2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

SLIIT ஏற்பாட்டில் நடைபெறவுள்ள 'CODEFEST 2013'

A.P.Mathan   / 2013 ஓகஸ்ட் 12 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


கடந்த 2012ஆம் நடைபெற்ற Robofest நிகழ்வின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, SLIIT கல்வி நிலையத்தின் கணினி பிரிவின் மூலம் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக இவ்வருடமும் CODEFEST 2013 நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
CODEFEST ஆனது மாணவர்களின் திறமைகள் மற்றும் இலங்கையின் மென்பொருள் அபிவிருத்தி துறைக்கு உதவிகளை வழங்கும்; நோக்கில் நாடுமுழுவதும் நடாத்தப்படுகின்ற மென்பொருள் போட்டியாகும். இவ்வகையான போட்டிகளை நடத்தி நாட்டினை அறிவுசார் மையமாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கான பங்களிப்பினை வழங்குவதே SLIIT இன் எதிர்பார்ப்பாகும்.
 
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி இறுதிப் போட்டிக்கு இணையாக நடைபெறவுள்ள Mini Hackathon மற்றும் புதிர் வினா விடை போட்டியில் இடைநிலை பாடசாலை மற்றும் மூன்றாம்நிலை மட்ட மாணவர்கள் பங்குபற்ற முடியும். வரையறுத்த கற்கை வெளிப்பாடுகளை எய்துவதற்காக பங்குபற்றுநர்கள் அனைவரும் தொடர்பாடல் கட்டமைப்பு ஒன்றை உருவாக்கி அதன் மூலம் மாணவர்களின் அறிவை விருத்தி செய்யவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
 
இடைநிலை பாடசாலை பிரிவிற்கான புதிர் வினா விடை போட்டியானது பாடசாலை அணிகளுக்காக நடைபெறும் பட்டறைகளில் ICT பாடத்திட்டம் அடிப்படையில் அணியினர் கேள்வி கேட்கும் போது நடைபெறவுள்ளது. சிறந்த 10 அணிகள் இரண்டாம் சுற்றுக்கு தெரிவு செய்யப்படவுள்ளதுடன், மாபெரும் இறுதிச்சுற்றுக்கு 5 அணிகள்; தேர்ந்தெடுக்கப்படும். சிறந்த முதல் மூன்று அணிகளுக்கு விருதுகள் மற்றும் ரூ80,000, ரூ.60,000 மற்றும் ரூ.40,000 பெறுமதியான பணப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளன. மேலும் சிறந்த புத்தாக்க மற்றும் ஆக்கத்திறன் வாய்ந்த மென்பொருள் ஒன்றினை உருவாக்கும் அணிகளுக்கு இரண்டு விருதுகளும் வழங்கப்படவுள்ளன.
 
மூன்றாம்நிலை பிரிவில் மென்பொருள் போட்டி மற்றும் Mini Hackathon உள்ளடக்கப்பட்டுள்ளது. இப் போட்டியில் பல்கலைக்கழகங்கள் உட்பட இலங்கையின் எந்தவொரு உயர்கல்வி நிலையத்தின் மாணவர்களும் பங்குபற்ற முடியும். இலங்கை சமூகத்தின் தற்போதைய தேவைகளுக்கு ஆதரவான சூழலுக்கு பொருத்தமான மொபைல் பயன்பாட்டினை (context-aware mobile application) பங்குபற்றுநர்கள் உருவாக்குதல் வேண்டும். பயன்பாட்டு பிரிவுகளை சேர்த்துக்கொள்ள முடியும். ஆனால் அது தீர்வுகள் இலக்கு பயணம், கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல், சமூக இணக்கம் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகள் போன்ற பிரிவுகளுக்கு மட்டுமல்ல. இந்த சூழலியல் பயன்பாட்டானது புவியியல் இடம், சூழல் நிலைமைகள் அல்லது பயன்பாட்டிற்கு ஏற்ற பொருத்தமான இடமாக இருக்க முடியும். நாட்டின் முன்னேற்றத்திற்கு நன்மையளிக்கக் கூடிய இடங்கள் அடிப்படையிலான பயன்பாடுகள் மற்றும் சூழலியல் உணர் பயன்பாடுகளில் புதிய வடிவங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன. இப் போட்டியில் வெற்றியீட்டும் முதல் மூன்று அணிகளுக்கு ரூ.50,000, ரூ.30,000 மற்றும் ரூ.20,000 பெறுமதியான பணப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளன. பாடசாலை பிரிவைப் போல, புத்தாக்கம் மற்றும் ஆக்கத்திறன் வாய்ந்த மென்பொருள் பயன்பாட்டினை உருவாக்கும் அணிகளுக்கு இரு விருதுகள் வழங்கப்படவுள்ளன.
 
பாடசாலை மற்றும் மூன்றாம்நிலை மட்ட பிரிவுகளின் அணிகளுள் ஐந்து உறுப்பினர்கள் வரை உள்ளடக்கலாம். இருப்பினும், ஒரு குழுவின் அனைத்து உறுப்பினர்களும் ஒரே பாடசாலை அல்லது பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். ஒரே பாடசாலை அல்லது பல்கலைக்கழகத்தை சேர்ந்த பல அணிகள் பங்கேற்க முடியும். ஆனால் ஒரு மாணவர் ஒன்றுக்கு மேற்பட்ட அணியை பிரதிநிதித்துவப்படுத்த முடியாது.
 
CODEFEST இறுதிபோட்டிக்கு இணையாக SLIIT மாலபே கம்பஸ் வளாகத்தில் Mini Hackathon நடைபெறவுள்ளது. இச் சவாலில் நிஜ வாழ்க்கை தேவைகளுக்கு அவசியமான எளிய உற்பத்தி விவரக்குறிப்புடன் வழங்கப்படவுள்ளன. Mini Hackathon இற்காக, பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவ அணியினர் மென்பொருள் அபிவிருத்தி தொடர்பான தமது திறன்களை நிரூபிக்க ஒருவருக்கொருவர் போட்டியிடுவர். இந்த அணியில் 5 உறுப்பினர்கள் இருக்கலாம். Hackathon இல் பங்கேற்கும் அணிகள் எந்தவொரு தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி ஆறு மணித்தியாலயத்திற்குள் மென்பொருள் ஆக்கம் ஒன்றை உருவாக்குதல் வேண்டும். வெற்றி பெறும் அணிக்கு பெறுமதியான பணப்பரிசு வழங்கப்படவுள்ளது.
 
'CODEFEST 2013 ஆனது மாணவர்களின் தகவல் தொழில்நுட்ப அறிவினை மேம்படுத்தி நாடுமுழுவதும் IT அதிகாரத்தை அதிகரிக்க முயலும் SLIIT நிலையத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் ஓர் அங்கமாகும்' என SLIIT இன் தலைவரான பேராசிரியர்.எஸ்.கருணாரத்ன தெரிவித்தார்.
 
'பாடசாலைகள் மற்றும் இளங்கலை போன்றவற்றில் பிரச்சினை தீர்க்கும் திறன் மற்றும் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் கற்பிக்கப்படும் ICT தொடர்பான மாதிரிகள் குறித்த பயன்பாட்டு திறன்களை மேம்படுத்துவதற்கான சிறந்த தளமாக இப் போட்டி அமைந்துள்ளது' என SLIIT தலைவரும், பிரதான நிறைவேற்று அதிகாரியுமான பேராசிரியர். லலித் கமகே தெரிவித்தார். 'மேலும் பங்குபற்றுநர்களுக்கு நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வருபவர்களுடன் போட்டியிடவும், உண்மையான போட்டி அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும், புதிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும், தங்கள் திறன்கள் மற்றும் புத்தாக்கங்களை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது' என்றார்.
இந் நிகழ்வில் பங்குபற்றுநர்களின் திறன்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், SLIIT ஆனது கல்வி அமைச்சுடன் இணைந்து தகவல் தொழில்நுட்ப கருத்தரங்குகளை ஏற்பாடு செய்துள்ளது. இக் கருத்தரங்குகள் இலங்கையின் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில் நாடுபூராகவும் உள்ள 10 நிலையங்களில் நடைபெறவுள்ளது. இந்த கருத்தரங்கு தொடரானது மாணவர்களிற்கு ICT தொடர்பான அறிவை மேம்படுத்தவும், தகவல்களை பரிமாற்றிக் கொள்வதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது.
 
SLIIT மாலபே கம்பஸ் வளாகத்தில் CODEFESTஇன் முதல் சுற்று எதிர்வரும் 2013 செப்டெம்பர் மாதம் 20 ஆம் திகதியும், மாபெரும் இறுதிச்சுற்று 2013 அக்டோபர் மாதம் 25 ஆம் திகதியும் நடைபெறவுள்ளது. விண்ணப்ப படிவங்களைhttp:/www.codefest.lk எனும் இணையத்தள முகவரி ஊடாக டவுன்லோட் செய்ய முடியும். விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தபால் மூலமாகவோ (Faculty of Computing at SLIIT – New Kandy Road, Malabe) அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ (codefest@sliit.lk) CODEFEST 2013 இன் ஒருங்கிணைப்பாளர் இந்திராகா உதயகுமார விற்கு அனுப்ப வேண்டும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .