
பாதுகாப்பான மின் வயர்கள் மற்றும் தொடர்பாடல் வயர்களை விநியோகிப்பதில் முன்னிலையில் திகழும் வர்த்தக நாமமான, களனி கேபிள்ஸ் பிஎல்சி நிறுவனம், இலங்கை தேசிய நிர்மாண சம்மேளனத்தின் 'Construction awards – 2013' வருடாந்த நிகழ்வுக்கு பிரதான அனுசரணையை வழங்கியிருந்தது. இந்த நிகழ்வு வடமத்திய மாகாணத்தில் அண்மையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வும் நிர்மாணத்துறையுடன் தொடர்புடைய விருதுகள் வழங்கும் நிகழ்வு அனுராதபுரம் 'மிரிதிய ஹோட்டலில்' நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு வட மத்திய மாகாணத்தின் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் பூரண ஆதரவை வழங்கியிருந்ததுடன், நிர்மாணத் துறையை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் களனி கேபிள்ஸ் நிறுவனத்தின் வர்த்தக நாம அபிவிருத்தி முகாமையாளர் சன்ன ஜயசிங்க கருத்து தெரிவிக்கையில், 'நிர்மாணத்துறையுடன் களனி கேபிள்ஸ் நிறுவனம் உறுதியான உறவை தொடர்ந்து பேணி வருகிறது. இந்த துறையின் வளர்ச்சிக்கு தனது தொடர்ச்சியான பங்களிப்பையும் வழங்கி வருகிறது' என்றார்.
இலங்கை தேசிய நிர்மாண சம்மேளனம் என்பது நாட்டின் நிர்மாணத்துறையில் மிகவும் புகழ்பெற்ற ஒரு அமைப்பாகும். வட மத்திய மாகாண கிளையை பிரதிநிதித்துவப்படுத்தும் பெருமளவான ஒப்பந்ததாரர்கள் நிர்மாணத்துறையில் பாண்டித்தியம் பெற்றவர்களாக திகழ்கின்றனர். இவர்களில் பலருக்கு இந்த நிகழ்வின் போது பெருமைக்குரிய ICTAD விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது.
ஜயசிங்க தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், 'இந்த நிகழ்வுக்கு அனுசரணை வழங்க களனி கேபிள்ஸ் நிறுவனம் தீர்மானத்தமைக்கு மற்றுமொரு காரணம், நிர்மாணத்துறையைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு, இந்த துறையில் காணப்படும் நவீன நுட்ப முறைகள் குறித்து ஏனையவர்களுக்கும் அறிந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக காணப்பட்டது. இந்த மதிப்புக்குரிய காரியத்தை துறையின் அபிவிருத்தியை கருத்தில் கொண்டு வழங்கியிருந்தோம். எதிர்காலத்திலும் இது போன்ற தேசிய திட்டங்களுடன் கைகோர்க்க நாம் திட்டமிட்டுள்ளோம்' என்றார்.
களனி கேபிள்ஸ் என்பது 100 வீதம் இலங்கையை சேர்ந்த கம்பனியாகும். சுமார் 43 வருட காலமாக இலத்திரனியல் மற்றும் தொடர்பாடல் கேபிள்களை உற்பத்தி செய்வதில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
அண்மையில் நிறைவடைந்த SLIM வர்த்தக நாம சிறப்பு விருதுகள் 2012 இல், களனி கேபிள்ஸ் பிஎல்சி நிறுவனத்துக்கு சிறந்த வர்த்தக நாமத்துக்கான வெண்கல விருது வழங்கப்பட்டிருந்தது. களனி கேபிள்ஸ் நிறுவனத்துக்கு தரச்சிறப்புக்கான ISO 9000:2008 சான்று, சிறந்த சூழல் முகாமைத்துவத்துக்கான ISO 14001:2004 தரச்சான்றும் வழங்கப்பட்டுள்ளன. தய்கி அகிமொடோ 5ளு விருதுகளின் தங்க விருதும் களனி கேபிள்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
இலத்திரனியல் மற்றும் தொலைத்தொடர்பாடல்கள் துறையில் 'சுப்பர் பிராண்ட்ஸ்' தர விருதையும் 2008ஆம் ஆண்டில் களனி கேபிள்ஸ் பெற்றுள்ளது.