.jpg)
இலங்கையின் முதற்தர கல்வி நிலையமான SLIIT ஆனது, ஐக்கிய இராச்சியத்தின் ஸெஃபீல்ட் ஹலாம் பல்கலைக்கழகத்தின் தொலைத் தொடர்பாடல் மற்றும் மின்னணு பொறியியலில் முதுகலை பாடநெறிக்கான (MSc. In Telecommunications and Electronic Engineering) புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ள தொடங்கியுள்ளது.
இந்த முதுமானி பட்டதாரி திட்டமானது, இலத்திரனியல் மற்றும் தொலைத் தொடர்பாடல் பொறியியற் துறையில் தமது திறன்களை மேம்படுத்தி நிபுணர்களாக வர விரும்புவர்களுக்கு ஏற்ற வகையில் பொறியியல் மற்றும் சம்பந்தப்பட்ட அறிவியல் துறை சார்ந்த பின்னணியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த உயர் பட்டதாரி கற்கையானது மாணவர்களிற்கு தற்போதைய தொலைத் தொடர்பாடல் மற்றும் மின்னணு முறைமைகள் தொடர்பான வடிவமைப்பு, அபிவிருத்திகள் குறித்த தகவல்களை வழங்குகிறது. மேலும் மாணவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த தலைப்பின் பிரகாரம் திட்ட மேற்பார்வையாளரின் உதவியுடன் பிரதான திட்டத்தை பூர்த்தி செய்தல் வேண்டும்.
'சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட தொலைத் தொடர்பு மற்றும் மின்னணு பொறியியல் முதுமானி பட்டதாரி கற்கை மூலம் மாணவர்கள் தொலைத் தொடர்பு மற்றும் மின்னணு பொறியியற் துறை குறித்த ஆழமான தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும்' என SLIIT இன் தலைவர் பேராசிரியர் எஸ்.கருணாரத்ன தெரிவித்தார். 'இந்த பாடத்திட்டமானது நவீன தொலைத் தொடர்பாடல் முறைமைகளில் உள்ள முக்கிய பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கு ஏற்ப மாணவர்களை தயார்படுத்தும் வகையில் நடைமுறை பயிற்சிகள், கல்வி ஆராய்ச்சிகள் மற்றும் பிரச்சனை தீர்க்கும் முறைகள் மூலம் கட்டமைக்கப்பட்டுள்ளது' என மேலும் அவர் தெரிவித்தார்.
தொலைத் தொடர்பாடல் மற்றும் மின்னணு பொறியியலில் முதுகலை, மற்றும் Postgraduate டிப்ளோமா கற்கையானது சனிக்கிழமைகளில் கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள மெட்ரோபொலிடன் கம்பஸிலும், ஞாயிற்றுக் கிழமைகளில் SLIIT மாலபே கம்பஸ் வளாகத்திலும் நடைபெறவுள்ளது.
தொலைத் தொடர்பு மற்றும் மின்னணு பொறியியலில் முதுகலை அல்லது டிப்ளோமா பாடத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் SHU-UKஇல் இலத்திரனியல் பொறியியலில் கௌரவ B.Eng பட்டம் அல்லது SLIIT இன் ஒப்புதலை பெற்ற சம்பந்தப்பட்ட துறையில் அங்கீகாரம் பெற்ற பட்டம், கூட்டு அங்கத்துவம், பட்டதாரி அங்கத்துவம் அல்லது SLIIT அங்கத்துவத்தை பெற்ற பின்னர் துறைசார் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் குறைந்தபட்சம் ஒரு வருட அனுபவத்தை பெற்றிருத்தல் அவசியமாகும். மேலதிக விபரங்களை www.sliit.lk எனும் இணையத்தள முகவரி ஊடாக பெற்றுக்கொள்ளலாம்.