
சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் பினான்ஸ் பிஎல்சி (CDB) நிறுவனமானது 2013/2014 முடிவடைந்த நிதியாண்டு காலப்பகுதியில் வரிக்கு பின்னரான இலாபத்தில் 13% வளர்ச்சியை பெற்று அதன் தொடர்ச்சியான வளர்ச்சி வேகத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. கொழும்பு பங்குசந்தையின் இடைக்கால முடிவுகளின் பிரகாரம், CDB ஆனது 2013 செப்டெம்பர் மாதத்துடன் முடிவடைந்த ஆறு மாதங்களில் 270.97 மில்லியன் ரூபாவை பெற்றுள்ளது.
வரிக்கு முன்னரான இலாபம் ரூ.355 மில்லியன் அதே அடிப்படையில் 24% ஆல் அதிகரித்திருந்தது. கடந்த ஆறு மாதங்களுக்கான விரிவான மொத்த வருமானம் 414.51 மில்லியன் ரூபா ஆகும்.
CDB நிறுவனமானது கடந்த 2013 செப்டெம்பர் 30ஆம் திகதியன்று முடிவடைந்த ஆறு மாதத்திற்கான ஐந்தொகை குறிப்பு 29.1 பில்லியன் ரூபாவாக பதிவு செய்யப்பட்டிருந்ததுடன், இது கடந்த வருட தணிக்கை ஐந்தொகையை விட 19% வீதத்தால் வளர்ச்சியடைந்திருந்தது. மொத்த வருமானம் 2.9 பில்லியன் ரூபாவை பிரதிபலிக்கும் வகையில், வருவாய் 52% வீதத்தாலும், தேறிய வட்டி வருமானமானது ரூபா 1095 மில்லியனாக 44% வீதத்தாலும் அதிகரித்திருந்தது. இந்த ஆண்டின் செப்டெம்பர் மாத இறுதியில் 3.27 பில்லியன் ரூபா தேறிய சொத்து பெறுமதியில் பங்கொன்றிற்கான வருவாய் ரூ.4.99 ஆகவும், பங்கொன்றிற்கான தேறிய சொத்து பெறுமதி ரூ.60.20 ஆகவும் காணப்பட்டது.
குறித்த காலப்பகுதியில், CDB நிறுவனத்தின் சொத்து ஆதரவு கடன் புத்தகம் 19% அல்லது ரூ.23.2 பில்லியன் வளர்ச்சியை காட்டிய அதேசமயம், நிலையான வைப்புகள் ரூ.21.38 பில்லியனாக (வளர்ச்சியில் 20%) பதிவு செய்யப்பட்டது. CDB இன் சேமிப்பு வைப்புகளின் மொத்த தொகை 500 மில்லியனை விட அதிகரித்துள்ளது. CDB நிறுவனமானது வழக்கமான பணப்புழக்கம் மற்றும் வட்டி தாங்கும் சொத்துக்களில் 90% வீத ஐந்தொகை சொத்துக்களை பேணி திடமான திரவநிலையை உறுதி செய்வதுடன், சட்டமுறை மூலதன மற்றும் திரவத்தன்மை விகிதங்களை தேவைக்கு அதிகமாக தன்னகத்தே கொண்டுள்ளது.
CDB நிறுவனமானது 12 புதிய கிளைகளை திறந்து அதன் நேரடி தொடர்புடைய விநியோக வலையமைப்பினை நாடுபூராகவும் 56 ஆக விஸ்தரித்துள்ளது. இதன் மூலம் கொமர்ஷல் வங்கியின் நாட்டின் மிகப்பெரிய ATM வலையமைப்பு மற்றும் VISA வர்த்தகநாமம் கொண்ட ATM அட்டைகளுக்கு உலகின் எப்பாகத்திலிருந்தும் அணுகுவதற்கான வரப்பிரசாதம்; அடங்கிய 24 மணிநேர சேவை ஆண்டின் 365 நாட்களும் வழங்கப்படுகிறது. CDB ஆனது அதன் CDB VISA சர்வதேச வரவட்டை (Debit Card) மூலம் வாடிக்கையாளர் கணக்குகளை மேற்கொள்வதற்கான வசதியை வழங்குகிறது.
சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் பினான்ஸ் பிஎல்சி (CDB) நிறுவனமானது, அண்மையில் வளரும் நாடுகளுக்கான பெல்ஜிய முதலீட்டு நிறுவனத்திடமிருந்து (BIO) 6 மில்லியன் அமெரிக்க டொலர்களை(ரூ.780 மில்லியன்) பன்னாட்டு முதலீடாக பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.