2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

இலங்கையில் realme C20 அறிமுகம்

S.Sekar   / 2021 பெப்ரவரி 03 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

realme, தனது புதிய realme C20 தொலைபேசித் தெரிவை இலங்கையில் அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. C தெரிவுகளில் புதிய உள்ளடக்கமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த தொலைபேசி, 5000mAh பற்றரி, 6.5-inch திரை மற்றும் சக்தி வாய்ந்த MediaTek Helio G35 Octa-core processor ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஆரம்ப நிலை தொலைபேசிகளில் சிறந்த பெறுமதியைக் கொண்ட தெரிவாக இது அமைந்துள்ளது.

இலங்கையில் realme அறிமுகம் செய்யப்பட்டது முதல், தனது C தெரிவுகளை விரிவுபடுத்தியுள்ளதுடன், சகாயமான தொலைபேசிகளை அறிமுகம் செய்து, இளைஞர்களுக்காக உயர் திறன் படைத்த பற்றரிகளையும் சிறந்த display களையும் உள்ளடக்கியுள்ளது.

realme ஸ்ரீ லங்கா வர்த்தக நாம முகாமையாளர் ரனுர கடுவெல கருத்துத் தெரிவிக்கையில், 'சகாயமான விலையில் ஒப்பற்ற உள்ளம்சங்களுடன் realme C20 அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், அனைத்து இலங்கையர்களுக்கும் திறன்பேசியினால் வழங்கப்படும் நவீன தொழில்நுட்பத்தை அணுகக்கூடியதாக இருக்கும். வாழ்க்கை முறைகளுக்கு இந்த கவர்ச்சிகரமான உள்ளம்சங்கள் இளம் தலைமுறையினருக்கு சிறந்த தீர்வாக அமைந்திருப்பதுடன், ‘dare to leap’ (துணிவோடு பாய்ந்து செல்) எனும் வர்த்தக நாம தொனிப்பொருளுக்கமைவானதாகவும் உள்ளது. இளைஞர்களை புதிய வாய்ப்புகளை நாடிச் செல்வதற்கு உகந்த வகையில் realme C20 அமைந்துள்ளது.' என்றார்.

realme C20 இல் பயன்படுத்தப்படும் 5000mAh பற்றரி, 43 தினங்களுக்கு நிலைத்திருக்கக்கூடியது. துறையில் காணப்படும் உயர்ந்த காலப்பகுதியை இது கொண்டுள்ளது. ஆரம்ப நிலை திறன்பேசிகளில் பற்றரி அரசன் எனவும் அழைக்கப்படும் realme C20 உடன், இளைஞர்களுக்கு தமது நண்பர்களுடன் செய்யும் போது, வீடியோக்களை பார்க்கும் போது அல்லது கேம்களை விளையாடும் போது பற்றரி தீர்ந்துவிடும் என்ற கவலை கொள்ள வேண்டியதில்லை.

realme C20இன் பாரிய 6.5-inch திரையினூடாக ஒப்பற்ற அனுபவம் வழங்கப்படுகின்றது. தொற்றுப் பரவல் காணப்படும் சூழலில், கற்றலில் ஈடுபடும் எவருக்கும் அல்லது வீட்டிலிருந்து பணியாற்றும் எவருக்கும் மிகவும் சிறந்த காட்சியமைப்பை வழங்குவதாக அமைந்துள்ளது. சிறிய teardrop வடிவமைப்பினூடாக, display திரையின் கவனக்குலைவை ஏற்படுத்தும் அம்சங்களைக் குறைப்பதுடன், 89.5% screen-to-body ratio ஐ வழங்குவதாக அமைந்துள்ளது.

Andriod 10ஐ அடிப்படையாகக் கொண்ட realme UI இல் திறன்பேசியின் operating system இயங்குவதுடன், 32GB உள்ளக தரவு சேமிப்பு வசதியையும் கொண்டுள்ளது. இளைஞர்களை கவரும் வகையிலமைந்த அழகிய தோற்றத்துடன் வரும் realme C20, கறுப்பு மற்றும் நீல வர்ணங்களில் காணப்படுவதுடன், தர நியமங்களை உறுதி செய்வதற்காக realme ஆய்வுகூடங்களில் கடுமையான தரப்பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றது. corning Gorilla Glass 3 உடனான பாதுகாப்பு Splash-resistant அலங்காரத்தையும் கொண்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .