Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Gavitha / 2021 ஜனவரி 24 , பி.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெள்ளிக்கிழமை வரை இடம்பெற்ற கொழும்புப் பங்குப்பரிவர்த்தனை கொடுக்கல் வாங்கல்களின் போது, நடப்பு ஆண்டில் இலங்கையின் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பங்குகள் 24.9 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. இதனூடாக, ஆண்டின் முதல் 22 நாட்களில் முதலீட்டாளர்கள் 739 பில்லியன் ரூபாய் வருமானத்தைப் பெற்றுள்ளனர்.
இலங்கை மத்திய வங்கியின் நாணய மாற்றுக் கொள்கைகள் வட்டி வீதங்களை குறைந்த மட்டத்தில் பேணுகின்றதுடன், நாணயப் பெறுமதியிலும் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றமையின் காரணமாக கொழும்பு பங்குச் சந்தையின் மீது முதலீட்டாளர்களின் நாட்டம் அதிகரித்துள்ளதாக துறைசார் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்த அதிகரிப்பானது, 2019 ஆம் ஆண்டில் இலங்கையில் பதிவாகியிருந்த மொத்த தேசிய உற்பத்திப் பெறுமதியான 15 ட்ரில்லியன் ரூபாய்கள் என்பதில் 4.9 சதவீத அதிகரிப்பாகும்.
2020 ஆம் ஆண்டு முழுவதிலும் பதிவாகியிருந்த 109 பில்லியன் ரூபாய் எனும் பெறுமதியுடன் ஒப்பிடுகையில், கடந்த வாரத்தில் பங்குகளின் பெறுமதி 318 பில்லியன் ரூபாய் அதிகரிப்பை பதிவு செய்திருந்தன.
கொழும்பு பங்குப் பரிவர்த்தனையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண், வியட்நாமின் ஹனொய் பங்குப் பரிவர்த்தனையின் பெறுபேறுகளை கடந்திருந்தது. 2021 ஆம் ஆண்டில் வியட்நாம் பங்குப் பரிவர்த்தனை 18.2 சதவீத அதிகரிப்பை பதிவு செய்திருந்ததுடன், கொழும்பு பங்குப் பரிவர்த்தனை 18.34 சதவீத அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக செய்தி மற்றும் தரவு வெளியீட்டு அமைப்பான ப்ளும்பேர்க் குறிப்பிட்டுள்ளது.
வெனிசூலா பங்குப் பரிவர்த்தனை 44.6 சதவீத அதிகரிப்பைப் பதிவு செய்து முதலாமிடத்திலும், இரண்டாமிடத்தில் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையும் காணப்படுகின்றன.
பெருமளவு பணம் அச்சிடப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில் கொழும்பு பங்குப் பரிவர்த்தனை 17.2 சதவீத அதிகரிப்பை பதிவு செய்திருந்தது.
2019 ஆம் ஆண்டின் முற்பகுதியிலிருந்து இலங்கை பெருமளவு பணத்தை அச்சிட்ட வண்ணமுள்ளது. இதனூடாக நாட்டின் நாணயப் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதுடன், தரப்படுத்தல்களும் குறைக்கப்பட்டுள்ளன. நாணயப் பெறுமதி வீழ்ச்சியை கட்டுப்படுத்தும் நோக்கில் இறக்குமதிக் கட்டுப்பாடுகள் 2020 மார்ச் மாதம் முதல் அமல்ப்படுத்தப்பட்டுள்ளது.
இறக்குமதிக் கட்டுப்பாடு காரணமாக சில நிறுவனங்களின் வருமானம் பெருமளவு வீழ்ச்சியடைந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
6 hours ago