2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இருபதாவது ஆண்டில் SPECTRUM INSTITUTE OF SCIENCE & TECHNOLOGY

S.Sekar   / 2021 மே 11 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

Spectrum Institute of Science & Technology (SIST), கல்வித்துறை மேன்மையில் 20 ஆவது ஆண்டில் காலடியெடுத்து வைத்து, அதன் சிறப்பான கல்விப் பயணத்தில் மற்றொரு சாதனை இலக்கினைக் கொண்டாடுகின்றது. கற்கைபீடத்தில் இடம்பெற்ற ஒரு நிகழ்வில் அனைத்து சமயங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சடங்குகளுடன், மரம் நாட்டும் வைபவமும் இடம்பெற்றது.

SIST தனது செயற்பாடுகளை ஆரம்பித்த காலம் முதற்கொண்டு, இரண்டு தசாப்தங்களாக கல்வியில் சிறந்து விளங்குவதுடன், மென்மேலும் வளர்ச்சி கண்டுள்ளது. இலங்கையில் அறிவியல் வாழ்க்கை விஞ்ஞானத்தில் ஒரு முன்னோடியான SIST, ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறைகளில் இளைஞர்,யுவதிகளின் அபிலாஷைகளை வளர்த்து, இளம் விஞ்ஞானிகளைப் பயிற்றுவிக்கும் நோக்குடன் அதன் ஸ்தாபகரும், பணிப்பாளர் சபைத் தலைவருமான ஜயந்தன் குலசிங்கம் அவர்களால் 2001 இல் ஸ்தாபிக்கப்பட்டது.

இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் வாழ்க்கை விஞ்ஞானம், பொறியியல் தொழில்நுட்பம், வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் SIST இப்போது மதிப்புமிக்க பல்வேறு வெளிநாட்டுப் பட்டப்படிப்புகளை வழங்குகிறது. SIST என்பது இங்கிலாந்தின் Edinburgh Napier University மற்றும் மலேசியாவின் Lincoln University College ஆகியவற்றின் கூட்டுப் பங்காளராகும்.

மெட்ராஸ் தகவல் தொழில்நுட்ப கற்கைமையத்தின் (Indian Institute of Technology, Madras) ஒன்லைன் கல்வி நிகழ்ச்சித்திட்டத்திற்காக அதன் பரீட்சை நடைமுறைப் பங்காளராகவும் SIST உள்ளது.

SIST இன் விஞ்ஞான ஆலோசனைச் சபையில் பேராசிரியர் ஷெர்வந்தி ஹோமர்-வன்னியசிங்கம், Vascular சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர் - Leeds General Infirmary, ஐக்கிய இராச்சியம், பேராசிரியர் பிரான்சிஸ் டி சில்வா, மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர், பேராசிரியர் சரத் குணசேகர, Ohio பல்கலைக்கழகத்தின் எந்திரவியல் பொறியியல் துறை முன்னாள் தவிசாளர் மற்றும் திரு. பாலா மகேந்திரன் Basildon County ஐக்கிய இராச்சியத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஆகியோர் அடங்கியுள்ளனர். 

SIST இன் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திச் சபையானது பேராசிரியர் சந்திராணி விஜேரத்ன (இலங்கை, ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் முன்னாள் தாவரவியல் துறை தலைவர்), மற்றும் கலாநிதி பத்மசிறி ரணசிங்க (பணிப்பாளர், மூலிகை தொழில்நுட்ப பிரிவு, கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனம், இலங்கை) தலைமையில் இயங்குவதுடன், தீவிரமான ஆராய்ச்சியை பீடம் மற்றும் மாணவர்களுடன் இணைந்து முன்னெடுத்து வருகின்றது.

இந்த பல்கலைக்கழக வளாகம் இலக்கம் 07, கிரிமண்டல மாவத்தை, கொழும்பு 05 என்ற முகவரியில் 30,000 சதுர அடி இட வசதியில் அமைந்துள்ளதுடன், மேலும் Molecular Biology, Tissue Culture, Chemistry மற்றும் Microbiology ஆகியவற்றின் கீழ் பரிசோதனை ஆய்வுகளை மேற்கொள்வதற்காக நான்கு அதிநவீன ஆய்வுகூடங்களையும் கொண்டுள்ளமை அதன் கூடுதல் பலமாகும்.

மாணவர்களுக்கு வேறு எங்கிலும் கிடைக்காத பல்கலைக்கழக அனுபவத்தை வழங்கவேண்டும் என SIST நம்புகிறது. அந்த வகையில், Spectrum மாணவர் சங்கமானது, சமூக சேவை, பசுமைப் படை, அழகியல் கலைகள், விளையாட்டு காண் தொடர்பாடல் மற்றும் டிஜிட்டல் ஊடகம் ஆகிய ஐந்து முக்கிய வழிகளின் கீழ் செயல்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .