2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

இரு மஹிந்திரா பவரோல் ஜெனரேற்றர்களை விநியோகம்

Freelancer   / 2023 ஜூலை 12 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐடியல் மோட்டர்ஸ், நவலோக குழுமத்தின், கொழும்பு மற்றும் கண்டியில் அமைந்துள்ள நவலோக கொலேஜ் ஒஃவ் ஹையர் ஸ்டடிஸ் நிலையங்களுக்கு அவற்றின் வலுத் தேவைகளை நிர்வகித்துக் கொள்வதற்காக இரு மஹிந்திரா பவரோல் ஜெனரேற்றர்களை விநியோகித்துள்ளது. 

தற்போது மஹிந்திரா பவரோல் ஜெனரேற்றர்கள் 28 மாதிரிகளில் கிடைக்கின்றன. அவை 5 KVA முதல் 625 KVA வரையில் அமைந்திருப்பதுடன், அவற்றை கவர்ச்சிகரமான விலையில், நாடு முழுவதிலும் காணப்படும் ஐடியல் மோட்டர்ஸ் கிளை வலையமைப்பிலிருந்து கொள்வனவு செய்து கொள்ள முடியும். பவரோல் ஜெனரேற்றர்களில், மஹிந்திரா என்ஜின் காணப்படுவதுடன், Leroy-Somer எனும் புகழ்பெற்ற ஐரோப்பிய தொழில்நுட்பத்தினூடாக வலுப் பிறப்பாக்கல் அலகு மேற்கொள்ளப்படுகின்றது. மேலும், மஹிந்திரா பவரோலில் உலகத் தரம் வாய்ந்த DPC (Digital Power Control) பயன்படுத்தப்படுவதால், சிறந்த எரிபொருள் சிக்கனம், குறைந்த கசிவுகள் மற்றும் தங்கியிருக்கக்கூடிய வலு வெளியீட்டை வழங்குகின்றன.

சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பவரோல் ஜெனரேற்றர்கள் பல்வேறு வகைகளில் அமைந்துள்ளன. சௌகரியமானதும், அளவில் சிறியதாக அமைந்துள்ள 5 KVA ஒற்றை கட்டமைப்பு ஜெனரேற்றர், 10 KVA முதல் 30 KVA ஒற்றை கட்டமைப்பு ஜெனரேற்றர் கட்டமைப்பு மற்றும் 10 KVA முதல் 625 KVA மூன்று கட்டமைப்பு ஜெனரேற்றர் போன்றன அடங்குகின்றன. 2017 இல், மஹிந்திரா பவரோல் டீசல் ஜெனரேற்றர்களை நாட்டில் விநியோகிக்கும் ஏக உரிமை ஐடியல் மோட்டர்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. அன்று முதல், பாரியளவு மற்றும் சிறியளவு நிறுவனங்களின் வலுத் தேவைகளை நிவர்த்தி செய்வதில் மஹிந்திரா பவரோல் பிரதான பங்களிப்பு வழங்குநராக அமைந்துள்ளதுடன், இதுவரையில் இலங்கையின் ஜெனரேற்றர் சந்தையில் சந்தை முன்னோடி எனும் கீர்த்தி நாமத்தையும் பெற்றுள்ளது.

ஐடியல் குழுமத்தின் பவரோல் தயாரிப்பின் சிரேஷ்ட முகாமையாளர் ஜனக குலதுங்க, மஹிந்திரா பவரோல் ஜெனரேற்றர்கள் பற்றி தெரிவிக்கையில், “மஹிந்திரா பவரோல் தயாரிப்புகள் இலங்கையில் காணப்படும் இந்திய ஜெனரேற்றர் தயாரிப்புகள் வரிசையில் முன்னோடி ஸ்தானத்தைப் பெற்றுள்ளன. எமது சிறந்த விற்பனைக்கு பிந்திய சேவையினூடாக, குறுகிய காலப்பகுதியில் எம்மால் இந்த பிரத்தியேகமான வெற்றிச் சாதனையை எய்த முடிந்ததையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். மேலும், உலகளாவிய ரீதியில் நுகர்வோர்கள் மத்தியில் அதிகளவு வரவேற்பையும், நன்மதிப்பையும் வென்ற நாமமாக மஹிந்திரா பவரோல் திகழ்கின்றது. தற்போது, மஹிந்திரா பவரோல் ஜெனரேற்றர்களினால், பல்வேறு உற்பத்தியாளர்கள், தொழிற்சாலைகள், ஹோட்டல்கள், வங்கிகள் மற்றும் சேவை நிலையங்களுக்கு ஜெனரேற்றர்கள் விநியோகிகப்பட்டுள்ளன.” என்றார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், “குறிப்பாக, மஹிந்திரா டீசல் ஜெனரேற்றர்கள் குறைந்த சத்தத்தில் இயங்குகின்றன. உயர் எரிபொருள் சிக்கனத்தை வழங்குவதுடன், பல வருட காலம் சிக்கல்களின்றி இயங்கும் உத்தரவாதத்தை வழங்குகின்றன. குறுகிய காலப்பகுதியினுள், மஹிந்திரா பவரோல் ஜெனரேற்றர்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிகளவு பிரபல்யமடைந்துள்ளன. ஐடியல் மோட்டர்ஸ் நிறுவனத்தினால் வழங்கப்படும் சிறந்த வாடிக்கையாளர் மற்றும் விற்பனைக்கு பிந்திய சேவை போன்றவற்றினால், பெருமளவு வாடிக்கையாளர்கள் கவர்ந்திழுக்கப்பட்டுள்ளனர் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். சிறந்த வாடிக்கையாளர் சேவையைப் பெற்றுக் கொடுக்க எம்மை அர்ப்பணித்துள்ளோம். நாடு முழுவதிலும் காணப்படும் எமது 15 ஐடியல் ஃபஸ்ட் சொய்ஸ் சேவை நிலையங்களினூடாகவும், வாடிக்கையாளர்களின் தேவைகளின் அடிப்படையில், வினைத்திறனான சேவைகள் வழங்கப்படுவதுடன், சகாயமான கட்டணங்களில் பெருமளவு சௌகரியமும் சேர்க்கப்படுகின்றன. எமது வாடிக்கையாளர்களுக்கு எப்போதும் நலன்புரிச் செயற்பாடுகளை முன்னுரிமையளிக்கும் வகையில், அவர்களின் பெறுமதியான நேரத்தை சேமித்துக் கொள்ளக்கூடிய வகையில், அவசியமான உதிரிப் பாகங்களை ஐடியல் மோட்டர்ஸ் ஊடாக பெற்றுக் கொள்ளக்கூடிய வசதிகளையும் வழங்குகின்றோம்.” என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X