Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2020 ஜனவரி 02 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆர்பிகோ பினான்ஸ் கம்பனி பிஎல்சி (AFCP) தனது டிஜிட்டல் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் காண்பிக்கும் தொடர்ச்சியான செயற்பாடுகளுக்காக ISO 27001:2013 சான்றிதழைப் பெற்றுக் கொண்டது. ஆறு தசாப்த காலப்பகுதிக்கு மேலாகத் தனது செயற்பாடுகளை முன்னெடுப்பதுடன், அசோசியேட் மோட்டர் பினான்ஸ் கம்பனி பிஎல்சியின் (AMF) உரிமையாண்மையின் கீழ், தனது செயற்பாடுகளை முன்னெடுக்கின்றது.
தலைமைத்துவத்தின் உறுதியான வழிகாட்டலில் இயங்கும் நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை அனுபவங்களை ஏற்படுத்திக் கொடுப்பது, செயன்முறைகளைச் சீராக்கல், தீர்வுகளை டிஜிட்டல் மயமாக்கல் போன்ற சேவைகளுக்காக டிஜிட்டல் மயமாக்கமடைந்த வண்ணமுள்ளது. இந்நிலையில், AFCP தனது தகவல் பாதுகாப்பு முகாமைத்துவ கட்டமைப்புகளை வலிமைப்படுத்துவதில் காண்பிக்கும் அர்ப்பணிப்பு, சாதனங்கள், பாரிய தரவுகள் இணைக்கப்பட்டுள்ள காலகட்டத்தில், தரவுப் பாதுகாப்பை உறுதி செய்வது போன்றவற்றை வலிமைப்படுத்துவதில் காண்பிக்கும் ஈடுபாட்டை மேலும் உறுதி செய்யும் வகையில், இந்தச் சான்றிதழ் அமைந்துள்ளது.
இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி நிறைந்த காலப்பகுதியில், வங்கியியல், நிதியியல் துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு சைபர் தாக்கங்கள், டேட்டா விதிமீறல்கள் போன்றவை பாரிய சவால்களாக அமைந்துள்ளன.
AFCP இன் தகவல் தொழில்நுட்ப செயற்பாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள இந்தச் சான்றிதழினூடாக, அதன் வாடிக்கையாளர்களுக்கும் பங்காளர்களுக்கும் வழங்கும் தகவல் பாதுகாப்பு, சைபர் பாதுகாப்பு, பிரத்தியேக பாதுகாப்பு போன்றன மேலும் வலிமை பெற்றுள்ளன.
முன்னணி சர்வதேச சான்றளிப்பு அமைப்பான Bureau Veritas இடமிருந்து ISO 27001:2013 சான்றிதழை AFCP பெற்றுள்ளது.
ES2 சொலூஷன் உடன், இந்த அமைப்பு பங்காண்மையைக் கொண்டுள்ளது. இந்த அமைப்பின் நிபுணத்துவ வழிகாட்டல், வழிமுறை போன்றன, ஆரம்பம் முதல் சான்றிதழைப் பெற்றுக் கொண்டமை வரையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தனவாக அமைந்துள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 May 2025
18 May 2025
18 May 2025