Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜூன் 13 , பி.ப. 12:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
NDB லீசிங் நிலையங்கள் இரத்தினபுரி, களுத்துறையில் உள்ள கிளைகளில் திறக்கப்பட்டுள்ளன. NDB லீசிங் உதவித் துணைத்தலைவர் அஜித் சேனாதீர, வங்கியின் சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகளால், சம்பிரதாயபூர்வமாக இவை திறந்து வைக்கப்பட்டன.
இந்த இரண்டு புதிய NDB லீசிங் நிலையங்களும் NDB இன் 4ஆவது, 5ஆவது கிளைகளாகும். இவை முறையே தனிப்பட்ட கவனம், வீட்டு வாசற்படிக்கே வந்து சேவைகளை வழங்கக்கூடிய வகையில் சிறப்பு வாய்ந்தவையாகும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் பரவலாக்கம் செய்யப்பட்ட செயன்முறைகளை எளிதில் அணுகக்கூடியதாக இருப்பதுடன், தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதிலும், சேமிப்பு நேரங்களிலும் வெளிப்படைத்தன்மையை பெற்றுக்கொள்ள முடியும்.
இதற்கிணங்க கம்பஹா, நீர்கொழும்பு, குருணாகல், இரத்தினபுரி மற்றும் களுத்துறையில் தற்போது NDB லீசிங் நிலையங்கள் இயங்கி வருகின்றன. NDB லீசிங் ஆனது, சமீப காலங்களில் வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு லீசிங் சேவைகளை எளிதில் அணுகக் கூடிய வகையில் சௌகரியமான முறையில் லீசிங் துறையில் புரட்சிகரமான படிகளை முன்னெடுத்து வருகிறது. NDB லீசிங் வசதியில் மிக முக்கியமான நன்மை யாதெனில், உத்தரவாதமளிப்போரின் அவசியமில்லை என்பதாகும். ‘NDB இன் ஒருநாள் லீசிங்’ என்ற கருப்பொருளில், உத்தரவாதமளிப்போர் மற்றும் முதல் கட்டணமின்றி, குறைந்தபட்ச கடதாசி வேலைகளுடன், தொந்தரவுகளற்ற வகையில் இந்தச் சேவைகளைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது.
NDB லீசிங் போட்டிகரமான வட்டி விகிதங்களையும், நெகிழ்வான மீள் செலுத்தும் கட்டணத் திட்டங்களையும், 7 ஆண்டுகள் வரை நீட்டித்து வழங்குகிறது. NDB வாடிக்கையாளர்கள், தள்ளுபடிகளுடனான காப்புறுதிகளுடன் இணைந்த தனிப்பட்ட மீள்செலுத்தல் திறனுடன் ஒப்பிடக்கூடிய, தனிப்பயனாக்கப்பட்ட மீள் செலுத்தும் கட்டணத் திட்டங்களை அனுபவிக்க முடியும். மேலதிகமாக எஞ்சிய மதிப்பு / பலதரப்பட்ட RV உடன் கட்டமைக்கப்பட்ட வசதிகளுடன் கட்டணத்திட்டங்கள் உள்ளன.
NDB லீசிங் தொடர்ச்சியாக வாடிக்கையாளர்களின் மாறுபட்ட தேவைகளுக்கு இடமளிக்கக்கூடிய வகையில், வாகன நிதியியல் கட்டணங்களை மேம்படுத்தியுள்ளது.
14 minute ago
16 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
16 minute ago
27 minute ago