Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜூலை 25 , பி.ப. 06:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை மாணவ மாணவிகளுக்காக இந்திய அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பை (Engineering) இலவசமாகத் தொடர்வதற்கான புலமைப்பரிசிலை இந்தியாவின் DACE Campus வழங்குகிறது. அண்ணா பல்கலைக்கழகம், பழைமையானதும் உலகப் பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகமுமாகும். அதன் பட்டங்கள் இலங்கைப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கிகரிக்கப்பட்டவையாகும். இப்பட்டப்படிப்பை மேற்கொள்ள விரும்பும் மாணவர்களிடமிருந்து உடனடியாக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
ஓகஸ்ட் 06, 2019 விண்ணப்ப முடிவுத் திகதியாகும். மாணவர்கள் 18 வயதுக்கு மேற்பட்டவராகவும், க.பொ.த உயர்தர கணிதப் பிரிவில் 3 சித்திகள் பெற்றிருத்தலும் வேண்டும். குறிப்பாக, இணைந்த கணிதம், பௌதீகவியல், இரசாயனவியல் ஆகிய பாடங்களில் தோற்றியிருத்தல் வேண்டும்.
தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்கான பட்டப்படிப்பு செப்டெம்பர் மாதம் ஆரம்பமாகும். மாணவர்கள் பின்வரும் பொறியியல் துறைகளில் விருப்பத் தெரிவைச் செய்து கொள்ளலாம்.
E Civil Engineering
B.E Computer Science & Engineering
B.E Mechanical Engineering
B.E Electronics & Communication Engineering
B.E Electrical & Electronics Engineering
B.E Petroleum Engineering
பட்டங்கள் யாவும் சர்வதேச அங்கிகாரத்தைப் பெற்றவை. இது நான்கு வருட முழுநேரப் பாடநெறியாகும். அனைத்து செலவினங்களும் வருடத்துக்கு ஐந்து இலட்சத்து 85 ஆயிரம் இலங்கை ரூபாயாகும். இப்பாடநெறிக் கட்டணங்களில் இருந்து 75% இற்கும் அதிகமான கழிவு மாணவர்களுக்கு வழங்கப்படும். மாணவர்கள் செலுத்த வேண்டிய தொகை வருடத்துக்கு 3 இலட்சத்து 50 ஆயிரம் இலங்கை ரூபாய் மாத்திரமே. இதனை இரு தவணைகளில் செலுத்த முடியும்.
இந்தியாவின் DACE Campus (Dhannish Ahmed College of Engineering) அண்ணா பல்கலைக்கழகத்தின் கூட்டிணைப்புச் செய்யப்பட்ட, தனியே பொறியியல் துறைக்காக மாத்திரம் உருவாக்கப்பட்ட அங்ககரிக்கப்பட்ட சிறப்பு Campus ஆகும். DACE Campus தெரிவு செய்யப்பட்ட சகல மாணாக்கர்களினதும் சகல செலவினங்களையும் ஏற்றுக் கொண்டு சிறந்த சேவையாற்றி வருகின்றது.
DACE சர்வதேச தரநிர்ணய சான்றிதழ் ISO 9001 : 2015 பெற்ற நிறுவனமாகும். 2(F) C12B சான்றிதழை இந்தியாவின் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடமிருந்து பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். மிகப் பிரமாண்டமான பொறியியல் துறைக்கென மாத்திரம் அமைக்கப்பட்ட நூலகத்தில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான நூல்கள், 4,500 தலைப்புகளில் பொறியியல்சார் நூல்களும் உலகளாவிய ரீதியில் வெளியிடப்படும் பொறியியல் சஞ்சிகைகள் Online Journals, NEPTEL, JGATE, DELNET, Etc..... 24 மணிநேர இலவச WIFI வசதிகளுடன் 24 மணிநேர உதவிச் சேவை மய்யம் மற்றும் மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் உரையாடும் Video Conference Facility வழங்கப்படும். ஆண்களுக்கும் பெண்களுக்குமென தனித்தனியான தங்குமிடவசதி மிகப் பாதுகாப்பான முறையில் பல்கலைக்கழகத்துக்குள் அமைந்துள்ளது.
மேலதிக விவரங்களுக்கு: இலங்கை நாட்டின் வதிவிடப் பிரதிநிதியிடமிருந்து விண்ணப்ப படிவங்களையும் தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடியும். இலங்கைக்கான முகாமையாளர் - 0775 947991, தேசிய ஒருங்கிணைப்பாளர் - 0773118868, சட்ட ஆலோசகர் - 0774 747235 மின்னஞ்சல் - scholdace@gmail.com.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
25 minute ago
29 minute ago
43 minute ago