் மூலம், ஒவ்வொரு வாரமும் நடைபெற்ற அமர்விற்குப் பின்னால் உள்ள பாரிய நோக்கத்தைப் புரிந்துகொள்ளக் கூடியதாக இருந்தது,’’ என கூறினார். WAC Fellowship பயற்சியில் பின்வரும் நிறுவனங்களும் பங்குபற்றின: The Australian Centre for the Moving Image (அவுஸ்திரேலியா), Belvedere Museum (ஒஸ்திரியா), Haus der Kunst München (ஜேர்மனி), House of Electronic Arts (சுவிற்சர்லாந்து), பிரான்ஸ் நாட்டு கலாச்சார அமைச்சு (பிரான்ஸ்), Institute for Sound and Music (ஜேர்மனி), Musée d'Orsay மற்றும் Musée de l'Orangerie (பிரான்ஸ்), National Taras Shevchenko Museum (ArtAegis மற்றும் Modern Art Research Institute உடன் இணைந்து) - (யூக்ரைன்), The Reel Store (ஐக்கிய இராச்சியம்), The Royal College of Art (ஐக்கிய இராச்சியம்), மற்றும் Wooko Makandie Foundation (நெதர்லாந்து).

இந்நிகழ்ச்சித்திட்டமானது, கலாச்சாரத் துறையில் blockchainஇன் பங்கு; அடையாளம், பாதுகாப்பு, சட்ட மற்றும் சமூக தாக்கங்கள், இணைய விளையாட்டுகள், metaverse (கணனியில் உருவாக்கப்படும் மெய்நிகர் உண்மை), Web3 தொடர்புகள் மற்றும் சமூகத்தை கட்டியெழுப்புதல் ஆகியவற்றில் blockchainஇன் தாக்கத்தை உள்ளடக்கியது. மொத்தத்தில் 25 பயிற்சியாளர்கள், 50 வழிகாட்டிகள், 35 பாடங்கள், 10 நடைமுறைச் சவால்கள் மற்றும் 15 வழக்கு ஆய்வுகளை பங்கேற்பாளர்கள் அணுகக் கூடிய வாய்ப்பைப் பெற்றனர். “WAC Fellowship ஆனது, ஒரு கலாச்சார உருமாற்றத்தின் முன்னணியில் நிற்கின்றது; அது blockchain தொழில்நுட்பத்தின் மகத்தான ஆற்றல் வளத்தை நிறுவனங்கள் பயன்படுத்துவதற்கு சக்தி அளிக்கிறது” என்று We Are Museums மற்றும் WAC-Lab இன் நிறுவனர் டியான் ட்ருபே கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .