2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

இலங்கையின் இரண்டு ர்ரயறநi அடிப்படை திறன்பேசிகள்

Gavitha   / 2016 ஜூன் 15 , மு.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

Huawei இலங்கையில் இரு புதிய அடிப்படை திறன்பேசிகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது. நாட்டில் அடிப்படை திறன்பேசிகள் சந்தையானது, மிகவும் போட்டித்திறன் கொண்டதாக காணப்படுகின்ற நிலையில், அதனை இலக்காகக் கொண்டு இச்சாதனங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. நிறுவனத்தின் தகவல்களின் பிரகாரம், மிகவும் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தப்பட்ட Huawei Y தொடர் ஸ்மார்ட்போன் உற்பத்திகளின் கீழ் இச்சாதனங்கள் வெளிவரவுள்ளதுடன், இலங்கையில் கறுப்பு, பொன் மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கவுள்ளது.  

மிகச் சிறந்த கமரா அனுபவம், அதிக வேகம் கொண்ட இணைப்புத்திறன் மற்றும் நியாயமான விலை ஆகிய அனைத்து அம்சங்களையும் எதிர்பார்த்துள்ளவர்களுக்காகவே இந்தத் திறன்பேசிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.  இரு திறன்பேசிகளும் 1GB RAM மற்றும் 8GB உள்ளிணைக்கப்பட்ட தேக்ககம் மற்றும் அதிகரிக்கப்படக்கூடிய தேக்கக ஆதரவுடன் வெளிவரவுள்ளன. இரு புதிய Huawei அலைபேசி சாதனங்களும் 3புG மற்றும் 4G ஆகிய இரு வடிவங்களில், வேறுபட்ட உhipளநவ தொழில்நுட்பங்களுடன் கிடைக்கப்பெறவுள்ளன.  

நிறுவனத்தின் சார்பில் தனது பெயர் விபரங்களை வெளியிட விரும்பாத பேச்சாளர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், 'அடிப்படை திறன்பேசி சந்தையை இலக்காகக் கொண்ட இந்த இரு உற்பத்திகளும் வெகுவிரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. அவை ஜுன் மாதத்தின் நடுப்பகுதியில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பாரம்பரியமான திறன்பேசிகளின் வர்த்தக நாமங்கள் தொடர்பில் சலித்துப் போய், சிறப்பான பெறுபேறுகளைக் கொண்ட திறன்பேசியை எதிர்பார்க்கின்ற எவரையும் இது கவர்வதுடன், நியாயமான விலையில் கிடைக்கவுள்ளது என்பதில் எவ்விதமான சந்தேகங்களும் கிடையாது. மேலும் இரு வருட சிங்கர் உத்தரவாதத்துடன் கிடைக்கப்பெறுகின்றது' என்று குறிப்பிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X