
இலங்கையின் முன்னணி தகவல் தொழில்நுட்ப உயர் கல்வியை வழங்கும் கல்வியகமான SLIIT உடன் ஐரோப்பிய ஒன்றியம் கைகோர்த்துள்ளதுடன், இதன் மூலம் 2014/2015 காலப்பகுதிக்கான Erasmus Mundus Action II திட்டமான South-East-West Mobility for Advanced Research, Learning, Innovation Network and Knowledge (SMARTLINK), உடன் இணைந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவிகளின் கீழ் முன்னெடுக்கப்படும் திட்டமாக Erasmus Mundus அமைந்துள்ளது. இந்த திட்டத்தினூடாக 19 இதர ஐரோப்பிய ஒன்றிய மற்றும் ஆசிய பல்கலைக்கழகங்களுடன் மாணவர்களுக்கு கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும்.
இந்த திட்டத்தின் மூலம் தற்போதைய பங்காண்மையை மேலும் உறுதி செய்யும் வகையில் அமைந்திருப்பதுடன், ஐரோப்பிய ஒன்றியம், தெற்காசிய நாடுகள் மற்றும் கிழக்கு நாடுகளின் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றுக்கிடையில் சிறந்த பரஸ்பர பங்காண்மையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்த திட்டத்துக்கான கொடுப்பனவுக்கமைய, SLIIT க்கு ஒன்பது நடமாடும் செயற்பாடுகள் தமது மாணவர்களுக்கும் இளம் ஆய்வாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதில் சகல பிரிவு கற்கைகளும் உள்ளடங்கியுள்ளன. இந்த திட்டம் முன்னெடுக்கப்படும் 48 மாத காலப்பகுதியில் 1201040 நபர்கள் இணைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
பிராந்தியத்தைச் சேர்ந்த 22 பங்காளர்களில் ஒன்றாக SLIIT ஐ ஐரோப்பிய ஒன்றியம் தெரிவு செய்துள்ளது. அரச சார்பற்ற ஒரே கல்வியகமாக இந்த பெருமைக்குரிய Erasmus Mundus Action II திட்டத்துக்காக SLIIT அமைந்துள்ளது.
SLIIT கல்வியகத்துக்கு பெருமளவு வெளிநாட்டு கல்வியகங்களுடன் ஆய்வு ரீதியான தொடர்பை ஏற்படுத்தும் வகையில் இந்த Erasmus திட்டம் அமைந்திருக்கும். மேலும், இந்த ஒன்பது நடமாடும் ஆய்வு செயற்பாடுகளுக்காக SLIIT க்கு 5,000 யூரோக்கள் வழங்கப்படும்.
2004 இல் அறிமுகம் செய்யப்பட்ட Erasmus திட்டம் ஐரோப்பா மற்றும் ஆசியா ஆகிய நாடுகளுக்கிடையில் பிணைப்பை ஏற்படுத்தி பொருளாதார, கலாசார மற்றும் விஞ்ஞான ரீதியிலான பரிமாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.