
சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் பினான்ஸ் (CDB) நிறுவனம், அதன் சேமிப்பு வாடிக்கையாளர்களுக்கு வாரந்தோறும் பணப்பரிசில்களை வழங்கும் வகையில் அண்மையில் ‘Swipe and Win’ எனும் ஊக்குவிப்பு திட்டத்தை அறிமுகம் செய்திருந்தது. நாட்டின் முன்னணி VISA வர்த்தக நிலையங்களில் பொருட்கொள்வனவை மேற்கொள்ளும் வாடிக்கையாளர்கள் தங்களது CDB வீசா டெபிட் அட்டைகளை உபயோகித்து வாரந்தோறும் பணப்பரிசில்களை வெல்லும் வாய்ப்பினை பெறலாம்.
இந்த ஊக்குவிப்பு திட்டத்தின் முதலாவது வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்ட களனி பிரதேசத்தைச் சேர்ந்த கே.யு.சி.பெரேரா தமக்குரிய பணப்பரிசிலை பெற்றுக்கொண்டார். Swipe and Win ஊக்குவிப்பு திட்டத்தில் அடுத்தடுத்த மூன்று வாரங்களில் வென்னப்புவ எச்.எம்.என்.பொன்சேகா, மஹரகமவைச் சேர்ந்த எம்.என்.விக்ரமரத்ன மற்றும் வென்னப்புவ கே.ரோசா ஆகியோர் வெற்றியாளர்களாக தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்குரிய பணப்பரிசில்கள் வழங்கப்பட்டிருந்தன.
CDB டெபிட் அட்டை மூலம் சேமிப்புகளுக்கு 6.5% உயர் வட்டி மற்றும் உலகம் முழுவதுமுள்ள மில்லியன் கணக்கான VISA வர்த்தக நிலையங்களில் ஷொபிங் செய்யும் போதும், நாடு முழுவதுமுள்ள 600 க்கும் மேற்பட்ட ATM முன்னணி வலையமைப்பிலிருந்தும் பணத்தை மீளப் பெறக்கூடிய வசதி போன்ற அனுகூலங்களை உரிமைதாரர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
இதற்கு மேலதிகமாக, CDB டெபிட் அட்டைகளை வைத்திருப்போர் தெரிவு செய்யப்பட்ட முன்னணி வர்த்தக நிலையங்களில் விசேட கழிவுகளை பெற்றுக்கொள்ள முடியும்.
'எமது வழமையான சேமிப்பு வாடிக்கையாளர்களுக்கு புதுமையான திட்டங்கள் மற்றும் அம்சங்கள் வழங்குவது மாத்திரமன்றி, அவர்களை கௌரவிக்கவும் விரும்புகின்றோம். 'Swipe and Win' ஊக்குவிப்பு மூலம் வாராந்தம் பணப்பரிசில்களை வெல்வதற்கு வாடிக்கையாளர்கள் தங்கள் CDB வீசா டெபிட் அட்டைகளை எந்தவொரு VISA வர்த்தக நிலையங்களிலும் அதிகளவில் உபயோகித்து கொள்வனவுகளை மேற்கொண்டிருத்தல் வேண்டும். எமது வாடிக்கையாளர்களின் ஷொபிங் அனுபவத்திற்கு மதிப்பு சேர்ப்பதே இந்த ஊக்குவிப்பு திட்டத்தின் குறிக்கோளாகும்' என CDB நிறுவனத்தின் பிரதி பொது முகாமையாளர் கார்த்திக் இளங்கோவன் தெரிவித்தார்.
CDB நிறுவனம் அண்மையில் சேமிப்பு கணக்கின் பல்வேறு கவர்ச்சிகரமான அம்சங்களை ஒன்றிணைத்து வசதியான ஒரு தொகுப்பாக (Package) உருவாக்கப்பட்ட புதுமையான சேமிப்பு திட்டமொன்றை அறிமுகம் செய்திருந்தது. CDB சேமிப்பு கணக்கொன்றை ஆரம்பிப்பவர்களுக்கு சர்வதேச CDB வீசா டெபிட் அட்டையும், Swipe and win ஊக்குவிப்பில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பும் வழங்கப்படுகின்றது. நாட்டின் பட்டியியலிடப்பட்ட மிகச்சிறந்த வங்கியல்லாத நிதிசார் நிறுவனங்களில் (NBFIs) ஒன்றாக விளங்கும் சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் பினான்ஸ் பிஎல்சி (CDB) நிறுவனம் அதன் கிளை வலையமைப்பை நாடு முழுவதும் 59 ஆக விஸ்தரித்துள்ளது.