.jpg)
இந்த நத்தார் காலத்தில் பெண்களின் அழகினை மெருகேற்றிக் காட்டக்கூடிய வகையில் சிவப்பு நிறத்தினாலான Lace Allover Winter 2014 பிரா மற்றும் ஏனைய உள்ளாடை தெரிவுகளை டிரையம்ப் அறிமுகம் செய்துள்ளது.
டிரையம்ப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள சிவப்பு உள்ளாடைத் தெரிவுகள் இந்த பருவ காலப்பகுதியில் தங்கள் அழகினை மிகச்சிறப்பாக வெளிப்படுத்த விரும்பும் நவீன பெண்களுக்கு பொருத்தமானதாக அமைந்துள்ளது. Lace Allover தெரிவுகள் சௌகரியத்தையும், ஆடம்பரமான தோற்றத்தையும் வழங்குவதுடன், நேர்த்தியாக காட்டக்கூடியதாக உள்ளது.
'மிகவும் அழகிய இந்த புதிய தெரிவுகளின் மென்மையான பூர்த்தி மற்றும் இழுபடக்கூடிய சிவப்பு மலர் சரிகை துணியானது இந்த பருவ காலத்தில்; அணிபவரின் தோற்றத்தை மேம்படுத்திக் காட்டுகிறது. இந்த பிரா வகைகள், நாள் முழுவதும் சௌகரியத்தையும், கவர்ச்சியூட்டும் தோற்றத்தையும் வழங்குகிறது' என டிரையம்ப் இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் செயற்பாட்டு தலைவர் அமல் பெர்னாண்டோ தெரிவித்தார்.
'பேஷன் துறையில் எதிர்பார்ப்புக்களை உருவாக்கி வரும் டிரையம்ப் இன்டர்நெஷனல் நிறுவனமானது வாடிக்கையாளர்களுக்கு என்றுமே உயர் தரமானதும், சௌகரியமானதுமான உற்பத்திகளை வழங்குவதில் முன்னோடியாக உள்ளது' என மேலும் அவர் தெரிவித்தார்.
நேர்த்தியான லேஸ் துணியில் கனகனச்சிதமான பொருந்தக்கூடிய உள்ளாடைகளின் பல்வேறு தெரிவுகள் இந்த பண்டிகை காலத்தில் டிரையம்பிடமிருந்து உங்களுக்கு கிடைத்த விசேட பரிசாக அமைந்துள்ளது. மிகச்சிறிய லேஸ் கப்கள் மற்றும் கழற்றக்கூடிய பட்டிகளை கொண்ட இந்த பிரா வகைகளை ரீ-சேர்ட் உடனோ அல்லது low cut Tops உடனோ அணிய முடியும். இந்த நத்தார் காலத்தில் Lace Allover ஐ அணிந்து மகிழ்சியான அனுபவத்தை பெற்றிடுங்கள்.
.jpg)