S.Sekar / 2021 மே 11 , பி.ப. 12:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்லிம் மக்கள் விருதுகள் 2021 இல் இலங்கை நுகர்வோர் சேவைக்கான வர்த்தக நாமம், மற்றும் இளைஞர்களின் விருப்பத்திற்குரிய வர்த்தக நாமமாக தொடர்ந்து இரண்டாவது வருடமாகவும் டயலொக் தெரிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், ஆண்டின் சிறந்த தொலைத்தொடர்பு வர்த்தக நாமமாக தொடர்ந்து 10 ஆவது ஆண்டாகவும் டயலொக் தெரிவு செய்யப்பட்டுள்ளது. மக்களின்; மனதில் ஆழமான உணர்வுகளை ஏற்படுத்தியுள்ள வர்த்தக நாமங்களை தெரிவு செய்வதற்காக பொதுமக்களினால் வாக்களிக்கப்படும் மக்கள் விருதுகள் டயலொக் வர்த்தக நாமத்திற்கு மகுடம் சூட்டப்பட்டுள்ளது.

தொற்றுநோயை எதிர்கொண்ட கடந்த ஆண்டில், இலங்கையர்கள் தங்கள் தொற்றுநோய் தொடர்பான சவால்களுக்கு உதவுவதற்காக அவர்கள் மிகவும் நம்பிய வர்த்தக நாமத்தை பயன்படுத்தினர்;. கொவிட் - 19 முன்வைக்கும் சமூக சவால்களை எதிர்கொள்வதில் டயலொக்கின் முன்மாதிரியான அர்ப்பணிப்பு மற்றும் அதன் வாடிக்கையாளர்கள், பங்காளர்கள்;, சமூகங்கள் மற்றும் நாட்டிற்கு ஆதரவளிப்பதில் அதன் அசைக்க முடியாத முயற்சிகளுக்கு மக்கள் வழங்கிய பாராட்டுக்கள் மூலம் அவை அங்கீகரிக்கப்படுகின்றன.
அனைத்து சேவைத் தொழில்களிலும் சிறந்த சேவை வழங்குனரை அங்கீகரிக்கும் ‘ஆண்டின் சிறந்த சேவைக்கான வர்த்தக நாமம்’ விருது, தொழில்நுட்பத்தின் உருமாறும் சக்தியைப் பயன்படுத்தி, டயலொக் வழங்கும் பல்வேறு வகையாக அணுகக்கூடிய சேவைகளுக்கு ஒரு சான்றாகும். இது, இதயத்திலிருந்து சேவையை வழங்குவதற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்புடன், வாடிக்கையாளர் அனுபவத்தையும் சேவை வழங்கல் சிறப்பையும் அதன் நிறுவன நெறிமுறைகளுக்கு மத்தியில் திகழ செய்கின்றது.
ஆண்டின் சிறந்த தொலைத்தொடர்பு வர்த்தக நாமம் எனும் விருதானது டயலொக்கின் 10 ஆண்டு கால சாதனையினை நிலைநாட்டியுள்ளது. இலங்கையரின் வாழ்க்கையையும் நிறுவனங்களையும் மேம்படுத்துவதற்கும் வளப்படுத்துவதற்கும் அதன் உறுதிப்பாட்டை வழங்குவதனையும் அங்கீகரித்துள்ளது. ஸ்லிம் மக்கள் விருதுகளில் வழங்கப்பட்ட 3 விருதுகள் இலங்கை மக்களால் வாக்களிக்கப்பட்டுள்ளதோடு, Brand Finance இனால் இலங்கையின் மிகவும் மதிப்பு மிக்க நுகர்வோர் வர்த்தக நாமத்திற்கான விருதும் வழங்கப்பட்டுள்ளது என்பதினால் உணரப்படுவது என்னவென்றால் வர்த்தக நாமத்தின் தொடர்ச்சியாக ஒவ்வொரு இலங்கையரும் ஒன்றிணைக்கப்பட்டனர் என்பதே ஆகும்.
'இளைஞர்களின் விருப்பத்திற்குரிய - ஆண்டின் சிறந்த சேவைக்கான வர்த்தக நாமம்' விருது நுகர்வோர் போக்குகளுக்கு மத்தியில் வர்த்தக நாம விசுவாசத்தை கொண்டாடுகிறதுடன் அர்த்தமுள்ள மாற்றத்தின் தேவையை நிவர்த்தி செய்வது மட்டுமல்லாமல், அணுகக்கூடிய சக்திவாய்ந்த புதுமைகள் மூலம் அதைச் பெருக்க உதவுவதற்கும் இலங்கை இளைஞர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. புதுமையான சேவை வழங்கல்கள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களின் டயலொக்கின் விரிவான போர்ட்ஃபோலியோவைக் கொண்டாடும் இலங்கை இளைஞர்கள், தங்களை ஒன்றிணைத்து, நாட்டின் மிகச்சிறந்த அனுபவங்களை உருவாக்குவதாக அவர்கள் உணர்ந்த வர்த்தக நாமத்திற்கு வாக்களித்துள்ளனர்.
டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும தலைமை நிர்வாக அதிகாரி சுபுன் வீரசிங்ஹ கருத்து தெரிவிக்கையில், இலங்கை நுகர்வோர் சேவைக்கான வர்த்தக நாமம், மற்றும் இளைஞர்களின் விருப்பத்திற்குரிய வர்த்தக நாமமாக தொடர்ந்து இரண்டாவது வருடமாகவும் ஆண்டின் சிறந்த தொலைத்தொடர்பு வர்த்தக நாமமாக தொடர்ந்து 10வது ஆண்டாகவும் இலங்கையர்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளமையினையிட்டு நாங்கள் நன்றியுள்ளவர்களாகவும் பணிவானவர்களாகவும் திகழ்வோம். புதுமையான தொழில்நுட்பங்கள் மற்றும் வேறுபட்ட சேவைகளின் மூலம் வாடிக்கையாளர் அனுபவங்களை வழங்குவதற்கான எங்கள் நீண்டகால அர்ப்பணிப்பு, தொற்றுநோயால் முன்வைக்கப்பட்ட சவால்களுக்கு மத்தியிலும், அனைத்தையும் உள்ளடக்கிய புதுமை மற்றும் நிலையான வளர்ச்சியை வழங்குவதில் நம்முடைய அசைக்க முடியாத முயற்சிகளை இணைக்கிறது. இலங்கையின் இதயங்களையும் மனதையும் உண்மையிலேயே குறிப்பிடத்தக்க வழிகளில் மாற்றியமைத்த ஒரு வர்த்தக நாமமாக நாங்கள் அங்கீகரிக்கப்பட்டதில் பெருமைப்படுகிறோம். மேலும் இலங்கையர் வாழ்வுகளையும் நிறுவனங்களையும் அர்த்தமுள்ள மற்றும் புரட்சிகர கண்டுபிடிப்புகளின் மூலம் வளப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் என்ற எங்கள் பார்வையை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.”
இந்த ஆண்டு ‘ஸ்லிம் - மக்கள் விருதுகளின்’தொடர்ச்சியான பதினைந்தாவது ஆண்டாகும். இலங்கையில் சந்தைப்படுத்துவதற்கான தேசிய அமைப்பான இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனம், இது இலங்கையில் சந்தைப்படுத்துவதற்கான தேசிய அமைப்பான இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றான நீல்சன் கம்பெனி லங்காவுடன் இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளது. கட்டமைக்கப்பட்ட கேள்வித்தாளைப் பயன்படுத்தி ஐந்து மாத காலப்பகுதியில், 15 முதல் 60 வயதுக்குட்பட்ட ஆண்களையும் பெண்களையும் உள்ளடக்கி நாடு தழுவிய அளவிலான நேருக்கு நேர் ஆராய்ச்சி மூலம் நீல்சன் நிறுவனம் இலங்கையில் நடாத்திய பல்வேறு பிரிவுகளுக்கான விருதுகள் மட்டுமே மக்கள் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இந்த விருதுகள் இலங்கை மக்களின் மனதை தனிப்பட்ட முறையில் ஈர்க்கும் வர்த்தக நாமம் மற்றும் ஆளுமைகளை அங்கீகரிக்கின்றன.
5 minute ago
15 minute ago
32 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
15 minute ago
32 minute ago
38 minute ago