2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஆடை தொழிற்சாலைகளில் ஊழியர்களின் பாதுகாப்பு

S.Sekar   / 2021 ஓகஸ்ட் 27 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒன்றிணைந்த ஆடை சங்கம் (JAAF) மற்றும் அதன் அங்கத்துவ ஆடைத் துறையிலுள்ள ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் விசேட கவனம் செலுத்தப்படுவதாக ஒன்றிணைந்த ஆடை சங்கம் (JAAF) தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சு (MOH) மற்றும் பிற அரச நிறுவனங்கள் இணைந்து ஊழியர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் பணிகளை பரிந்துரைக்கின்றன.

ஆடைத் தொழிலை அத்தியாவசிய சேவையாக மாற்றுவது தேசிய பொருளாதாரத்திற்கு மிக முக்கியமான காரணியாகும். டெல்டா வகை வைரஸ் வேகமாக பரவுவது உட்பட கொவிட்-19 நோய்த் தொற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த ஆடைத் துறையால் எடுக்கப்பட்ட குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளின் தாக்கத்தை அரசாங்கம் உன்னிப்பாக அவதானித்து வருகிறது. தொழிற்சாலைகளில் செயல்பட வழங்கப்பட்ட விரிவான நடவடிக்கைகளின் சுருக்கம் பின்வருமாறு:

அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் பொது சுகாதார ஆணையம் உட்பட இலங்கை இராணுவத்தின் உதவியுடன், 90% ஆடைத் தொழில் துறையிலுள்ள தொழிலாளர்கள் இதுவரை கொவிட்-19இன் முதல் தடுப்பூசியையும் 50% இரண்டாவது தடுப்பூசியையும் பெற்றுள்ளனர். குறிப்பாக, மொத்த ஆடைத் தொழிலாளர்களில் சுமார் 90% பிரதிநிதித்துவப்படுத்தும் முதலீட்டு சபைக்குள் (BOI) உள்ள தொழிற்சாலைகளில் 70%க்கும் அதிகமான தொழிலாளர்கள் இரண்டாவது தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளனர். அடுத்த சில வாரங்களில், முழு ஆடைத் தொழில்துறையிலுள்ள ஊழியர்களுக்கும் முழுமையாக தடுப்பூசியை வழங்க முடியும்.

MOH மற்றும் தொழில் அமைச்சினால் கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஏற்ப தொழிற்சாலைகள் ஆய்வுகளை மேற்கொள்கின்றன. தொழிற்சாலை வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்பு தொழிலாளர்கள் ஏதாவது நோய் அறிகுறிகள் இருக்கின்றனவா என பரிசோதிக்கப்படுகிறார்கள். தொழிற்சாலைகளின் சமூக இடைவெளி உறுதி செய்யப்பட்டு ஊழியர்களுக்கு உணவு, கழிவறை வசதி போன்றவற்றுக்கு தனி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பல தொழிற்சாலைகள் நீராவி உள்ளிழுத்தல், கிருமிநாசினி அலகுகள், மூலிகை மற்றும் பிற ஆரோக்கியமான சூடான பானங்கள் போன்ற கூடுதல் வசதிகளையும் வழங்குகின்றன.

ஒரு நபருக்கு ஏதேனும் நோய்த் தொற்று அறிகுறிகள் இருந்தால், அந்நபர் மேலதிக பரிசோதனைகளுக்கு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பப்படுவார். ஒவ்வொரு நாளும், ஊழியர்களின் உடல் வெப்பநிலை முறையாக அளவிடப்படுகிறது மற்றும் தேவைப்பட்டால் பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

தொழிற்சாலைகள் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட ஆய்வு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும், இதில் PCR மற்றும் அவற்றின் முடிவுகளை தினசரி MOHக்கு அறிக்கையிட வேண்டும். இந்த தகவல் உள்ளூர் சுகாதார அதிகாரிகளிடையே நிறுவப்பட்ட Online வழிமுறை மூலம் விநியோகிக்கப்படுகிறது. மேலும், சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள் சிறந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதை உறுதி செய்ய உள்ளூர் சுகாதார அதிகாரிகள் தொழிற்சாலைகளுடன் நெருக்கமான தொடர்பை பராமரிக்கின்றனர்.

மேலும், கொவிட்-19 சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளை மீறும் எந்தவொரு தொழிற்சாலைக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க ஒரு வலுவான வழிமுறையையும் செயல்படுத்துகிறது.

பெண் தொழிலாளர்களுக்காக சுமார் 4,500 படுக்கை வசதிகளுடன் 11 இடைநிலை பராமரிப்பு மையங்களை நிறுவுவதற்கு இத்துறை ஆதரவு அளித்துள்ளது. மேலும் இரண்டு மையங்கள் தற்போது நிர்மாணிக்கப்படுகின்றன. மொத்த படுக்கைகளின் எண்ணிக்கை 5,000 ஆகும். ஒவ்வொரு தொழிற்சாலையும் இந்த உட்கட்டமைப்புக்காக ஒதுக்கப்படுகிறது.

தொழில் வாய்ப்புக்களை வழங்குதல், முதலீட்டு ஆதாரம் மற்றும் ஏற்றுமதி மூலம் அந்நிய செலாவணி சம்பாதித்தல் என்ற முறையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தத் தொழில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கிறது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. இந்த தொற்றுநோயின் போது, பொருளாதாரத்திற்கு தொழில்துறையின் பங்களிப்பு இன்னும் அதிகமாக உள்ளது. நிறுவனங்கள் எடுத்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஊழியர்கள் நன்றாக ஆதரவளித்துள்ளனர். அதன்படி, தடுப்பூசி போடப்பட்ட மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் 80%க்கும் அதிகமானோர் வேலைக்கு சமூகமளிப்பது குறிப்பிடத்தக்கது.

10 நாட்களுக்கு நாடு தழுவிய தனிமைப்படுத்தல் ஊரடங்கை அரசாங்கம் அறிவித்து, ஆடைத் தொழில் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை இயங்க அனுமதித்தது. இந்நடவடிக்கை பொதுமக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் மற்றும் பொருளாதாரம் முன்னேற அனுமதிக்கும். எனவே, இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் தொழிலாளர்களைப் பற்றி ஏனைய தரப்பினர் தேவையற்ற கவலை மற்றும் பயத்தை உருவாக்கிக் கொள்ளாதது முக்கியம் என ஒன்றிணைந்த ஆடை சங்கம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .