2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

King Long ரக பயணிகள் போக்குவரத்து வாகனங்களை அறிமுகம் செய்யும் சொஃப்ட்லொஜிக்

A.P.Mathan   / 2014 நவம்பர் 16 , பி.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


சொஃப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் அங்கத்துவ நிறுவனமான சொஃப்ட்லொஜிக் ஒடொமொபைல்ஸ் (பிரைவேற்) லிமிடெட் தனது புத்தம் புதிய King Long ரக பயணிகள் போக்குவரத்து வாகனங்களை அறிமுகம் செய்துள்ளது. பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் இடம்பெற்ற நிகழ்வில் இந்த அறிமுகத்தை மேற்கொண்டிருந்தது. இந்நிகழ்வில், தனியார் போக்குவரத்து சேவைகள் அமைச்சர் சி.பி.ரத்நாயக்க, இலங்கைக்கான சீனாவின் உயர்ஸ்தானிகர் வு ஜியாங்கோ, King Long இன் சந்தைப்படுத்தல், வெளிநாட்டு விற்பனை ஆசியா பசுபிக் பிராந்தியத்தின் பிராந்திய முகாமையாளர் அனட்ரியு சென், King Long இன் சந்தைப்படுத்தல், வெளிநாட்டு விற்பனை ஆசியா பசுபிக் பிராந்தியத்தின் விற்பனை சிறப்பதிகாரி அன்டி சென், சொஃப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் தலைவர் அஷோக் பத்திரகே, வாகனங்கள பிரிவு மற்றும் கம்பனியின் நிர்வாகியான சுமிந்த டி சில்வா ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
இந்த முன்னோடியான பங்காண்மைக்கு அமைவாக, சொஃவ்ட்லொஜிக் ஒடொமொபைல்ஸ் பிரைவேற் லிமிடெட், சொகுசான King Long பஸ் XMQ6900Y மற்றும் XMQ6117Y மாதிரிகள் உள்ளடங்கலாக மற்றும் King Long Kingo பயணிகள் வேன் மற்றும் மினி வேன் வகைகளை இலங்கையில் அறிமுகம் செய்துள்ளது. பஸ் தெரிவுகள் 29, 37, 45, 49 மற்றும் 59 இருக்கைகளை கொண்டதாக அமைந்துள்ளது. ஜேர்மன் நாட்டு தொழில்நுட்பத்துக்கமைய தயாரிக்கப்பட்டதாகும். Kingo வேன் என்பது full option பயணிகள் வாகனமாகும். 15 ஆசனங்களை கொண்டது. உட்பகுதி லெதர் கட்டமைப்பை கொண்டதுடன், 2.5l inter cool turbo என்ஜினை கொண்டது.
 
இந்த தயாரிப்புகள் அறிமுகம் தொடர்பில் வாகனங்கள பிரிவு மற்றும் கம்பனியின் நிர்வாகியான சுமிந்த டி சில்வா கருத்து தெரிவிக்கையில், 'இன்று நாம் இலங்கைச் சந்தையில் சொகுசான பயணிகள் போக்குவரத்து வாகனங்களை அறிமுகம் செய்வதையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். போக்குவரத்து துறை தொடர்பில் அதிகளவு கவனம் செலுத்தப்படும் நிலையில், எமது நாட்டின் சுற்றுலா அபிவிருத்தி மற்றும் புதிய போக்குவரத்து கட்டமைப்பின் அறிமுகம் போன்றன இந்த துறையில் புதிய வாகனங்களின் தேவையை ஏற்படுத்தியுள்ளன. King Long உடனான எமது பங்காண்மை என்பது எமது உள்நாட்டு சொகுசு போக்குவரத்து துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கும் என நாம் நம்புகிறோம். சொஃப்ட்லொஜிக் உடன் இணைந்து King Long பாவனையாளர்களின் மாறுபட்டு வரும் தேவைகள் பற்றி கவனம் செலுத்துகிறது. இதன் மூலம் தொடர்ச்சியாக நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உயர் தரம் வாய்ந்த தயாரிப்புகளை உற்பத்தி செய்ய தன்னை அர்ப்பணித்துள்ளது' என்றார்.
 
King Long புதிய பஸ் தெரிவுகள், பாரம்பரிய சர்வதேச வடிவமைப்பை கொண்டனவாக அமைந்துள்ளன. வட்டமான மற்றும் மிருதுவான உடல் கட்டமைப்பை கொண்டுள்ளன. இதன் காரணமாக சிறந்த தோற்றத்தை பெற்றுள்ளன. உட்பகுதியும், சிறந்த உயர்தர வடிவமைப்பை கொண்டுள்ளது. மடித்துக் கொள்ளக்கூடிய பொதிகள் வைக்கும் பகுதி, வழி top interior air duct மற்றும் front and back molding roof ஆகியவற்றை கொண்டுள்ளன.
 
சொஃப்ட்லொஜிக் ஒடொமொபைல்ஸ் பிரைவேற் லிமிடெட் நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கான தலைமை அதிகாரி ஷிஹான் டி திசெரா கருத்து தெரிவிக்கையில், 'எமது வாடிக்கையாளர்களுக்கு தமது தேவைகளுக்கமைய இந்த தெரிவுகளை மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய வசதியும் காணப்படுகிறது. இலங்கையில் பரிபூரண போக்குவரத்து தீர்வுகளை வழங்கும் நிறுவனமாக படிப்படியாக சொஃப்ட்லொஜிக் ஒடொமொபைல் முன்னேற்றம் கண்டுள்ளது. எமது தொழில்நுட்ப செயலணியை சேர்ந்தவர்கள் சர்வதேச பயிற்சிகளை பெற்றுள்ளனர். இவர்கள் தொழிலநுட்ப பழுதுபார்ப்பு மற்றும் சேவைகள், விபத்து பழுதுபார்ப்புகள் மற்றும் பொடி ஷொப் பழுதுபார்ப்புகளை மேற்கொள்ளும் திறன் படைத்தவர்கள்' என்றார். 
 
King Long மினி வேன், சாதாரண விநியோகம், நோயாளர் காவு வண்டி, பணம் கொண்டு செல்லும் வண்டி போன்ற செயற்பாடுகளுக்கு பயன்படுத்தும் வகையிலும் மாற்றியமைத்துக் கொள்ளக்கூடியது. அது போல Kingo வேன் என்பது சுற்றுலாத்துறைக்கு சிறந்த தெரிவாக அமைந்திருக்கும். சிறிய குழுவினருக்கு சொகுசான பயணத்தை அனுபவிக்கக்கூடிய வசதியை வழங்கும். வங்கிகள், பாதுகாவலர் கம்பனி, சிறிய அளவிலான வியாபாரங்கள் போன்றனவும் இந்த வண்டியின் மூலம் அனுகூலங்களை பெற்றுக் கொள்ள முடியும். பஸ் தெரிவுகளின் விலை 8.5 மில்லியன் ரூபாவிலிருந்து ஆரம்பமாவதுடன், இவை 2 வருடம் அல்லது 100இ000 கிலோமீற்றர்கள் வரையிலான உத்தரவாத்தையும் கொண்டுள்ளது.









  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X