Editorial / 2020 ஜூலை 29 , பி.ப. 01:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
2018இலும் 2019இலும் தொடர்ச்சியாக இரு காசுப்பங்கிலாபங்களை வழங்கிய அமானா வங்கி, ஒரு பங்குக்கு எட்டு சத இடைக்கால ஆவணப் பாங்கிலாபத்தை, இலங்கை மத்திய வங்கியின் அனைத்து வங்கிகளுக்கான காசுப்பாங்கிலாபத்தை கட்டுப்படுத்தும் பணிப்புரைகளுக்கு அமைவாக அறிவித்துள்ளது
ரூபாய் 200 மில்லியன் தொகையான ஆவணப் பங்கிலாபம், வங்கியின் நிறுத்திவைத்த ஈட்டல்களில் இருந்து பங்கொன்று ரூபாய் 2 ஆக பெறுமதியிடப்பட்ட 25 பங்குகளுக்கு ஒரு பங்கென்ற விகித்தத்தில் வழங்கப்படுகின்றது. ஆவணப் பங்கிலாபம் வழங்கப்பட்டதும் வங்கியின் பங்குகளின் எண்ணிக்கை 100,055,421 பங்குகளால் அதிகரித்து 2,601,446,155 ஐ எட்டும்.
பங்கிலாப பிரகடணம் குறித்து அமனா வங்கியின் தலைவர் ஒஸ்மான் காசிம் கூறுகையில்,
“2019 ஆம் ஆண்டில் நிலவிய சவாலான சூழலுக்கும், அதனைத் தொடர்ந்த 2020 ஆம் ஆண்டின் Covid -19 தொற்றுநோய்க்கும் மத்தியில் எங்கள் நெகிழ்ச்சியான செயற்றிறன் காரணமாக, எமது தொடர்ச்சியான மூன்றாவது பங்கிலாபத்தை எங்கள் பெறுமதி உருவாக்கும் உபாயத்தின் பகுதியாக அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நாட்டில் முன்னெப்போதுமில்லாத நிலமைகள் இருந்தபோதிலும், எங்கள் பங்குதாரர்களுக்கு அவர்கள் எம்மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்காக இந்த ஆவண பங்கிலாபம் மூலம் தொடர்ந்து வெகுமதி அளிக்க முடிந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார்.
அமானா வங்கி வரிக்கு முன்னரான இலாபமாக ரூபாய் 848.8 மில்லியனையும் வரிக்கு பின் இலாபமாக ரூபா 460.9 மில்லியனையும் 2019ஆம் ஆண்டில் எட்டியதுடன் Q 1 2020இல் இவை முறையே ரூபாய் 180.2 மில்லியனாகவும் ரூபாய் 129.8 மில்லியனையும் அமைந்தன. வாடிக்கையாளர் வைப்புக்களில் வங்கித்துறையில் அதிகப்பட்ச வளர்ச்சி வீதங்களில் உள்ளடங்கும் 16% வளர்ச்சியை 2019இல் அடைந்த அமானா வங்கி Q 1 2020இல் 8% வளர்ச்சியைடைந்து, ரூபாய் 77 பில்லியனை மொத்த வைப்பாக கொண்டிருந்தது.
சவாலான சந்தை நிலவரங்களுக்கு மத்தியில், நிதிவழங்கள் இடர்நேர்வு சுட்டளவுகளின் உறுதிப்படுத்தலின் காரணமாக, வளர்ச்சியடைந்த முற்பனங்கள் ரூபாய் 58.4 பில்லியனாக அமைந்தது. வங்கியின் மொத்த சொத்துக்கள் ரூபா 90 பில்லியன் எல்லையைத் தாண்டி ரூபாய் 91.6 பில்லியனை அடைந்ததோடு, வங்கியின் நிகர சொத்துக்களின் பெறுமதி பங்கொன்றுக்கு ரூபாய் 4.78 ஆக முன்னேறியது.
ஜூன் 2020இல், இலங்கை Fitch ரேட்டிங்ஸ் நிறுவனம் அமானா வங்கியின் தேசிய நீண்டகால கடன் தரப்படுத்தலை BB (lka ) இயிலிருந்து BB 10 (lka) யாக உயர்த்தி சீர்படுத்தியது, வங்கியின் வளர்ச்சியையும் உறுதியான கிளையுரிமையையும் மேலும் வலுப்படுத்தியது. இலங்கையில் தேசிய தரப்படுத்தல் அளவு முறைகளை சீரமைத்த பின் Fitch ரேடிங்ஸின் புதிய கடன் தரப்படுத்தல், நாட்டின் வழங்குநர்களிடையே உள்ள கடன் தகுதிநிலையை பிரதிபலிக்க வெளியிடப்பட்டுள்ளது
இலங்கை மத்திய வங்கியினால் உரிமம் அளிக்கப்பட்ட அமானா வங்கி பி.எல்.சி.; கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட ஒரு தனி நிறுவனமாகும். ஜித்தாவில் தலைமையகத்தைக் கொண்ட இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி (IsDB) குழுமம் பிரதான பங்குதாரர் என்ற முறையில் அமானா வங்கியில் 29.97% பங்குளைக் கொண்டுள்ளது. IsDB குழுமம் 'AAA' தரப்படுத்தலைப் பெற்ற (S&P, Moody's & Fitch) பல்துறை அபிவிருத்தி சார்ந்த நிதி நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் 57 நாடுகள் அங்கத்துவம் வகிக்கின்றன. அமானா வங்கி ஒரு தனி நிறுவனமாகும். 'OrphanCare' Trust அமைப்பைத் தவிர அதனைப் பிரதிநிதித்துவம் செய்யும் உப நிறுவனங்கள், துணை நிறுவனங்கள் அல்லது இணை நிறுவனங்கள் எதுவும் கிடையாது.
9 minute ago
17 minute ago
23 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
17 minute ago
23 minute ago
45 minute ago