
இலங்கையின் முதற்தர கல்வி நிலையமான SLIIT இன் தகவல் தொழில்நுட்ப கற்கையை தொடரும் மாணவர்கள் கனடா அல்கோமா பல்கலைக்ககழகத்தில் 'கணினி அறிவியல் இளநிலை பட்டப்படிப்பினை' (Bachelor of Computer Science degree programmes) பூர்த்தி செய்வதற்கான வாய்ப்பினை வழங்கும் நோக்கில் கனடா அல்கோமா பல்கலைக்கழகத்துடன் கைகோர்த்துள்ளது. இந் நிகழ்வில் இரு நிறுவனங்கள் சார்பாகவும் SLIIT நிலையத்தின் தலைவரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான பேராசிரியர் லலித் கமகே மற்றும் அல்கோமா பல்கலைக்கழத்தின் சர்வதேச மாணவர் சேர்ப்பு பிரிவின் பணிப்பாளர் ஜொஹான் எல்வி ஆகியோர் ஒப்பந்தத்தை கைமாற்றிக் கொண்டனர்.
கனடா ஒன்டாரியோவில் அமைந்துள்ள அல்கோமா பல்கலைக்கழகமானது 40 வருடங்களுக்கும் மேலாக Liberel Arts மற்றும் அறிவியல் தொடர்பான சர்வதேச அங்கீகாரம் பெற்ற இளநிலை பட்டப்படிப்புகளை வழங்கி வருகிறது. அழகிய சுற்றுச் சூழலிலும், பலவித கற்றல் சூழலையும் கொண்டுள்ள இப் பல்கலைக்கழகமானது மாணவர்களிற்கு எண்ணற்ற கலாசார, சமூக மற்றும் திறந்தவெளி நடவடிக்கைகளை வழங்குகிறது. இப் பல்கலைக்கழகத்தின் சிறிய தொகுதி வகுப்பறை, கட்டணம், interactive கற்பித்தல் முறை மற்றும் ஒருங்கிணைந்த கல்வி ஆதரவு ஆகிய அனைத்தும் மாணவர்களிற்கு சிறந்த தெரிவாக அமையும்.
இப் பங்காண்மை மூலம் மாணவர்கள் Bachelor of Science in Business Systems Management மற்றும் Computer Games Technology and Computer Games Technology /Creative Arts போன்ற கற்கைகளை கனடாவின் அல்கோமா பல்கலைக்கழகத்தில் தொடர முடியும்.
அல்கோமா பல்கலைக்கழகமானது கம்ப்யூட்டர் கேம்ஸ் தொடர்பான டிசைன் பயிற்சிகள் மற்றும் புரோகிராம்களை உள்ளடக்கிய Computer Games Technology பட்டப்படிப்பினை வழங்கும் கனடாவின் ஒரேயொரு பல்கலைக்கழகமாக விளங்குகிறது. இந் நான்கு வருட கற்கையானது மாணவர்களிற்கு பிரமிக்கத்தக்க மற்றும் போட்டிமிக்க கணினி பொறியியல் கேம் மென்பொருள் உலகின் நவீன கற்கைகளை வழங்குகிறது.
இக் கல்வி பங்காண்மை மூலம் தகவல் தொழில்நுட்ப பட்டப்படிப்பினை தொடரும் எமது மாணவர்களிற்கு தங்கள் கற்கையை அல்கோமா பல்கலைக்கழகத்தில் Bachelor of Computer Science degree programme ஆக தொடர்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது' என SLIIT நிலையத்தின் தலைவர் எஸ்.கருணாரத்ன தெரிவித்தார். SLIIT நிலையத்தில் இரண்டு ஆண்டுகள் கற்ற மாணவர்கள் தங்கள் பட்டப்படிப்பினை அல்கோமா பல்கலைக்கழகத்தில் பூர்த்தி செய்ய முடியும்.
'SLIIT நிலையத்தின் வலுவான கல்வி மற்றும் துறைசார் தொடர்புகள் மாணவர்களிற்கு பல்வேறு கல்வி வாய்ப்புகளை வழங்குகிறது' என SLIITஇன் தலைவரும், பிரதான நிறைவேற்று அதிகாரியுமான பேராசிரியர் லலித் கமகே தெரிவித்தார். எனவே இத் துறையை முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய வகையிலான தகுதியான நிபுணத்துவ திறன்களை வழங்குகிறது. எமது மாணவர்கள் தேர்ந்தெடுத்த தொழிற்துறைகளில் வெற்றிகரமான நிபுணர்களை உருவாக்குவதே எமது கல்வி நிலையத்தின் குறிக்கோளாகும்' என்றார்.