2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

இலங்கை மத்திய வங்கியின் திட்டம் இன்று

Gavitha   / 2017 ஜனவரி 03 , மு.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாணயக்கொள்கை மற்றும் நிதித்துறைக் கொள்கைகள் தொடர்பில் 2017 இலும் அதனைத்தொடர்ந்து பின்பற்ற வேண்டிய கொள்கைகள் ஆகியவற்றை இன்று வெளியிடவுள்ளதாக, இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.   
இந்த அறிவித்தல்களை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி. இந்திரஜித் குமாரசுவாமி தனியார் துறையினர் மற்றும் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் மேற்கொள்வார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.   
ஓவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இந்த சம்பிரதாயமுறைப் பின்பற்றப்படுவதுடன், 2017ஆம் ஆண்டு மேற்கொள்ளப்படவுள்ள இந்தக் கொள்கை அறிவிப்பு, இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்படும் பதினோராவது தொடர்ச்சியான கொள்கைப்பிரகடன வெளியீடு என்பதும் குறிப்பிடத்தக்கது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X