2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஆயுள் காப்புறுதி விழிப்புணர்வு மாத போட்டியில் செலிங்கோ லைஃவ் ஆதிக்கம்

Editorial   / 2018 நவம்பர் 02 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

காப்புறுதி தொழில்துறை சம்பந்தமான போட்டியில், செலிங்கோ லைஃவ்பின் விற்பனை தொழில்சார் பிரதிநிதிகள், தமது ஆற்றலை வெளிப்படுத்தி, முக்கிய இடம் பிடித்துள்ளனர். அத்துடன், முன்னணி பத்து இடங்களில் அரைவாசியைக் கைப்பற்றி, முன்னணி 100 இடங்களில் சுமார் கால்வாசியையும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளனர்.  

இலங்கை காப்புறுதி சங்கம் (IASL) இந்தப் போட்டியை நடத்தியது. ஆயுள் காப்புறுதி விழிப்புணர்வு மாதத்தோடு இணைந்ததாக இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டன. ஓவ்வொரு செப்டெம்பர் மாதத்திலும் முன்னோடியாக நடத்தப்படும் இந்நிகழ்வு, சகல ஆயுள் காப்புறுதிக் கம்பனிகளதும் விற்பனை துறைசார் நிபுணர்களினதும்  பங்குபற்றலுடன் கூடிய வகையில் அமைந்துள்ளது. 2017ஆம் ஆண்டுக்கான விருதுகள், ஆயுள் காப்புறுதி ஆலோசகர்களின் தேசிய அமர்வு (NAFLIA) 2018 காப்புறுதி மாநாட்டில் வழங்கப்பட்டது.  

இந்தப் போட்டியில், சகல பிரிவு வெற்றியாளராக செலிங்கோ லைஃவ்பின் S.K.A.S பெரேரா தெரிவானார். தெரிவு செய்யப்பட்ட முன்னணி வெற்றியாளர்கள் பத்துப் பேரில் செலிங்கோ லைஃவ் சார்பாக இடம்பிடித்த ஐவரில் ஒருவராகவும் இவர் திகழ்கின்றார். H.A.D.S. நிலாந்தி - மூன்றாமிடம், S.A.S. சந்திரலால் - நான்காம் இடம், N.L. பெர்ணான்டோ ஆறாம் இடம், K.A.D.N.R. புஷ்பா பத்தாம் இடம் ஆகியோர் ஏனைய வெற்றியாளர்கள் ஆவர்.  

IASL பிரகடனம் செய்த 100 முன்னணி வெற்றியாளர்களில் 23 பேர் கடந்த 14 வருடங்களாக செலிங்கோ லைவ் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.  

‘தொழிற்சார் பண்பையும் ஒழுக்க விழுமியத்தையும் விற்பனைத் துறை சார் நிபுணர்களுக்கான இரண்டு முக்கிய பெறுமானங்களாக செலிங்கோ லைஃவ் எப்போதுமே ஊக்குவித்து வந்துள்ளது. 

“எமது சந்தை தலைமைத்துவமானது, பெரும்பாலும் இந்த விற்பனைக் குழுவோடு தொடர்பு பட்டதாகவே அமைந்துள்ளது” என்று கம்பனியின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஆர்.ரெங்கநாதன் கூறினார். “ஆயுள் காப்புறுதி விழிப்புணர்வுக்கான முயற்சிகளைக் மேற்கொண்ட எல்லா கம்பனிகளினது வெற்றியாளர்களையும் நாம் பாராட்டுகின்றோம். அதேநேரம் செலிங்கோ லைஃப்பின் கொடியை அதி உயரத்தில் பறக்கச் செய்த எமது சொந்தக் குழுவை நாம் மிகவும் பாராட்டுகின்றோம்” என்று அவர் மேலும் கூறினார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X