Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 நவம்பர் 22 , பி.ப. 06:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டு, ஒரு மாத காலத்தினுள் இந்த ஆண்டின் மாபெரும் மலிவு விற்பனை பற்றி டராஸ் அறிவித்துள்ளது. டராஸ் “Black Friday” ஊக்குவிப்பு மலிவு விற்பனை, உலகளாவிய டராஸ் கலண்டரில் மிக முக்கியமான நிகழ்வு என்பதோடு, ஒன்லைன் கொள்வனவாளர்கள் சம்பந்தமாக வெகு விரைவில் முக்கிய நிகழ்வாக இருக்குமென அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
ஐக்கிய அமெரிக்காவில் “Black Friday” என்பது, பாரம்பரியமாக நன்றி தெரிவிக்கும் தினத்துக்கு (Thanks Giving) அடுத்து வரும் நிகழ்வாகும். கிறிஸ்மஸ் ஷொப்பிங்-இன் ஆரம்பமாக அது கருதப்படுவதோடு, பெரும்பாலான முக்கிய சில்லறை விற்பனையாளர்கள் மலிவு விற்பனையை ஏற்கெனவே ஆரம்பித்து விடுகின்றனர். கனடா, பிரிட்டன், மெக்சிகோ, இந்தியா, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, ஜேர்மனி, தென்னாபிரிக்கா, அயர்லாந்து, டென்மார்க், லெபனான், நைஜீரியா உட்பட பல நாடுகளில் “Black Friday” மலிவு விற்பனை இடம்பெறுகின்றது.
உண்மையான உற்பத்திப் பொருட்களின் விலையில் 70% கழிவுத் தொகையுடன், வாழ்க்கையில் என்றுமே கிடைக்காத ஒன்லைன் ஷொப்பிங் அனுபவத்தை டராஸ் வழங்குகிறது. நவநாகரீக ஆடைகள், துணைப் பொருட்கள், சுகாதார மற்றும் அழகியல் சாதனங்கள் என்பவற்றுடன், இலத்திரனியல் மற்றும் வீட்டுப் பாவனைப் பொருட்களும் மலிவு விற்பனையில் கிடைக்கின்றன. United Colors of Benetton, Timberland, Triumph, Huawei, Canon, Acer, Skullcandy, Apple, Samsung, Asus உட்பட பல்வேறு வர்த்தக அடையாளங்களை இவை கொண்டுள்ளன. நான்கு நாட்கள் நீடிக்கும் மலிவு விற்பனை, நவம்பர் 25இல் இருந்து 28 வரை நடைபெறும்.
35 minute ago
37 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
37 minute ago
1 hours ago
2 hours ago