S.Sekar / 2021 பெப்ரவரி 08 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவில் பணிபுரியும் சுமார் 10,000 இலங்கையின் ஊழியர்களுக்கு தமது ஊழியர் சேமலாப நிதியத்தை (EPF) அணுகுவதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் இந்தியாவுடன் உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
தற்போது இந்தியாவில் பணிபுரியும் இலங்கையின் ஊழியர்கள் தமது ஓய்வு காலப்பகுதிக்கான நிதிப் பங்களிப்பை இந்தியாவின் ஓய்வூதியத் திட்டங்களுக்கு மாற்றம் செய்வதுடன், அவர்கள் 58 வயதை பூர்த்தி செய்யும் போது மாத்திரமே அவர்களால் அந்தப் பணத்தை மீளப் பெறக்கூடியதாக இருக்கும். எவ்வாறாயினும், இலங்கையில் பணியாற்றும் இந்திய ஊழியர்களின் ஓய்வூதியப் பங்களிப்பை இலங்கையின் ஊழியர் சேமலாப நிதியத்தில் பங்களிப்பு செய்ய முடியும் என்பதுடன், தமது நாட்டுக்கு முழுமையாக மீளத்திரும்பும் போது அந்தத் தொகையை அவர்களால் திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும் என தொழிலாளர் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புதிய உடன்படிக்கையினூடாக, இந்தியாவில் இந்திய நிறுவனமொன்றில் பணியாற்றும் இலங்கையருக்கு, இலங்கையிலுள்ள தமது ஊழியர் சேமலாப நிதியத்துக்கு தமது பங்களிப்பை மாற்றிக் கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என்பதுடன், இந்தியாவின் ஓய்வூதியத் திட்டத்தின் நிதியை பயன்படுத்த வேண்டிய தேவை இல்லாமல் செய்யப்படும் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புதிய திட்டத்தினூடாக, தமது சொந்த நாட்டுக்கு மீளத் திரும்பும் போது, தமது ஓய்வூதிய பங்களிப்புத் தொகையை மீளப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பும் அவர்களுக்கு வழங்கப்படும். தற்போது பலருக்கு இது பெரும் சிக்கலாக அமைந்துள்ளது. அவர்கள் தமது 58 வயதை பூர்த்தி செய்ததும், மீண்டும் இந்தியாவுக்கு சென்று தமது ஓய்வூதியத் தொகையை பெற்றுக் கொள்ள வேண்டிய நிலை காணப்படுகின்றது.
50 minute ago
53 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
53 minute ago
1 hours ago
1 hours ago