
நாடளாவிய ரீதியில் ஹுவாவே தயாரிப்புகளை விநியோகிக்கும் சிங்கர் ஸ்ரீலங்கா பிஎல்சி மூலம், ஹுவாவே Ascend W1 எனும் ஸ்மார்ட்போன் இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன், Ascend G510 மற்றும் Y300 எனும் ஸ்மார்ட்போன்களும் இலங்கை சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
பல்வேறு வியப்பூட்டும் உள்ளம்சங்களை கொண்டமைந்த இந்த புதிய Ascend G510 ஸ்மார்ட்போன், 4 அங்குல திரை, 1GHz டுவெல் கோர் புரொசெசர், பிளாஷ் உடன் 5 மெகாபிக்சல் AF டுவெல் கமரா, 4GB கொள்ளளவு இடவசதி (32GB வரை விஸ்தரித்துக் கொள்ள முடியும்) போன்றவற்றை கொண்டுள்ளதுடன், இந்த ரக புதிய கையடக்க தொலைபேசி சக்தி வாய்ந்த பற்றரியை கொண்டுள்ளதுடன், 470 மணித்தியாலங்கள் வரை தங்கியிருக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது. இந்த வகை அனைத்து ஸ்மார்ட்போன்கள் ரகங்களிலும் மிக நீண்ட நேரம் கொண்டமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய ஸ்மார்ட்போன் வகைகள் அறிமுகம் குறித்து சிங்கர் ஸ்ரீலங்கா பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி அசோக பீரிஸ் கருத்து தெரிவிக்கையில், 'வின்டோஸ் 8 தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகியுள்ள இந்த புதிய ஸ்மார்ட்போன் வகையானது, பாவனையாளர்களுக்கு பயன்படுத்த இலகுவான முறையில் அமைந்துள்ளது. அத்துடன், பன்முக நடவடிக்கைகளை இலகுவாக மேற்கொள்ளக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. கவர்ச்சிகரமான விலையில் அழகிய தோற்றத்துடனும், நவீன தொழில்நுட்பத்தில் அமைந்த கையடக்க தொலைபேசிகளை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தீர்வாக இந்த புதிய Ascend W1 கையடக்க தொலைபேசி அமைந்திருக்கும்' என்றார்.
இந்த புதிய Ascend W1 குறித்து ஹுவாவே டெக்னொலஜிஸ் லங்கா பிரைவேற் லிமிடெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி டானியல் சன் கருத்து தெரிவிக்கையில், 'புதிய Ascend W1 கையடக்க தொலைபேசியானது நவீன மைக்குரொசொஃப்ட் வின்டோஸ் 8 கட்டமைப்பில் வெளியாகியுள்ளது. வாடிக்கையாளர்களின் நாளாந்த செயற்பாடுகளை உற்பத்தி திறன் வாய்ந்த வகையிலும், சுலபமான முறையில் முன்னெடுப்பதற்கு உதவியான வகையில் இந்த கையடக்க தொலைபேசி அமைந்துள்ளது. கணினியில் உள்ள வின்டோஸ் ஆப்ளிகேஷன்களை இந்த கையடக்க தொலைபேசியிலும் அனுபவிக்கக்கூடிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கணினிகளுக்கு மாற்றீடாக அதே வசதிகளை தமது கரங்களில் அனுபவிக்கும் வகையில் இந்த Ascend W1 அமைந்துள்ளது.
சிங்கர் ஸ்ரீலங்கா மூலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மற்றொரு ஸ்மார்ட்போன் வகையான Ascend G510, 1.2 GHz டுவெல்கோர் CPU வை கொண்டுள்ளதுடன், 512MB RAM மற்றும் 4GB கொள்ளளவு இடவசதி, கவர்ச்சிகரமான தோற்றத்தையும் கொண்டுள்ளது. மேலும், இந்த Ascend G510, 4.5 அங்குல 850×450 IPS திரை, 5 மெகா பிக்செல் பின்புற கமரா மற்றும் 0.3 மெகா பிக்செல் முன்புற கமரா மற்றும் 1750mAh பற்றரியும் கொண்டமைந்துள்ளது. இதன் மூலம் பாவனையாளர்களுக்கு 30 வீதம் மேலதிக நேரம் பற்றரி கொள்ளளவு நேரத்தை பெற்றுக் கொள்ள முடியும். Ascend G510 ரக ஸ்மார்ட்போன் வகையின் பிரதான சிறப்பம்சம் யாதெனில், NFC தொடர்பாடல் வசதியை கொண்டமைந்துள்ளமையாகும்.
புதிய ஸ்மார்ட்போன்களில் மற்றுமொரு அறிமுகமாக Ascend Y300 அமைந்துள்ளது. இளைஞர்களை இலக்காக கொண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ரக ஸ்மார்ட்போன், பாவனையாளர்களுக்கு சிறந்த தொழில்நுட்பத்தையும் சிறந்த ஸ்மார்ட்போன் அனுபவத்தையும் வழங்கும் வகையில் அமைந்துள்ளது. இது 4 அங்குல திரையையும், 1730mAh பற்றரியையும் கொண்டுள்ளது. ஒடோ ஃபோகஸ், பிளாஷ் மற்றும் பனரோமா செயற்பாடுகள் உடன் அமைந்த 5 மெகா பிக்செல் கமரா மற்றும் செக்கனுக்கு 30 ஃபிரேம்கள் எனும் அளவில் வீடியோ பதிவு செய்யும் வசதியை கொண்டுள்ளது. Ascend Y300 அன்ட்ரொயிட் தொழில்நுட்பத்தில் 4.1 ஜெலிபீன் கட்டமைப்பில் இயங்கும் ஆற்றல் கொண்டுள்ளது. பாவனையாளர்களுக்கு கூகுள் பிளே ஸ்ரோரிலிருந்து 1000க்கும் அதிகமான ஆப்ளிகேஷன்களை பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் இந்த தொழில்நுட்பம் அமைந்துள்ளது. முகத்தை இனங்காணும் தொழில்நுட்பம் புதிய அறிமுகமாக இந்த ரக தொலைபேசிகளில் அமைந்துள்ளதுடன், பாவனையாளர்களின் மூலம் அதிகளவு விரும்பப்படும் ஒரு சிறப்பம்சமாகவும் இது அமைந்துள்ளது. இந்த சிறப்பம்சம் HUAWEI Y300 மற்றும் G510 ஆகிய இரு ரக கையடக்க தொலைபேசிகளிலும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மைக்குரொசொஃப்ட் ஸ்ரீ லங்காவின் இலங்கைக்கான முகாமையாளர் ஸ்ரீயான் டி சில்வா கருத்து தெரிவிக்கையில், 'இந்த புதிய ஹுவாவே ரக ஸ்மார்ட்போன்களின் அறிமுகம் குறித்து நாம் அதிகம் பூரிப்படைகிறோம். பெரும்பாலான இலங்கையர்களுக்கு ஹுவாவே Ascend W1 அறிமுகத்தின் மூலம் வின்டோஸ் 8 போன் அனுபவத்தை வழங்க சிங்கர் முன்வந்துள்ளது' என்றார்.
இந்த புதிய ஸ்மார்ட்போன் வகைகள் சிங்கர் மெகா, சிங்கர் பிளஸ் மற்றும் சிசில் வேர்ல்ட் ஸ்ரோர்களின் மூலமாகவும், நாடு முழுவதும் காணப்படும் விநியோகத்தர்களின் மூலமாகவும் விற்பனை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இரண்டு வருட கால உத்தரவாதத்தையும் கொண்டுள்ளது.
இலங்கையில் ஹுவாவே ரக ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்வதற்கான அங்கீகாரம் பெற்ற முகவராக சிங்கர் ஸ்ரீலங்கா பிஎல்சி நியமிக்கப்பட்டுள்ளது. சேவை வழங்கலில் 161 வருட கால முன் அனுபவத்தை கொண்டுள்ள சிங்கர், தனது பரந்த பல்தரப்பட்ட வர்த்தக நாம தயாரிப்புகளின் விற்பனைக்காக புகழ்பெற்று திகழ்கிறது. நாடு முழுவதும் பரந்த வலையமைப்பு கிளைகளை கொண்டுள்ளமை நிறுவனத்தின் உறுதித்தன்மையை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. இதன் மூலம் பொருட்களை இலகுவாக பெற்றுக் கொள்ள முடிகிறது. ஸ்மார்ட்ஃபோன்களுக்கு சிறந்த விற்பனை நிலையமாக சிங்கர் திகழ்கிறது. உலகின் முன்னர் வர்த்தக நாமங்களில் அமைந்த ஸ்மார்ட்ஃபோன்களை நாடு பூராகவும் காணப்படும் 390க்கும் அதிகமான சிங்கர் மெகா, சிங்கர் பிளஸ் மற்றும் சிசில் வேர்ல்ட் காட்சியறைகளிலிருந்து கொள்வனவு செய்து கொள்ள முடியும்.