2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

CBL நிறுவனத்திற்கு பல விருதுகள்

A.P.Mathan   / 2014 நவம்பர் 16 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


2014 SLIM வர்த்தகநாம சிறப்பு விருதுகள் விழாவில் சிலோன் பிஸ்கட்ஸ் லிமிடெட் (CBL) நிறுவனம் இரண்டு தங்க விருதுகள் உட்பட 8 விருதுகளை வென்று மீண்டும் ஒரு தடவை அதிகூடிய விருதுகளை தனதாக்கிக் கொண்டுள்ளது. இந்த வருடத்தில் போட்டியிட்ட மிகச்சிறந்த வர்த்தக குறியீடுகள் மத்தியில் நிறுவனம் அதன் சிறப்புத்தன்மை மற்றும் செயற்திறனை நிரூபனம் செய்திருந்தது.
 
SLIM வர்த்தகநாம சிறப்பு விருது விழாவின் 13 வருடகால வரலாற்றில் ஒவ்வொரு நிகழ்விலும் அதிகூடிய விருதுகளை வென்றெடுத்து CBL அதன் கீர்த்தியை தக்க வைத்துக் கொண்டுள்ளது' என சிலோன் பிஸ்கட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை பிரிவின் தலைவரும், குழும பணிப்பாளருமான நந்தன விக்ரமகே தெரிவித்தார். 'எமது போட்டியாளர்களை வெற்றி கொள்ளக்கூடிய வர்த்தகநாம மூலோபாயங்களை வித்தியாசமாகவும், முறைசார்ந்ததாகவும் மேற்கொள்ளும் எமது திறன் காரணமாகவே இந்த வெற்றியை தக்க வைத்துக்கொள்ள முடிந்துள்ளது' என மேலும் தெரிவித்தார்.
 
இந்த வருட விழாவில் மஞ்சி கொமே மற்றும் சமபோஷ ஆகிய வர்த்தகநாமங்கள் முறையே ஆண்டிற்கான புத்துருவாக்க வர்த்தகநாமம் மற்றும் வருடத்திற்கான சிறந்த CSR வர்த்தகநாமம் போன்றவற்றை வென்றெடுத்தன.
 
தெற்காசியாவிலேயே அரிசியினாலான முதலாவது கிராக்கர் வகை CBL இன் மஞ்சி கொமே ஆகும். உலக போக்குகள் தொடர்பான அறிவு மற்றும் ஜப்பான் மற்றும் தூர கிழக்கு நாடுகளின் தொழில்நுட்பத்துடன் CBL நிறுவனம் அண்மையில் இலங்கைச் சந்தையில் புதுமையான புதிய தயாரிப்பொன்றினை அறிமுகம் செய்திருந்தது. புதிய தயாரிப்புக்களை சந்தையில் அறிமுகம் செய்வதானது சந்தை முன்னோடியாகவுள்ள CBL இன் அந்தஸ்த்;தினை மேலும் உறுதி செய்கின்றது.
 
வருடத்திற்கான சிறந்த CSR வர்த்தகநாமம் விருதினை தொடர்ந்து ஐந்தாவது தடவையாக CBL வென்றது. CBL நிறுவனமானது அதன் வெவ்வேறு வர்த்தகநாமங்கள் ஊடாக CSR திட்டங்களை முன்னெடுத்து வருவதுடன், ஒவ்வொரு திட்டமும் சமூகத்தின் தரம் மற்றும் நலனை மேம்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
 
சமபோஷ ஊடாக மேற்கொள்ளப்படும் CSR திட்டங்கள் கிராமப்புற விவசாயிகளுடன் தொடர்பை கொண்டுள்ளது. இதன் பின்தங்கிய ஒருங்கிணைப்பு திட்டம் மூலம் 12,000 விவசாயிகளின் பயிர்களுக்கு உத்தரவாத விலை விதிக்கப்படுகின்றது. இதனூடாக விவசாய பொருளாதாரம் வலுப்படுத்தப்படுவதுடன், தேசிய விவசாய சமூகத்தின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கான ஆதரவும் வழங்கப்படுகிறது.
 
இதற்கு மேலதிகமாக, இந் நிறுவனம் அதன் பிரதான CSR செயற்திட்டமான 'கொவி பவுல' திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வாழ்வை மேம்படுத்தி வருகின்றது. இந்த செயற்திட்டத்தின் 'கொவி சதுட்ட', 'கொவி சரண', 'கொவி தெனும' மற்றும் 'கொவி அரண' போன்ற நான்கு செயற்திட்டங்களில் அவர்களது வாழ்க்கையை வலுப்படுத்த தேவையான வழிகாட்டல்கள் வழங்கப்படுகின்றன.
 
'சந்தையில் தனிச்சிறப்பினை எய்துவதற்கு புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் சமூக பொறுப்புணர்வு திட்டங்கள் எமக்கு உதவியுள்ளன. இந்த வெற்றிக்கு காரணமான இரு பிரிவுகளுக்கும் தங்க விருது கிடைத்தமையிட்டு நாம் மிகவம் மகிழ்ச்சியடைகின்றோம்' என விக்ரமகே தெரிவித்தார்.
 
CBL நிறுவனமானது, பிஸ்கட், இனிப்புகள், சீரியல், சேதன உணவு பொருட்கள் மற்றும் பலவற்றை கொண்ட முன்னணி வர்த்தகநாமங்களை உள்நாடு மற்றும் சர்வதேச ரீதியாக உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தி வரும் துரிதமாக வளர்ந்து வரும் பெருநிறுவனமாக விளங்குகிறது. இந் நிறுவனத்தின் மஞ்சி, ரிட்ஸ்பரி, லங்காசோய், சமபோஷ மற்றும் டியாரா போன்ற மிகப்பெரிய வர்த்தகநாமங்கள் அந்தந்த தயாரிப்பு பிரிவுகளில் சந்தை முன்னோடியாக விளங்குகிறது. இந்த வர்த்தகநாமங்களில் பெரும்பாலானவை 50% வீதத்திற்கும் அதிகமான சந்தைப் பங்கினை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X