Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூன் 28 , மு.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையர்களின் மனங்கவர்ந்த பிஸ்கட் நாமமாக, மலிபன் தெரிவு செய்யப்பட்டுள்ளது. LMD இன் வருடாந்த வர்த்தக நாம விருதுகள் 2018இன் தரப்படுத்தலை இதனூடான மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரான்ட் ஃபினான்ஸ் லங்காவால், நாட்டில் காணப்படும் மனம் விரும்பிய 125 வர்த்தக நாமங்களில் ஒன்றாக, மலிபன் மூன்றாவது தடவையாகத் தரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தக் கௌரவிப்பு தொடர்பில் மலிபன் பிஸ்கட்ஸ் முகாமைத்துவ பணிப்பாளர் குமுதிகா பெர்னான்டோ தெரிவிக்கையில், “மலிபன் ஸ்தாபகர் ஏ.ஜி.ஹின்னி அப்புஹாமியால் கொட்டாஞ்சேனையில் நிறுவப்பட்ட வெதுப்பகத்தில், உற்பத்திச் செயற்பாடுகள் ஆரம்பமாகியிருந்தன. எமது ஸ்தாபகரின் நோக்மான ஒப்பற்ற தரம், சுவை ஆகியவற்றை தொடர்ந்து வழங்குவது எனும் கொள்கையுடன் திகழும் மலிபன் நிறுவனம், தற்போதும் அதை உறுதி செய்யும் வகையில், தற்போதைய தலைவர் ரத்னபால சமரவீரவால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.
மலிபன் பிஸ்கட்ஸ் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரதம நிறைவேற்று அதிகாரி ரவி ஜயவர்தன தெரிவிக்கையில், “பாரம்பரிய வர்த்தக நாமம் எனும் வகையில் மலிபன் சகல வயதையும் சேர்ந்த நுகர்வோரின் தேவைகளைப் புரிந்து கொண்டு, தொடர்ச்சியாகத் தனது உற்பத்திகளில் மேம்படுத்தல்களை முன்னெடுத்த வண்ணமுள்ளது. 2018 இல் நாம் அறிமுகம் செய்திருந்த புதிய தயாரிப்புகளில் கோப்பி சுவையிலமைந்த Maliban Real Temptation Coffee அமைந்திருந்தது. Maliban Golden Creamy Puff மற்றும் Maliban Faluda Marie போன்றன பதின்ம வயதைச் சேர்ந்தவர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டிருந்தன. 2017இல் Maliban ABC Learnies அறிமுகம் செய்யப்பட்டிருந்ததுடன், குழந்தைகள் மத்தியில் இது மிகவும் வரவேற்பைப் பெற்றுள்ளது” என்றார்.
19 minute ago
27 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
27 minute ago
2 hours ago