2025 மே 21, புதன்கிழமை

‘அக்ரஹார’ பயனாளர்களுக்கு Ninewells வழங்கும் அனுகூலங்கள்

Editorial   / 2018 ஜூன் 26 , மு.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் Ninewells வைத்தியசாலை, தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்துடன் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டதன் மூலம், ‘அக்ரஹார’ பயனாளர்களுக்கு Ninwells Hospital வழங்கும் மகப்பேற்றுடன் தொடர்புடைய சேவைகளை, விசேட கழிவில் அனுபவிக்க முடியும். 

தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தின் ‘அக்ரஹார’, திட்டத்தின் கீழ் பதிவுசெய்துள்ள சுமார் 700,000 அரச ஊழியர்களைத் தன்னகத்தே கொண்டு, அதிகூடிய சுகாதாரப் பராமரிப்புப் பயனாளர்களைக்கொண்ட காப்புறுதிச்சேவையாக விளங்குகின்றது.   

இப்பங்குடமையைக் கொண்ட ஒப்பந்தமானது, அண்மையில் Ninewells வைத்தியசாலை முகாமைத்துவத்துக்கும் தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதிய அதிகாரிகளுக்குமிடையில் கைச்சாத்திடப்பட்டது.   

இந்த முக்கிய பங்குடமை பற்றிக் கருத்துக்கூறிய Ninewells Hospital இன் பணிப்பாளர் டொக்டர் விபாஷ் விஜேரட்ன, “பொதுச்சேவை ஊழியர்கள் நாட்டின் தொழிற்படையணியில் முக்கிய உள்ளீடாக விளங்குவதுடன், நாட்டின் முன்னேற்றத்தில் முக்கிய பங்காற்றுகின்றனர். அவ்வாறானவர்களைப் பாராட்டுவதற்காகத் தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்துடன் இணைந்து பணியாற்றுவது மிகுந்த மகிழ்ச்சி தருகின்றது. மகப்பேறென்பது ஒரு குடும்பத்துக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததால், மிகச் சிறந்த சேவைகளை நாங்கள் எதிர்பார்க்கின்றோம். எங்கள் பங்குடமையின் மூலம், ‘அக்ரஹார’ பயனாளிகள், விசேட கழிவுக் கட்டணங்களில் இச்சேவைகளைப் பெறக்கூடியதாக இருப்பதோடு, இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகளுக்கு அதிக பெறுமதி சேர்ப்பதாகவும் உள்ளது. இவ்வாறான திட்டமொன்றை நடைமுறைப்படுத்த தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தின் முயற்சிகளுக்காக நன்றி கூறுகிறேன்” என்றார்.   

இதற்கு மேலதிகமாக, மகப்பேற்றுடன் தொடர்புடைய சேவைகள் ‘அக்ரஹார’ பயனாளிகளுக்கு விசேட கழிவு அடிப்படையிலேயே வழங்கப்படுகின்றது. அத்தோடு Ninewells Hospital கேட்டல் உபகரணங்கள், கண் பராமரிப்பு சேவைகளையும் கழிவுக் கட்டணங்களில் வழங்குகின்றது.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X