2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

அட்லஸ் சிறந்த விற்பனையாளர்களுக்கு வெளிநாட்டுச் சுற்றுப்பயணம்

Gavitha   / 2016 ஒக்டோபர் 16 , பி.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

2015/16 காலப்பகுதியில் அட்லஸ் நிறுவனத்துடன் நெருக்கமாக செயலாற்றிய விற்பனையாளர்களுக்கு வெளிநாட்டுச் சுற்றுப்பயண வாய்ப்பை நிறுவனம் ஏற்படுத்தியிருந்தது. சிறந்த அட்லஸ் புத்தகம் ஊடாக வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்ட ஊக்குவிப்பு செயற்றிட்டத்தில்  260க்கும் அதிகமான விற்பனையாளர்கள் நாடு முழுவதிலுமிருந்து தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

இவர்கள் குறித்தத் திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்டிருந்த நியதிகள் மற்றும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்திருந்தமைக்கமையத் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.  

நான்கு அணிகளாகப் பிரிந்து இவ் விற்பனையாளர்கள் சிங்கப்பூர், மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தனர். இதற்கான விமானக்கட்டணங்கள், போக்குவரத்து வசதிகள் மற்றும் தங்குமிட வசதிகள் போன்றன அட்ல்ஸினால் வழங்கப்பட்டிருந்தன.

இந்தத் திட்டத்தின் வெற்றியாளராகத் தெரிவு செய்யப்பட்ட விற்பனையாளர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், இந்த வெளிநாட்டு அனுபவம் தமக்கு மறக்க முடியாத ஒன்றாக அமைந்திருந்ததாகவும், அட்லஸ் உடன் இணைந்து பணியாற்றும் பல விற்பனையாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள ஒரு வாய்ப்பாகவும் இது அமைந்திருந்ததாக குறிப்பிட்டார்.

அட்லஸ் புத்தகங்கள் பற்றி அனைவரும் அறிவார்கள். “சிறந்த அட்லஸ் ' புத்தகம் ஊடாக வெளிநாட்டு சுற்றுப்பயணம்” எனும் திட்டத்தினூடாக நிர்ணயிக்கப்பட்டிருந்த விற்பனை இலக்குகளை என்னால் மிகவும் இலகுவாக எய்தக்கூடியதாக இருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X