2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

அமானா வங்கி அதன் இலாபங்களை இரண்டு மடங்காக்கிக் கொண்டது

A.P.Mathan   / 2015 செப்டெம்பர் 20 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட்டி சாராத இலங்கையின் உத்தரவுபெற்ற முன்னோடி வர்த்தக வங்கியான அமானா வங்கி, 2015ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் அதன் இலாபத்தை அதிகரித்துள்ளது. முதலாம் காலாண்டில் 23.0 மில்லியன் ரூபாவாக காணப்பட்ட இந்த இலாபம் 2ஆவது காலாண்டில் 47.5 மில்லியன் ரூபா வரை அதிகரித்துள்ளது. இதன் பலனாக, 2014ம் ஆண்டின் அதே காலப் பகுதியில் பதிவாகியிருந்த வரிக்குப் பிந்திய 134.9 மில்லியன் ரூபா நட்டத்துடன் ஒப்பிடும்போது 2015ம் ஆண்டின் முதல் பாதி ஆண்டுக்கான வங்கியின் மொத்த இலாபம் 70.6 மில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது. 

கடந்த ஜூன் 30ம் திகதியுடன் நிறைவுபெற்ற 6 மாத காலப்பகுதியில் வங்கியின் பிரதான வருமான மூலங்களும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டியிருந்தன. நிதி வருமானம் 1,337.2 மில்லியன் ரூபாவாகவும், தேரிய தொழிற்பாட்டு வருமானம் 950.0 மில்லியன் ரூபாவாகவும் பதிவாகியிருந்தது. தொழிற்பாட்டு செயற்திறன் மற்றும் செலவு குறைப்புக்கான முகாமைத்துவ முன்னெடுப்புக்கள் காரணமாக 2014ம் ஆண்டில் இதே காலப் பகுதியில் பதிவாகியிருந்த 112.2 மில்லியன் ரூபா தொழிற்பாட்டு நட்டத்தை 142.2 மில்லியன் ரூபா தொழிற்பாட்டு இலாபமாக அடைந்து கொள்வதில் வங்கி வெற்றி கண்டது. 

நிதியுதவி மற்றும் வைப்புத்தொகைகள் முறையே 28.1 பில்லியன் ரூபாவாகவும், 33.0 பில்லியன் ரூபாவாகவும் உயர்ந்திருந்தன. இவை வங்கியின் பிரதான வருமான செயலாற்றுகை மற்றும் மொத்த சொத்துக்களில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை ஏற்படுத்தியது. வருடத்தின் முதல் பாதியாண்டில் 15.2 சதவீதத்தால் வளர்ச்சி கண்ட மொத்த சொத்துக்களின் பெறுமதி 40 பில்லியன் ரூபா என்ற எல்லையையும் தாண்டியது. செயற்திறனான கடன் இடர் முகாமைத்துவக் கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் ஊடாக அமானா வங்கி தொடர்ந்தும் ஒரு தரமான நிதியளிப்பு முறைமையை நிர்வகித்து வருகின்றது. இது மொத்த செயலாற்றுகையில்லாத நிதியளிப்புத் தொகையை 1.38% என்ற குறைந்த பெருமானத்திற்கு கொண்டுவர வங்கிக்கு துணைபுரிந்தது. இது வங்கித்துறையின் சராசரி வீதத்தை விடவும் குறைவான பெருமானமாகும். 

வங்கியின் முதல் பாதியாண்டின் செயலாற்றுகை பற்றி கருத்து வெளியிட்ட பிரதான நிறைவேற்று அதிகாரி முஹம்மத் அஸ்மீர் அவர்கள் ' இந்தக் காலப் பகுதியில் வங்கியின் செயலாற்றுகை மற்றும் வளர்ச்சி பற்றி குறிப்பிடுவதையிட்டு நான் மகிழ்ச்சி அடைகின்றேன். இந்த வெற்றியை எமது வங்கியின் மீதும், எமது பிரத்தியேக செயற்பாடு தொடர்பிலும் நம்பிக்கை கொண்டுள்ள எமது பெறுமதிமிக்க வாடிக்கையாளர்களுக்கு வழங்க நாம் கடமைப்பட்டுள்ளோம். கடந்த 6 மாதங்களாக எமது 5 வருடகால மூலோபாயத் திட்டத்தை செயற்படுத்துவதற்காக வங்கியின் ஊழியர்கள் அயராது தொழிற்பட்டதால் நாம் எதிர்பார்த்த பயன்களை தற்போது அடைந்து வருகின்றோம். இந்த மூலோபாயத் திட்டத்தை தொடர்ந்தும் பேணுவதன் மூலம் இதனை மேலும் விருத்தி செய்து கொள்ள முடியும் என நாம் நம்புகின்றோம்' என்று குறிப்பிட்டார். 

வட்டியுடன் சம்பந்தப்படாத இஸ்லாமிய வங்கி துறையுடன் முற்றிலும் இணங்கி செயற்பட்டு வரும் இலங்கையின் ஒரேயொரு உத்தரவு பெற்ற வர்த்தக வங்கியாகத் திகழும் அமானா வங்கி கொழும்பு பங்குப் பரிவர்த்தனை நிலையத்தின் திரிசவி சபையில் பட்டியலிடப்பட்டுள்ளது. ஒரு நிலையான போக்குடன் தேசிய நீண்டகால தரவரிசையில் பீ.பீ (எல்.கே.எ) அமானா வங்கி பிட்ச் ரேட்டிங் வரிசையில் அண்மையில் சேர்த்துக் கொள்ளப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. தனது மூலோபாய பங்காளிகளான மலேஷpயா பேர்ஹாட் இஸ்லாமிய வங்கி, சவுதி அரேபியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி மற்றும் பங்களதேஷpன் ஏ.பீ. வங்கி ஆகியவற்றின் மூலம் ஊக்குவிக்கப்பட்டுள்ள அமானா வங்கி இலங்கையின் வங்கித் துறைக்குள் ஒரு புதிய பாதையை உருவாக்கி வருவதோடு,  நாடு பூராகவும் வளர்ந்து வரும் ஒரு பிரத்தியேக வங்கி முறைக்கான சந்தை வாய்ப்பில் தமது மூலதனத்தை மையப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X