2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

www.Netauction.lk இணையத்தளம் அறிமுகம்

Editorial   / 2019 மார்ச் 26 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாடிக்கையாளர்கள், தமது சொத்துகளை, உற்பத்திகளை, பொருட்களை எந்தவித கட்டணமும் செலுத்தாமல் முற்றிலும் இலவசமாக விற்பனை செய்துகொள்வதற்கான வழிமுறைகளை, www.Netauction.lk  என்ற இணையத்தளம் அறிமுகம் செய்துள்ளது.

இந்த இணையத்தளத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, கொழும்பில், நேற்று(25) நடைபெற்றது. இணையத்தளத்தின் முகாமையாளரான கோங்கிந்த யசித்த விஜேசிறி, இணையத்தளத்தை உத்தியோகப்பூர்வமாக அறிமுகம் செய்து வைத்தார்.

இதன்போது ஊடகவியலாளர்களுக்கு கருத்துரைத்த அவர், வாடிக்கையாளர்கள், தமது சொத்துகளை, உற்பத்திகளை, பொருட்களை எந்தவிதக் கட்டணமும் செலுத்தாமல் முற்றிலும் இலவசமாக www.Netauction.lk இணையத்தளத்தின் மூலம் விளம்பரம் செய்து ஏல விற்பனை முறையிலோ, சாதாரண முறையிலோ வாடிக்கையாளர்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு விற்பனை செய்துகொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.

உற்பத்தியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கிடையில், தரகர்களின்றிய நேரடித் தொடர்பை ஏற்படுத்துவதே, இதன் நோக்கம் என்றும் இதனூடாக,  தரகர்கள் அடையும் அளவுக்கதிகமான இலாபத்தை, உற்பத்தியாளர்களுக்கு தக்கவைத்துக்கொள்ள முடிவதுடன், உற்பத்தியாளர்களின் உற்பத்தி அதிகரிப்பதன் வழியாக பொருளாதாரமும் மேலும் வளர்ச்சிடையும் என்றார்.

நாட்டில் காணப்படும் ஏனைய இணையத்தளங்களில், விளம்பரம் செய்வதற்கு பெரும் நிதி செலவானாலும் www.Netauction.lk   இணையத்தளத்தின் மூலமாக விளம்பரச் சேவையை, எதுவித கட்டணமும் இன்றி இலவசமாக பெற்று பயனடைய முடியும் என்று அறிவுறுத்தினார்.

மேலும் கூறிய அவர், “இந்த இணையத்தளத்தின் சேவையை நாடுபவர்கள் முதலில் இணையத்தளத்தின் பதிவு செய்து கொண்டதன் பின்பே, பொருட்கள், உற்பத்திகள் மற்றும் சொத்துகளை விளம்பரம் செய்வதின் மூலமாக விற்பனை செய்துகொள்ள முடியும்.

“பொருளின் விலையை விற்பனையாளரே தீர்மானித்தல் மற்றும் ஏல விற்பனை மூலம் விலையைத் தீர்மானித்தல் ஆகிய இரண்டு முறைகளில் பொருட்களை விற்பனை செய்யலாம். இணையத்தின் மூலம் ஏல விற்பனை வாயிலாக பொருட்களை விற்பனை செய்யும் வசதி, இலங்கையிலே முதன் முறையாக நாம் அறிகமுப்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

“www.Netauction.lk   என்ற முகநூல் (Facebook) பக்கத்தினூடாகவும் instagram, youtube அலைவரிசையின் மூலம் இணையத்தளம் சம்பந்தமான மேலதிகத் தகல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

“0117950002 என்ற தொலைபேசி இலக்கத்தனுடனும் info@Netaution.lk என்ற மின்னஞ்சல் முகவரியுடனும் தொடர்புகொண்டு மேலதிகத் தகல்களை அறிந்துகொள்ள முடியும். அலைபேசி பாவனையாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க, எமது சேவையை விரிவுபடுத்தும் நோக்கில் விரைவிலேயே, மென்பொருள் (software/app) ஒன்றும் அறிமுகம் செய்து வைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

“எமது பிரதான காரியாலயம் இல.118, புதிய புகையிரத வீதி, ரத்மலான என்ற முகவரியில் அமைந்துள்ளது. எமது இந்தச் சேவையானது, ஐந்து வருடங்களுக்கு, முற்றிலும் இலவசமாகவே முன்னெடுக்கப்படவுள்ளது. அதன் பின்பு, எமது மேலிதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கு அமைய, எமது சேவை தொடரும்” என்றார். (படப்பிடிப்பு; ஆகில் அஹமட்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .