2024 மே 02, வியாழக்கிழமை

oDoc இடமிருந்து oLife அறிமுகம்

Freelancer   / 2023 ஜூன் 30 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

oDoc ஆனது oLife எனப்படும் மருத்துவ ஆலோசனைக்கான செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இச் செயலியானது வாழ்க்கையின் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அனுபவமிக்க நிபுணர்களின் வழிகாட்டுதலில் விரிவான வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கை பன்முகத்தன்மை கொண்டதென்பதை புரிந்து கொண்டு மருத்துவ ஆலோசனைகளுக்கு அப்பால் நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளும் தளமாக oLife மெய்நிகர் ஆலோசனை செயலி செயற்படுவதை நோக்கமாக கொண்டுள்ளது. பயனர்களின் மேம்பட்ட வாழ்க்கை முறைக்கு பொருத்தமான பரிபூரணமான வழிகாட்டல்கள் மற்றும் ஆலோசனைகளை விரல் நுனியில் பெற்றுக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பயனர்களின் பிரத்தியேக வளர்ச்சி மற்றும் நலனை கருத்திற் கொண்டு ஆதரவை வழங்கக்கூடிய அனுபவம் வாய்ந்த நிபுணர் குழுவை அணுகுவதனூடாக நிதி ஆலோசனை, உறவு மற்றும் திருமண ஆலோசனை, உடற்தகைமை மற்றும் ஆரோக்கியம், இசை ஆலோசனை, வாழ்க்கை பயிற்சி மற்றும் நலன் பேணல் பிரிவுகளில் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

oDoc கட்டமைப்பில் மேற்குறிப்பிட்ட பிரிவுகளுக்கு மேலதிகமாக வாழ்க்கையில் எழும் சவால்கள் மற்றும் வாய்ப்புக்களை பற்றி தெளிவூட்டவும் oLife எதிர்பார்க்கின்றது. தனி நபர்கள் தங்கள் நிதியை நிர்வகிப்பது, உறவுகளை கட்டியெழுப்புதல், ஆரோக்கியமாக திகழ்தல், இசை தொடர்பான தமது ஆர்வத்தை தொடர்தல் போன்ற பல்வேறு வாழ்க்கை தெரிவுகளை கண்டறிவது போன்ற சகல வழிகாட்டல்களையும் பெற்றுக் கொடுக்க oLife முன்வந்துள்ளது. இவ்வாறாக பயனர்களுக்கு பரிபூரண ஆதரவை பெற்றுக் கொடுப்பதன் மூலம் நிறுவனத்தின் அர்பணிப்பும் பிரதிபலிக்கின்றது.

oLife நிபுணர் குழுவானது மக்களின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய உயர் தகைமை வாய்ந்த ஆலோசகர்கள் நிபுணத்துவம், துறைசார் அறிவு மற்றும் அர்ப்பணிப்பு போன்றன உறுதி செய்யப்பட்டு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். நிபுணர்களுடன் மெய்நிர் முறையில் தொடர்பு கொண்டு பிரத்தியேக தேவைகளுக்கு பொருத்தமான ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளக்கூடிய கட்டமைப்பை அறிமுகம் செய்துள்ளதையிட்டு oLife பெருமை கொள்கின்றது.

oLife இன் பிரதம நிறைவேற்று அதிகாரி நபில் மில்ஹான் கருத்து தெரிவிக்கையில், “பிரத்தியேக வளர்ச்சி மற்றும் நலன்பேணல் ஆகியவற்றில் புரட்சியை தூண்டி வருகின்றோம். நாம் வாழும் வாழ்க்கையை போல நிபுணர் ஆலோசனைக்கான அணுகலும் வேறுபட்டதாக இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. oLife மூலம் தனிநபர்கள் மற்றும் நிபுணர்களின் வழிக்காட்டுதலுக்கிடையிலான தடைகளை உடைத்து எல்லைகளை விரிவுபடுத்துகின்றோம். எங்கள் பயனர்கள் ஆலோசனைகளை மட்டும் பெற்றுக்கொள்ளவில்லை. மாறாக ஒவ்வொரு சவாலின் போதும் அவர்களுக்கு ஆதரவை வழங்கக்கூடிய சமூகத்தில் அங்கம் பெற்று வாழ்க்கை பயணத்தில் வெற்றி பெறுகிறார்கள்.” என்றார்.

oDoc பயனர்கனை oLife இனூடாக உலத்தை ஆராயவும் வித்தியாசத்தை அனுபவிக்கவும் அழைக்கின்றது. oLife இயங்குதளம் oDoc செயலியில் பெற்றுக் கொள்ள முடியும். பயனர்கள் சுய வளர்ச்சி மற்றும் நிறைவை கண்டறியும் பயனத்தை ஆரம்பிப்பதோடு உண்மையான திறன் மற்றும் நல்வாழ்வை oLife மூலம் அமைத்துக் கொள்ளலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .