Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
S.Sekar / 2021 மே 05 , மு.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
Trina Solar, இலங்கையில் Trina Tracker மற்றும் அதன் 670W+ Vertex module ஆகிய அதி சக்தி வாய்ந்த மாதிரிகளை அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
இலங்கையில் குறைந்த செலவில் இயங்கும் மின்பிறப்பாக்கல் ஆலைகளில் பெரும்பாலானவற்றில் புகழ்பெற்ற மாதிரியாக 670W Vertex module திகழும் என Trina Solar கருதுவதாக அறிவித்துள்ளது.
இந்த அறிமுகம் தொடர்பில் Trina Solar இன் தெற்காசிய பிராந்திய செயற்பாடுகளுக்கான பணிப்பாளர் கௌரவ் மதூர் கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையில் 670W+ Vertex module அறிமுகம் செய்யப்பட்டுள்ளமையானது, 2050 ஆம் ஆண்டளவில் முழுமையாக புதுப்பிக்கத்தக்க வலுவில் இலங்கையை இயங்கச் செய்வது எனும் இலக்கின் பிரகாரமும், காபன் நடுநிலையான இலக்கை நிவர்த்தி செய்வதாக அமைந்துள்ளது.” என்றார்.
210mm விட்டத்தைக் கொண்ட பாரியளவிலான சூரியக் கலன்களை நிறுவி, உயர் வலு அடர்த்தியை எய்தும் வகையில் Vertex modules அமைந்துள்ளன. அதாவது, ஒவ்வொரு படலுக்கும் மிகக் குறைந்தளவு சூரியக் கலன்கள் அவசியமானவையாக அமைந்துள்ளன. பழைய தலைமுறை மாதிரிகள் சிறிய அளவிலான சூரிய கலன்களை பயன்படுத்துவதுடன், உயர் வலுவை எய்துவதற்கு அதிகளவு கலன்களின் தேவையைக் கொண்டுள்ளன.
மதூர் மேலும் குறிப்பிடுகையில், “210mm விட்டத்தைக் கொண்ட சூரிய கலன்களின் பயன்பாடு என்பது புதிய சர்வதேச துறைசார் நியமமாக அமைந்துள்ளது.” என்றார்.
Multi-busbar technology; ஒளி கையகப்படுத்தலை குறைப்பது; high density encapsulation technology, ஒவ்வொரு கலத்துக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பது போன்ற இதர முன்னணி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உயர் வலு அடர்த்தி மற்றும் வினைத்திறனை Vertex எய்துகின்றது. மேலும் non-destructive நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கலன்கள் பிரிக்கப்பட்டுள்ளன. குறைந்த வெப்பநிலையில் Non-destructive cutting மேற்கொள்ளப்படுகின்றது. இதனால், மிருதுவான வெட்டல் ஏற்படுத்தப்படுகின்றது.
இலங்கையில் 670W+ Vertex module அறிமுகத்துடன், Trina Solar இனால் வெபிநார் ஒன்றும் (ஏப்ரல் 28) உள்நாட்டு பங்காளர்களுக்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் போது இலங்கையின் புதுப்பிக்கத்தக்க வலு சந்தையின் போக்கு மற்றும் Vertex தொழில்நுட்பம் தொடர்பில் கலந்துரையாடப்படும்.
மதூர் தொடர்ந்து குறிப்பிடுகையில், “இலங்கையின் சூரிய வலுத் துறையில் இடம்பெறும் அபிவிருத்திகள் காரணமாக உயர் திறன் படைத்த தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்தப்படுவதுடன், முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்குவதால் தேசிய அபிவிருத்தி இலக்குகளுக்கமைய அமைந்துள்ளது.” என்றார்.
“இலங்கையைப் பொறுத்தமட்டில் சூரிய வலு என்பது சரியான பொருத்தமாக அமைந்துள்ளது. ஏனெனில் பாரிஸ் உடன்படிக்கையின் பிரகாரம் துரிதமாகவும் வேகமாகவும் நிறுவி, அதன் அர்ப்பணிப்புகளை எய்தக்கூடியதாக இருக்கும் என்பதுடன், 2050 ஆம் ஆண்டளவில் காபன் நடுநிலையை எய்தக்கூடிதயாகவும் இருக்கும்.” என்றார்.
2016 ஆம் ஆண்டில் காணப்பட்ட 14,000GWh இலங்கை மின்சார பிறப்பாக்கல் என்பது 2050 ஆம் ஆண்டளவில் ஐந்து மடங்கினால் அதிகரித்து 70,000GWh ஆக பதிவாகும் என ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) எதிர்வுகூறியுள்ளது. இலங்கை 16GW சூரிய வலுவை நிறுவக்கூடிய ஆற்றலைக் கொண்டிருப்பதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.
11 minute ago
21 minute ago
37 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
21 minute ago
37 minute ago
48 minute ago