Editorial / 2020 ஜூலை 22 , பி.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் கணனி சங்கத்திடமிருந்து SLIIT இனால் முன்னெடுக்கப்படும் கணனிசார் கற்கைளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
சுமார் ஐந்து தசாப்த காலமாக இயங்கி வரும் இலங்கை கணனி சங்கம், இலங்கையின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிபுணர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான அமைப்பாக திகழ்கின்றது. இனால் தகவல் தொழில்நுட்பம், மென்பொருள் பொறியியல், கணனி கட்டமைப்புகள் மற்றும் வலைப்பின்னல் பொறியியல், தகவல் கட்டமைப்புகள் பொறியியல் போன்ற தகவல் தொழில்நுட்பசார் இளமானிப் பட்டங்களுக்கு 2017ஆம் ஆண்டு முதல் இணைந்து கொண்டவர்களுக்கு பொருந்தும் வகையில் இந்த சான்றை வழங்கியுள்ளது. ஏனைய கணனிசார் கற்கைகளில் ஈடுபடுவோருக்கு இந்த சான்றளிப்பு விரைவில் வழங்கப்படும்.
முக்கியமாக, தற்போது, Seoul Accord இன் அங்கத்தவராக இலங்கை கணனி சங்கம் திகழ்கின்றது. உலகளாவிய ரீதியில் தகவல் தொழில்நுட்ப கற்கைகளுக்கு பரஸ்பர சர்வதேச தர நிர்ணயமாக இது அமைந்துள்ளது. அபிவிருத்தியடைந்த நாடுகளான அமெரிக்கா, கனடா, ஐக்கிய இராஜ்ஜியம், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், மலேசியா, நியுசிலாந்து போன்றன இந்த Seoul Accord இன் அங்கத்தவர்களாக திகழ்கின்றன.
இதன் பெறுபேறாக, சகல Seoul Accord அங்கத்தவர்களும் கல்வியகத்தின் தகவல் தொழில்நுட்ப கற்கைகளை ஏற்றுக் கொள்ளும். இதனூடாக SLIIT இல் கற்கைகளை பூர்த்தி செய்யும் மாணவர்களுக்கு சர்வதேச ரீதியில் தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.
இந்த சான்றிதழைப் பெற்றுக் கொண்டமை தொடர்பில் SLIIT இன் கணனி பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர். சந்திமால் ஜயவர்தன கருத்துத் தெரிவிக்கையில், “எமது பட்டப்படிப்புகளுக்கு முழு சான்றைப் பெற்றுள்ளமை தொடர்பில் பெருமை கொள்கின்றோம். இலங்கை கணனி சங்கத்தின் இந்த சான்றைப் பெற்றுள்ளமையானது, எமது கற்கைகளின் உயர் தரம் மற்றும் கல்விசார் நேர்மைத்தன்மையை பிரதிபலித்துள்ளன. சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட கற்கைகளை வழங்குவதையிட்டு SLIIT ஐச் சேர்ந்த நாம் பெருமை கொள்கின்றோம்” என்றார்.
2000ஆம் ஆண்டில் தகவல் தொழில்நுட்பத்துறையில் கற்கைகளை வழங்குவதற்காக மாணவர்களை SLIIT முதன் முதலில் இணைத்துக் கொண்டது. கடந்த இரு தசாப்த காலப்பகுதியில் SLIIT இன் கணனி பீடத்தினால் தேசிய மட்டத்தில் பெருமளவு பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், நாட்டின் மொத்த தகவல் தொழில்நுட்ப பணியாட்களில் 60%க்கும் அதிகமானவர்கள் இக்கல்வியகத்தினால் தயார்ப்படுத்தப்பட்டுள்ளனர்.
இன்றைய காலகட்டத்தில் கல்வியகத்தின் கணனி பீடத்தில் 4,000க்கும் அதிகமான மாணவர்கள் கல்வி பயில்வதுடன், தகவல் தொழில்நுட்பம், மென்பொருள் பொறியியல், தகவல் கட்டமைப்பு பொறியியல், கணனி கட்டமைப்பு, வலையமைப்பு பொறியியல், ஈடுபாட்டு ஊடகம், தரவு விஞ்ஞானம் போன்ற கற்கைகள் அடங்குகின்றன.
இந்தப் பீடம் தற்போது இரு புதிய பட்டப்படிப்புகளை அறிமுகம் செய்வது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்ட வண்ணமுள்ளது.
9 minute ago
17 minute ago
23 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
17 minute ago
23 minute ago
45 minute ago