Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
S.Sekar / 2021 பெப்ரவரி 15 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சகல ஊழியர்களையும் வரவேற்று வலுச்சேர்த்து, ஊக்குவித்து சிறந்த முறையில் பணியாற்றுவதற்கான பணிச்சூழலை ஏற்படுத்திக் கொடுத்திருந்தமைக்காக Expack Corrugated Cartons Ltd நிறுவனத்துக்கு, ஆசியாவில் பணியாற்றுவதற்கு சிறந்த சிறிய, நடுத்தரளவு பணியிடங்கள் 2020 இல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது. தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாக இந்த விருது வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டின் முன்னணி நிலைபேறான அலைநெளிவுள்ள (corrugated) பொதியிடல் தீர்வுகள் வழங்குநரான Expack நிறுவனம், இலங்கையில் பணியாற்றுவதற்கு சிறந்த நிறுவனங்கள் வரிசையில் தொடர்ச்சியான மூன்றாவது வருடமாகவும் தரப்படுத்தப்பட்டிருந்தது. 2020 ஆம் ஆண்டு எதிர்பாராத வகையில் பல சவால்களை கொண்ட ஆண்டாக அமைந்திருந்த போதிலும், Expack நிறுவனத்தின் ஊழியர்கள் அதிகளவு மீண்டெழும் திறனையும் ஒன்றிணைந்து நிறுவனத்தின் வெற்றிகரமான செயற்பாட்டில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் செயலாற்றியிருந்தனர்.
துறையில் இவ்வாறான கௌரவிப்பு விருதை வென்ற ஒரே பொதியிடல் தீர்வுகள் வழங்குநர் எனும் பெருமையை பெற்றுள்ளதையிட்டு நிறுவனம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றது என Expack Corrugated Cartons நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சுல்பிகர் கௌஸ் தெரிவித்தார். “இலங்கையிலும், ஆசியாவிலும் பணியாற்றுவதற்கு சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக தொடர்ச்சியாக விருதுகளை சுவீகரித்துள்ளமையானது, திறமையான எமது பரந்தளவு ஊழியர்களின் அர்ப்பணிப்பான மற்றும் கடின உழைப்புக்கு கிடைத்த சிறந்த கௌரவமாக அமைந்துள்ளது.” என்றார்.
அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், “அவர்களின் உறுதியான செயற்பாடு மற்றும் ஈடுபாடு போன்றன எம்மை இன்றைய நிலைக்கு உயர்த்தியுள்ளதுடன், தலைமைத்துவமளிப்போர் எனும் வகையில், ஊழியர்களுக்கு தமது திறமைகளை மேம்படுத்திக் கொள்ள உகந்த சூழலை ஏற்படுத்திக் கொடுக்கவும், ஆரோக்கியமான பணி-வாழ்க்கை சமநிலையை பேணவும் வசதிகளை வழங்குகின்றோம். நாம் திறந்த கதவு கொள்கையைக் கொண்டுள்ளதுடன், Expack ஐச் சேர்ந்த அனைவரையும் தமது எந்தவிதமான விடயங்கள் தொடர்பிலும் எம்முடன் நேரடியாக கலந்துரையாடுவதற்கு ஊக்குவிக்கின்றோம்.” என்றார். Expack சகல பிரிவுகளிலும் பன்முகத்தன்மை மற்றும் உள்ளகத்தன்மையை ஊக்குவிக்கின்றது. அதன் 300க்கும் அதிகமான உறுதியான ஊழியர்களில் சகல இன, மத, வயது மற்றும் பாலினத்தைச் சேர்ந்தவர்களும் அடங்கியுள்ளதுடன், அனைவரும் ஒன்றிணைந்து ஒரு நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றனர்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், “குடும்பத்தின் கலாசாரம் என்பது வெளிப்படைத்தன்மை, கரிசனை, திறந்த தொடர்பாடல், வலுவூட்டல் மற்றும் தொடர்ச்சியான ஊக்கமளித்தல் ஆகியவற்றின் பிரகாரம் அமைந்துள்ளது. இது இலங்கையின் முதல் தர அலைநெளிவுள்ள (corrugated) பொதியிடல் தீர்வுகள் தயாரிப்பாளராக திகழ வழியேற்படுத்தியுள்ளது. சகலரையும் வலுவூட்டும் உள்ளடக்கமான கலாசாரத்தை கட்டியெழுப்புவதற்கு எமது தலைமைத்துவம் முயற்சி செய்வதுடன், இதன் காரணமாக அனைவருக்கும் பணியாற்றுவதற்கு சிறந்த நிறுவனமாக எமது நிறுவனத்தை நிலை நிறுத்தியுள்ளது.” என்றார்.
இலங்கையில் WRAP சான்றிதழைப் பெற்றுக் கொண்ட முதலாவது அலைநெளிவுள்ள (corrugated) carton உற்பத்தியாளராக Expack திகழ்கின்றது. நிறுவனம் ISO 9001-2015 மற்றும் ISO 14001-2015 சான்றிதழ்களைப் பெற்றுள்ளது. தனது செயற்பாடுகளின் மையத்தில் நிலைபேறாண்மைக்கு முக்கியத்துவமளிப்பதுடன், நிறுவனம் முழுவதிலும் பல்வேறு சூழலுக்கு நட்பான செயன்முறைகளை பின்பற்றியுள்ளது. சமூகத்துக்கு மீள வழங்கும் வகையில் முறையாக திட்டமிடப்பட்ட சமூகப் பொறுப்புணர்வு செயற்பாடுகளையும் முன்னெடுக்கின்றது. அதன் வாடிக்கையாளர் வலையமைப்பில், நாட்டின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த வியாபாரங்கள் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தன்னாட்சி, வலுவூட்டல், ஒற்றுமை மற்றும் ஒன்றிணைந்த செயற்பாடு போன்றன சிறந்த தொழில் தன்னிறைவை ஏற்படுத்தியுள்ளன. கூட்டாண்மை நோக்கம், தன்னேற்புத்திட்டம் மற்றும் இலக்குகள் போன்றன முழு அணியினரிடையேயும் தெளிவாக விளக்கமளிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக சிறந்த குழுநிலைச் செயற்பாடு தோற்றுவிக்கப்பட்டுள்ளதுடன், NCE-ஏற்றுமதி விருதுகள், NCCSL-தேசிய வியாபாரச் சிறப்பு விருதுகள், இலங்கை பொதியிடல் கல்வியகத்தின் லங்கா ஸ்டார் விருதுகள் மற்றும் CCNI Top 10 விருது போன்ற பல விருதுகளை வெற்றியீட்டவும் முடிந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
1 hours ago