.jpg)
சந்திரா சேனநாயக்க ஹோல்டிங்ஸ் குழுமத்தின் அங்கத்துவ நிறுவனமான சுவிடிஷ் டிரேடிங் ஓடியோ விசுவல் (பிரைவேற்) லிமிடெட், சர்வதேச ரீதியில் அதிகளவு விற்பனையாகும் வர்த்தக நாமமான 'KV2 Audio' மற்றும் அமெரிக்காவை தளமாக கொண்டியங்கும் பிரபல வர்த்தக நாமமான Shure தயாரிப்புகளை இலங்கையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த அறிமுக நிகழ்வு கொழும்பு ப்ளும்ஃபீல்ட் மைதானத்தில் அண்மையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் KV2 Audio வர்த்தக நாமத்தை பிரதிநிதித்துவப்படுத்தி KV2 Audio இன்டர்நஷனல் நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் டேவ் குரொக்ஸ்டன் கலந்து கொண்டிருந்தார்.
இந்த அறிமுக நிகழ்வில் 300 அதிகமான விருந்தினர்கள் கலந்து கொண்டிருந்ததுடன், இவர்கள் புத்தம் புதிய KV2 மற்றும் Shure தயாரிப்புகளை வௌ;வேறு சந்தை துறைகளான நிறுவனங்கள், பொது நிறுவனங்கள் மற்றும் அரச தாபனங்கள், இசை மற்றும் களிப்பூட்டும் பகுதிகள் போன்றவற்றுக்கு எவ்வாறு பொருத்தமானதாக அமைந்துள்ளன என்பதை நேரடியாக பார்வையிட்டிருந்தனர். இந்த பங்காண்மையின் மூலமாக துறையை சேர்ந்த இரு முன்னணி நிறுவனங்கள், உள்நாட்டு ஒலி, ஒளித் துறைக்கு புத்தமைவு மற்றும் உயர் தரத்துடன் கூடிய சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தயாரிப்புகளை விநியோகிக்க இலங்கையின் முன்வந்துள்ளன.
சுவிடிஷ் டிரேடிங் ஓடியோ விசுவல் (பிரைவேற்) லிமிடெட் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் துலித் சேனாநாயக்க கருத்து தெரிவிக்கையில், 'நிபுணத்துவத்துடன் கூடிய உலகின் பிரபல்யமான ஓடியோ மற்றும் மைக்குரோஃபோன்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள இரு நிறுவனங்களுடன் கைகோர்ப்பதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்த புத்தமைவான தயாரிப்புகளை விநியோகிக்கும் வகையில் உயர் பயிற்சிகளை பெற்ற குழுவினரை எமது செயலணியில் நாம் கொண்டுள்ளோம். எமது பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு நாம் வழங்கும் அர்ப்பணிப்பை இது உறுதி செய்வதாக அமைந்துள்ளது' என்றார்.
சுவிடிஷ் டிரேடிங் ஓடியோ விசுவல் நிறுவனத்தை சேர்ந்த சகல ஊழியர்களும் உள்நாட்டு சந்தைக்கேற்ப சேவைகளை வழங்கும் வகையில், சர்வதேச ரீதியிலமைந்த பயிற்சிகளை பெற்றுள்ளனர்.